இன்று ஏன் நமது இந்திய சபைகளில் தீர்க்கதரிசிகள் அரிதாகிப் போனார்கள்?
சுமார் நூறு கோடி ஜனங்கள் கொண்ட நம் இந்திய தேசத்திற்கு தீர்க்கதரிசிகளை
தேவன் அனுப்பாமல் அக்கறையற்று இருப்பது எப்படி சாத்தியமாகும்?
ஆம், ஆண்டவர் நம் இந்திய தேசத்தின் மீது நிச்சயமாய் அக்கறை
கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், நம் தேசத்திலேயே ஏராளமான
தீர்க்கதரிசிகளையும் அனுப்பியிருக்கிறார்! ஆனால், இவர்களில் பெரும்பாலோர்
தங்கள் தீர்க்கதரிசன வரத்தை உலகப்பொருளுக்கு விற்றுவிட்டு
பிலேயாம்மற்றும்கேயாசி
சென்ற வழிக்கு இவர்களும் சென்று விட்டார்கள்! இதன் விளைவாகவே இன்று
தீர்க்கதரிசிகளை நம் தேசத்தில் காண்பது அரிதாகிவிட்டது!!
நம் இந்திய தேசத்தில் உள்ள சபைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கக்
கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு,
கிறிஸ்தவ ஊழியங்களுக்காக வரும் எல்லா அயல் நாட்டுப் பணத்தையும்,
ஒருநாளில் தேவன் நிறுத்திவிடக்கூடும்! இச்செயலை ஆண்டவர் செய்திடும்போது,
யாரெல்லாம் 'கூலிக்காரர்கள்' என்பது
வெளியரங்கமாகிவிடும்!
இத்தருணங்களில் தங்கள் ஊழியங்களை விட்டு இவர்கள் ஓடிப்போவார்கள்.
ஒருவேளை, இந்தக் கூலிக்காரர்கள் ஓடிப்போன பிறகுதான் உண்மையான
தீர்க்கதரிசிகள் நம் தேசத்தில் எழும்பக்கூடும். . . அவர்கள் மூலமே
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சபை கட்டப்பட்டு கர்த்தருடைய நாமம் நம்
தேசத்தில் மகிமைப்படவும் முடியும்!
முழுநேரமாய் தன்னை சேவிக்கும்படி மெய்யாகவே தேவன் உங்களை
அழைத்திருந்தால், ஒருபோதும் மனுஷர்களுடைய ஊழியனாய் மாறிவிடாமல் தேவனுடைய
ஊழியனாய் நிலைத்திருப்பற்கு உறுதியான தீர்மானம் பூண்டுவிடுங்கள்!
பணம் படைத்தவர்கள் தனிப்பட்ட விதத்தில் உங்களுக்கு கொடுக்க
ஆரம்பிக்கும்போது, அவர்களை மனம் புண்படுத்தும் யாதொரு சத்தியத்தையும்
கூறமுடியாதபடி "தேவனுடைய செய்தியை" மிக எளிதில்
ஒத்தவேஷத்திற்குள் கொண்டுவந்துவிட முடியும் என்ற எச்சரிக்கையை மனதில் கொள்ளுங்கள்.
நாமோ
1கொரிந்தியர்
7:21,23 வசனங்கள் கூறுகிறபடி "கிரயத்திற்கு கொள்ளப்பட்டவர்கள்!" ஆகவே
நாம் ஒருக்காலும் மனுஷர்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது! இன்று அனேகம்
விசுவாசிகள்கூட, தாங்கள் தரும் அன்பளிப்புகளைக் கொண்டு நம்மை அவர்களுக்கு
அடிமையாக்கிட முயற்சிக்கிறார்கள்! நீங்களோ இந்த விஷயத்தில் மிகுந்த கவனம்
கொண்டவர்களாய் இருந்துவிடுங்கள்!!