‘பிறருக்காக மாத்திரமே’ ஆவியின் வரங்களை பயன்படுத்த வேண்டும்! - சகரியா பூணன்

ஆவியின் வரங்களை
பிறருடைய நன்மைகளுக்காகமாத்திரமே கேட்க வேண்டுமல்லாமல், நம்முடைய சொந்த
நன்மைகளுக்காக ஒருபோதும் கேட்கக்கூடாது. இந்த ஒரு தாற்பரியத்தை
பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும், ஆவியின் வரங்களையும் நாடினவர்கள்
கைக்கொண்டிருந்தால் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை எவ்வளவோ
உயர்ந்திருக்கும். அதேபோல், இன்றைய கிறிஸ்தவ உலகில் நடமாடும் போலியான
வரங்களின் நர்த்தனங்களும் குறைந்திருக்கும்!

துரதிருஷ்டவசமாய் இன்று திரளான ஜனங்கள் பரிசுத்தாவியின் வல்லமையை
தங்களுக்கே சொந்தமானஅனுபவங்களை பெறுவதற்கேநாடும்படி
போதிக்கப்படுகிறார்களே
யல்லாமல், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக தாங்கள் இருக்க வேண்டுமே என்பதற்காக அல்ல!!

நம்மை சூழ தேவைமிகு அநேகர் இருக்கிறார்கள். அவர்களின் தேவையை தேவன்
சந்திக்க விரும்புகிறார். அதை நம்மூலமாகவேசெய்திடவும் விரும்புகிறார்.
ஆகவேதான் அவர்களை நம் வாழ்வின் பாதையில் குறுக்கிடும்படி அனுமதிக்கிறார்.
அச்சமயங்களில், அந்த ஜனங்களை விடுவித்து ஆசீர்வதிப்பதற்குத் தேவையான
ஆவியின் வரங்களை நாம் கேட்க வேண்டும் என்றும் விரும்புகிறார்!

ஒருசமயம், பிசாசு பிடித்த தன் பிள்ளையை குணமாக்கும்படி ஒரு மனிதன்
இயேசுவின் சீஷர்களிடத்தில் வந்தான். ஆனால், அவர்களோ அந்த மனிதனுக்கு உதவி
செய்யக்கூடாமல் போய்விட்டது. அந்த மனிதன் இயேசுவிடத்திற்குத் திரும்பி
வந்து, "நான் உம்முடைய சீஷர்களிடத்தில் உதவியை நாடிச் சென்றேன். அவர்களோ
உதவி செய்ய முடியவில்லை" என்றான். இன்றும், இதே வார்த்தைகளைத்தான்
நம்முடைய நண்பர்களும் நமது அயலகாத்தாரும் நம்மைப்பற்றி
ஆண்டவரிடத்தில் கூறுவார்களோ?
நமக்காக மாத்திரமே ஆண்டவருடைய ஆசீர்வாதங்களை நாடினால் நாம் வறண்டு
போய்விடுவோம்! ஆம், தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்கே (உதவி செய்கிறவனுக்கே)
அவர் தண்ணீர் பாய்க்சுகிறார் (உதவி அளிக்கிறார்) நீதிமொழிகள் 1125.
ஒருசமயத்தில், சில சகோதரர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்குத்
தேவையான சில ஞான வார்த்தைகளை நாடி உங்களிடம் வந்தார்கள்!

வேறொரு மனிதன், தன் மனம் முறிந்த சூழ்நிலையில் ஓர் தைரியப்படுத்தும்
வார்த்தையை நாடி உங்களிடம் வந்தார்!

வேறொருவர் தன் கட்டுகளிலிருந்து விடுதலையை நாடி உங்களிடம் வந்தார்!

இதுபோன்ற தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவி செய்வதற்கு தேவையான
வரங்களையே நாம் தேவனிடம் கேட்க வேண்டும்!

மற்றவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு பக்திவிருத்தி தரும் படிக்கே
ஆவியின் ஒவ்வொரு வரங்களும் அருளப்பட்டிருக்கிறது. இயேசு
பரிசுத்தாவியினால் அபிஷேகம் பெற்றதும் ஏற்பட்டவிளைவுகளை
லூக்கா 4:18,19வசனங்கள் கூறுகிறது. அவர், தரித்திரருக்கு சுவிசேஷத்தை
பிரசங்கித்தார்!
சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கினார்! குருடர்களுக்கு பார்வையை தந்தார்!
இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கினார்! கர்த்தருடைய அனுக்கிரக வருஷத்தை
பிரசித்தப்படுத்தினார்!
இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றும் மற்றவர்களுடைய நன்மைக்கானவைகள் மாத்திரமே!
அந்த ஆவியின் வரங்கள் ஆண்டவருடைய வாழ்க்கைக்கென்று எந்த நன்மையையும்
கொண்டுவரவில்லை!!

இன்று நாம் ஆவிக்குரிய வரங்களை சரியான வழியில் தேடுகிறவர்களாக இருந்தால்,
பிறரிடம் நமக்கு கரிசனையும், அவர்களுக்கு உதவி செய்யும்படியான நம் சொந்த
இயலாமையின் உணர்வும் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்.
இதுபோன்றவர்களிடத்தில் மாத்திரமே ஆவியின் வரங்களின் மெய்யான கிரியை
வெளிப்படுகிறது!
மற்றவை 'சுயலாப' போலி என்றே கூற வேண்டும்!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.