இயேசு சிலுவையில் சாதித்த சில காரியங்கள்

1. நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி
மீட்டுக்கொண்டார்.

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி,
கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை
நீங்கலாக்கி
மீட்டுக்கொண்டார்.(கலாத்தியர் 3:13)

2.நம்மை மீட்க

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான
நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும்
மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின்
விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
(I பேதுரு1:18,19)

3.நம்முடைய பாவங்களை சுமந்தார்

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப்
பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச்
சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
(I பேதுரு 2:24)

4.பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கினார்

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,
பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு
ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.(கொலோசெயர் 1: 20)

5.அவர் நம் மேல் வைத்த அன்பை வெளிபடுத்தினார்

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான
அன்பு ஒருவரிடத்திலுமில்லை
(யோவான்15:13)

6.யூதரையும்,
புறஜாதியாரையும் ஒரே சரிரமாக இணைத்தார்

பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக
தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
(எபேசியர் 2:16)

இன்னும் அநேக ஆசிவாதங்கள் நமக்கு இயேசு சிலுவையில் மரித்ததினால்
கிடைத்தது என்பதை வேதத்தை சற்று தியானித்தால் அறியலாம் .....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.