நெகேமியாவிளக்கவுரை 2:8-10


வசனம் 2:8

தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன். என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

நெகேமியா தேவலாயத்திற்கு இருக்கிற அரணின் கதவுகளின் வேலைக்கும் நகர அலங்கத்தின் வேலைக்கும் தான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் என்ன தேவை என்பதை முன்கூட்டியே கணித்துச் செயல்ப்பட்டான். அந்த வேலைகளுக்கு அதிகமான மரங்கள் தேவைப்படும் என்று அவன் அறிந்திருந்தான். அம்மரங்கள் எங்கு கிடைக்கும் என்றும் நன்கு அறிந்திருந்தான். அது இராஜாவின்
வனத்துக்காவலாளன் அவன் அப் பணிக்குத் தலையானவன், தேவன் தமது பணிகளுக்கு தலையாய பணியாளர்களையே பலமுறை பயன்படுத்த வல்லவராய் இருக்கிறார். எரேமியா கிணற்றுச்சிறையில் அடைக்கப்பட்டுப்போனபோது எபெத்மெலேக் என்னும் பிரதானி அவனுக்காக நேரே இராஜாவினிடத்தில் சென்று அவனைச் சிறையிலடைத்த அதே இராஜாவினிடத்தில் பேசி அவனை விடுவிக்கச் செய்தான் என்று வேதம் கூறுகிறது (எரேமி.86:8-10).

நெகேமியா கேட்டதனைத்தையும் பெர்சியாவின் இராஜா அவனுக்குக் கொடுத்தான். நெகேமியாவும் இங்கு எஸ்றாவைப்போல் செயல்ப்பட்டதைக் காண்கிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறான். என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால் இராஜா இவைகளை எனக்குக் கட்டளையிட்டார் என்று நெகேமியா கூறுகிறான். கர்த்தரின் உதவியில்லாமல் எந்த ஒரு திட்டமும் நடைபெறாது என்பது நெகேமியாவுக்குத் தெரியும்.

வசனம் 2:9

அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். ராஜா என்னோடேகூட இராணுவச்
சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.

நெகேமியா உடனே புறப்பட ஆயத்தமானான். வீட்டுக்குச் சென்று புறப்படுவதற்காக ஆயத்தம் செய்தான் என்று நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. வேதத்தில் கர்த்தர் தமது வாசலைத் திறக்கும்போதே உள்ளே செல்ல அவன் மிகவும் ஆயத்தமாக இருந்தான்.

இராஜாவோ அதிலும் அதிகம் செய்தான். நெகேமியாவுடன் ராணுவச் சோர்வைக்காரரையும் குதிரைவீரரையும் அனுப்பியிருந்தான். இதுபோலவே பவுலுக்கும் நடந்தது என்று வேதம் கூறுகிறது. பவுல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கர்த்தர் பவுலின் அருகே நின்று, பவுலே திடன்கொள் என்றார். அடுத்தநாள் இரவு பவுல் சிறைச்சாலையினின்று வெளியே விடுவிக்கப்பட்டு வேறு நகரத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டான். அதுமட்டுமன்றி அவனுடன் செல்ல இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும் இருநூறு ஈட்டிக்காரரையும் ஆயத்தம்பண்ணி அனுப்பினான். கர்த்தர் தமது பணிக்காக எந்த ஒரு சேனையைக்கூட பணியவைக்க முடியும் என்று அறிவோமாக (அப்.23:23-24).

வசனம் 2:10

இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.

நெகேமியா,
நெடுந்தொலைவுப் பயணம் செய்து, அதற்குப்பின் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற தேசாதிபதிகளிடத்திற்கு வந்த இராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தான். நெகேமியாவும் அவனுடன் வந்த இராணுவச் சேர்வைக்காரரும், குதிரைவீரரும் எருசலேமில் காணப்பட்டபோது அங்கு ஒரு தீவிர நிலை எற்பட்டது. ஓர் ஆளையும், அவனைக் காக்க அவனோடு வந்த சேனையையும் நீ பார்த்தாயா என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர்.

இந்த நெகேமியாவைப்பற்றிய செய்தி வெகுதுரிதமாக நரமெங்கும் பரவியது. நெகேமியா வந்து, யாதொரு காரியமும் செய்யத் துவங்கு முன்னரே பல எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. இஸ்ரவேலர்களுக்கு உதவிசெய்ய ஒருவன் வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடனே, சன்பல்லாத்து என்பவனும் தொபியா என்பவனுமான இருவர் தீவிரமடைந்தனர். இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்ற செய்தி அவர்களை மிகவும் அலைக்கழித்தது. அவர்கள் இருவரும் யூதர்களின், இஸ்ரவேலரின் விரோதிகளுக்கு நண்பர்கள் என்பவர்களாதலின், யூதர்களுக்கு உதவிசெய்ய ஒருவன் வந்துள்ளான் என்ற செய்தியே அவர்களை நிலைகுலையச்செய்தது. அதுமுதற்கொண்டே சன்பல்லாத்தும், தொபியாவும் நெகேமியாவிற்கு அடிக்கடி தொல்லைகள் கொடுக்கத்தலைப்பட்டனர்.

இன்றைக்கு இந்த நிலைதான் நிலவுகிறது. உலக அரங்கில் யூதர்களுக்குப் பற்பல விரோதிகள் எழும்பியுள்ளனர். அவர்களைப் பலவிதங்களிலும் விரோதிகள் நெருக்கி வருகிறார்கள். இங்கே சன்பல்லாத்தும், தொபியாவும் நெகேமியாவினால் நேரடியாக எந்தவித தொல்லைக்கும் ஆளாக்கப்படவில்லை. அவர்களுடைய பதவிகளையோ அல்லது அவர்களுடைய நண்பர்களின் பதவிகளையோ பாதிக்கும் விதத்தில் நெகேமியா யாதும் செய்யவில்லை. ஆனால் ய+தர்களுக்கு உதவி செய்ய வந்துள்ளான் என்ற செய்தியே அவர்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.