"கும்ரான்இனத்தவர்கள்"பாகம் 2


எசனேயரின்
குணநலன்கள்:

இவர்கள் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள். அவர்களுடைய சொத்துக்களையும் பொதுவாய் வைத்து அனுபவித்தபடியால் அவர்கள் நடுவே, ஏழை பணக்காரன் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் குளித்தபின்தான் உணவு உண்பார்கள். வேலை செய்யாத நேரத்தில் வெண்ணங்கி
தரித்திருப்பார்கள். கோபப்பட மாட்டார்கள். சுபாவத்தில் அமைதியாய் இருப்பவர்கள். ஆணையிட மாட்டர்கள். ஓய்வு நாளை ஆசரித்தார்கள். சொந்த சரீரம், வாழும் இடம், துணிகளை சுத்தமாக வைத்திருந்தார்கள். இவர்களுடைய சட்டங்களுக்கு கீழ்படியாதவர்களை சமுதாயத்தை விட்டு தள்ளப்பட்டார்கள். இவர்கள் வேதவசனத்தில் உள்ளபடி கிலவுதிராயன் காலத்தில் யூதர்கள் ரோமாபுரியை விட்டு துரத்தப்பட்டனர். எனவே, யூதர்கள் ரோமாபுரிக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.

கும்ரான் இனத்தவர்கள் தேவாலயம் தீட்டுப்பட்டபடியினால் தங்களுடைய பக்தியை கருதி, தங்களுடன் சுருள்களை எடுத்தக் கொண்டு ஓடினார்கள். இந்த சவக்கடல் சுருள்கள் புதிய ஏற்பாடு எழுத மிக முக்கியமானதாக அமைந்தது. இந்த 'எசன்ஸ்' ஏசாயா: 40:3 - ன் படி விலகிக் கொண்டார்கள். தேவாலயமும் சீர்கெட்டுப் போயிற்று. ஆகவே, பாலைவனத்திற்கு ஓடி விட்டனர்.

இந்தக் கும்ரான் இனத்தவர்கள் இயேசு வாழ்ந்த காலத்திலும், ரோமர் எருசலேமை தாக்குகிற காலத்திலும் கி.பி.66 முதல் கி.பி.70 வரை இந்த இனம் மிகவும் செயல் திறன் உடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்களுடைய தலைவர்"நீதியின் போதகர்"என
அழைக்கப்பட்டார்.

மேலும் இந்த இனமானது உயர் மட்ட அதிகாரமான இனம். 3 ஆசாரியர்களையும், 12 மற்ற மக்களையும் கொண்ட ஒரு குழுவாக இயங்கியது. ஆசாரியர்களும், லேவியர்களும், மூப்பர்களும் உயர்மட்ட அதிகாரிகளாக இருந்தனர். முக்கியமான தீர்மானங்கள்'சீட்டு எடுத்தல்'மூலம் முடிவெடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணம் கடைபிடிக்காதவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

யோவான்ஸ்நானகனுக்கும் இந்த கும்ரான்
இனத்தவருக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என எண்ணுகின்றனர். காரணம்? இவனுடைய நடை, உடை, பாவனையைக் கொண்டு அவனது தொடர்பைச் சொல்கின்றனர். மேலும் கும்ரான்
இனத்தவர்களைப்போல இவனும் வனாந்திர வாசி.

கும்ரான் இனத்தவர்களாகிய எசனீயர் எருசலேமில் இருந்ததற்கான அறிகுறியாக பட்டணத்தின் தென் வாசல்"எசனீயர் வாசல்"என்று அறியப்படுகிறது.

இந்தக் கும்ரான் இனத்தவருக்கும், ஆரம்ப கால சபைக்கும்,"தாங்கள் கடைசிக் காலத்தில் வந்திருக்கிறோம்"
என்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது. கும்ரான் இனத்தவர்கள் ஒரு புதிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அக் காலத்தில் இரண்டாவது மோசே வருவாரென்றும், சாதோக் வழிவரும் ஒரு ஆசாரியன் வர வேண்டும் என்றும், தாவீது வழிவரும் ஒரு மேசியா வர வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்.

எசனேயர் மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தினர். தாங்களே புதிய உடன்படிக்கையின் மக்கள் என்று நம்பினர். சொத்துக்களைப் பொதுவாக வைத்து அனுபவித்தனர். இவர்கள் எருசலேம் தேவாலயத்திற்கு காணிக்கை அனுப்பி வந்தனர். அன்றாட வழிபாடு, வேத ஆராய்ச்சி யாவும் நடந்து வந்தன. இந்தக் கும்ரான் இனத்தவர்கள் தங்களை"ஒளியின் புத்திரர்கள்"என்றும்; மற்றவர்களை"இருளின் புத்திரர்கள்"என்றும் வர்ணித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.