ஏழு பண்டிகைகள் அறிமுகம்




லேவியராகமம்: 23:4-43

1. பஸ்கா பண்டிகை
2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை
3. முதற்பலனாகிய கதிர்கட்டு பண்டிகை - முதலாம் மாதம்
4. பெந்தெகொஸ்தே பண்டிகை - மூன்றாம் மாதம்
5. எக்காளப் பண்டிகை
6. பாவ நிவாரணப் பண்டிகை
7. கூடாரப் பண்டிகை - ஏழாம் மாதம்

இந்த ஏழு பண்டிகைகளையும் ஆசரிக்க வேண்டுமென்று இஸ்ரவேலருக்கு தேவன் கட்டளை கொடுத்தார். ஏழு என்பது பரிபூரணத்தைக் (முழுமையை) குறிக்கும்.

இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைகள் அனைத்தும் இந்த ஏழு பண்டிகைகளைச் சுற்றியே இருந்தது.

இதில்பெரிய பண்டிகைகள்:(யாத்திராகமம்: 23:14-17)

1. பஸ்கா பண்டிகை
2. பெந்தெகொஸ்தே பண்டிகை
3. கூடாரப் பண்டிகை

இந்த மூன்று பண்டிகை தினங்களிலும் சமஸ்த இஸ்ரவேலரின் சகல ஆண் மக்களும், குழந்தைகளும் கர்த்தருக்கு
காணிக்கைகளோடு கூடி வர வேண்டும்.

பண்டிகைகள் சில ஒப்பீடு:

அ)ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பாகங்களும், மூன்று பண்டிகைகளுக்கு அடையாளமாக இருக்கிறது.

1. மகா பரிசுத்த ஸ்தலம் - கூடாரப் பண்டிகை
2. பரிசுத்த ஸ்தலம் - பெந்தேகொஸ்தே பண்டிகை
3. பிரகாரம் - பஸ்கா பண்டிகை

ஆ)பஸ்கா பண்டிகை - நியாயப் பிரமாணம் - இரட்சிப்பு

பெந்தெகொஸ்தே பண்டிகை - சபை - பரிசுத்த ஆவியின் அபிஷேகம்

கூடாரப் பண்டிகை - 1000 வருட அரசாட்சி - கடைசிக் கால எழுப்புதல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.