* ஆணியே வேண்டாம் :- *
ஒரு ஊரில் ஒரு முன்கோபகார சிறுவன் இருந்தான்.அவனது தகப்பனார் அவனுக்கு அணிகள் நிறைந்த பை ஒன்றைக்கொடுத்து ,
ஒவ்வொருமுறை அவன் தன்பொறுமையை இழந்து கோபப்படும்போது,அவர்கள் வீட்டுக்குப் பின் இருந்த பலகையில் ஒரு ஆணியை அடிக்கும்படி ஆலோசனை சொன்னார்.
முதல் நாள் அவன் 28 ஆணியை அடித்திருந்தான்.
சில நாட்கள் சென்றன.தன் கோபத்தை அடக்க அவன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் தினசரி அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்ட வந்தது. அணியை எடுத்து வீட்டின் பின்புறம் போய் அடிப்பதை விட கோபத்தை அடக்குவது அவனுக்கு எளிதாய் இருந்தது.தனது முன்னேற்றம் பற்றி அவன் தன் தகப்பனிடம் பெருமையாக
சொல்லிக்கொண்டான்.
கடைசியாக அவன் கோபமே படாத நாள் ஒன்று வந்தது "நீ கோபப்படாத நாளில் ஒரு நாளுக்கு ஒரு ஆணியை அந்த பலகையில் இருந்து பிடுங்கி விடலாம்" என்று ஆலோசனை தந்தார் அவன் அப்பா.நாட்கள் மறைந்தன அவன் மனதிலிருந்த அணிகளை போல,அந்த பலகையில் இருந்த ஆணிகள் எல்லாவுமே மறைந்து போனதை தன் தகப்பனிடம் அறிவித்தான் அந்த சிறுவன்,அவன் தகப்பன் அவன் கைகளை பிடித்து வெளியின் அருகே அழைத்து சென்றார்.
"நல்லது. நீ நல்ல காரியம் செய்திருக்கிறாய் மகனே,ஆனால் அந்த பலகையில் இருக்கிற ஓட்டையை பார்த்தாயா?பலகை எப்பொழுதும் பழைய நிலைமைக்கு வரவே முடியாது.இப்படித்தான் நீயும் கோபத்தில் வார்த்தைகளை கொட்டும் போது அந்த வார்த்தைகளும் பிறர் மனங்களில் வடுக்களை உண்டாக்கிவிடும்.ஒரு மனிதனை நீ குத்தி விட்டு கத்தியை வெளியே எடுத்து விடலாம்,நீ எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கலாம் ஆனால் குத்தின அந்த காயம் அப்படியேதான் இருக்கும் என்றார்.
இப்பொழுது அந்த சிறுவன் நன்றாக புரிந்துகொண்டான்,இனிமேல் அவனுக்கு ஆணிகளோ,பாடங்களோ அவனுக்கு தேவையில்லை.
ஆம்! இந்த கட்டுரையை எதற்காக எழுதினேன் என்று,இதை படித்து கொண்டிருக்கும் நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள் :-) உங்களுக்கும் ஆணிகளோ,
பாடங்களோ வேறு எந்த விளக்கங்களோ தேவை இல்லை என்று நினைக்கிறேன்.