உபவாசம் - அன்றும் இன்றும்

*.பழைய ஏற்பாட்டு காலங்களில் உபவாசமிருந்து தங்களை தாழ்த்தினார்கள்,

*.இக்காலங்களில் உபவாசமிருந்து தங்களை உயர்த்துகிறார்கள்,

I இராஜாக்கள் 21:27ஆகாப் ... உபவாசம்பண்ணி,.. தாழ்மையாய்
நடந்துகொண்டான்.

*.அக்காலத்தில் உபவாசம், "நாங்கள் தகுதியற்றவர்கள்" என்பதை
வெளிப்படுத்துவதாக இருந்தது.

*.இக்காலத்தில் உபவாசம், "நாங்கள் தகுதியானவர்கள்" என்பதை
வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

I சாமுவேல் 7:6 அவர்கள் அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப்
பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்

*.பழைய எற்பாட்டு காலத்தில் இரட்டு உடுத்தி புழுதியிலும் சாம்பலிலும்
கிடந்து உபவாசித்தார்கள்

*.இக்காலங்களில் உபவாசக் கூட்டங்கள் நடத்தவென்றே கோபுரங்களையும்
மாளிகைகளையும் கட்டுகிறார்கள்.

நெகேமியா 9:1
இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப்
போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.

ஏசாயா 58:4
நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே
கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

*.அக்காலங்களில் உபவாசமிருந்து ஜெபித்தார்கள்.

*.இக்காலங்களில் உபவாசத்துடன் வேலைக்குப் போகிறார்கள்.

தானியேல் 9:3
நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை
ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி...

ஏசாயா 58:3
இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள்
வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

*.அக்காலத்தில் உபவாசத்தில் அழுது புலம்பினார்கள்

*.இக்காலங்களில் ஆடலும் பாடலுமாக களைகட்டுகிறது

II சாமுவேல் 1:12
புலம்பி அழுது
சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

இதை வாசிக்கும் எனதருமை நண்பரே உமது உபவாசம் எப்படிப்பட்டது? பரிசேயரைப்
போன்று புகழ்ச்சியை பெறவும் , நற் பெயரடையவும் உபவாசிப்பதை தேவன்
வெறுக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.