"கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" என்றே லூக்கா 6:38
கூறுகிறது. இருப்பினும், "கொடுத்ததை திரும்ப பெறுவோம் என்ற
நம்பிக்கையுடன் கொடுத்தால்" நீங்கள் நிச்சயமாய் ஏமாந்து போவீர்கள்!
(வசனம் 34).
ஏனென்றால் நாம் கொடுத்த எல்லா சமயங்களிலும் "நம்முடைய நோக்கத்தை" தேவன்
பார்க்கிறபடியால். . . அவரிடமிருந்து நீங்கள் எதையும் பெற்றுக்கொள்ள
முடியாத நிலை ஏற்பட்டுவிடும்!
யாரெல்லாம் மனப்பூர்வமான மகிழ்ச்சியுடனும், திரும்பப்பெறுவோம் என்கிற
எதிர்பார்ப்புமில்லாமல் கொடுக்கிறார்களோ அவர்களே தேவனுடைய சிறந்த பங்கை
தங்கள் வாழ்வில் பெறுவார்கள். ஒருசமயம் ஒரு சகோதரனைக் குறித்து
கேள்விப்பட்டேன். அவர் அதிகம்
சம்பாதிக்காவிட்டாலும், தன் வீட்டிலுள்ள தேவைகளுக்கு ஒன்றிலும்
குறைவுபடாமல் யாருக்கும் கடன்படாமல் வாழ்ந்து வந்தார். "உங்கள் செழித்த
வாழ்விற்கு ரகசியம் என்ன?" என்று ஒருவர் அவரிடம் கேட்ட போது, "தேவன்
எனக்குத் தருவதிலிருந்து ஒரு பெரிய கரண்டியைக் கொண்டு அவருக்கு நான்
திரும்ப அள்ளிக் கொடுக்கிறேன்! அவரும் திரும்ப எனக்கு அள்ளிக்
கொடுக்கிறார். . .
இச்சமயத்தில் நான் கண்டு பிடித்தது என்னவென்றால்,
தேவனுடைய கரண்டி பெரிதாக இருந்தது என்பது தான்!!" என்றார்.
ஆம், நாம் தேவனுக்கு கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாகவே நாம் எப்போதும்
பெற்றுக்கொள்கிறோம். இதை
2கொரிந்தியர் 9:6
"பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்" என்றே நேர்த்தியாய் கூறுகிறது.
நான் தசமபாகத்திற்கு எதிராகப் பிரசங்கிப்பவன் என்ற உண்மை எல்லோருக்கும்
தெரிந்ததாகும். ஆனால் ஜனங்கள் இன்று வரை உணராதிருக்கும் உண்மை யாதெனில்,
தசமபாகத்தைவிட அதிக கடின பகுதியான
"உங்கள் நூறு சதவீதத்தையும் கர்த்தருக்கு மகிழ்ச்சியுடன் கொடுங்கள்!"என்ற
சத்தியத்தை நான் பிரசங்கிப்பதை உணராதவர்களாகவே இருக்கிறார்கள்.
இதே சத்தியத்தைத்தான் இயேசுவும் பிரசங்கித்தார்! நியாயப்பிரமாணத்திற்கு
கீழ்ப்பட்டிருந்த
பரிசேயர்களிடம் "தேவனுக்குரிய தசமபாகத்தை நீங்கள் கொடுங்கள்"
(மத் 23:23) என்றே கூறினார்.
ஆனால், பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு புதிய உடன்படிக்கையின் ஆளுகைக்குள்
வரப்போகும் தன் சீஷர்களிடமோ"
உங்களுக்குண்டான யாவையும்
கொடுத்துவிடுங்கள்"
(லூக்கா 14:33) என்றே இயேசு கூறினார்.
இயேசு வெளிப்படுத்திய இந்த சத்தியத்தையே நானும் கைக்கொண்டு பிரசங்கித்திட
கடந்த 40 வருடங்களாய் பிரயாசப்படுகிறேன்!!
நாம் தேவனை
கனம்பண்ணினால், அவர் நம்மை நிச்சயம் கனம் பண்ணுவார். நாம் தேவனுடைய
இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடினால், நம் பூமிக்குரிய
வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் அவர் நமக்குத் தருவார் (மத்தேயு 6:33).
நம் பூமிக்குரிய தகப்பன்மார்களைக் காட்டிலும் தேவன் ஞானமுள்ளவரானபடியால், "நாம்
விரும்புகிறதையெல்லாம் (WANT)" நமக்குத் தருவதற்கு அவர் மதியீனராயிருக்க
மாட்டார். ஆகிலும், "நமக்குத் தேவையான (NEED) அனைத்தையும்" நமக்கு
கொடுப்பதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். "நம்முடைய தேவைக்கும்"
"நம்முடைய விருப்பத்திற்கும்" இடையில் ஏராளமான வித்தியாசம் உள்ளது!
பிலிப்பியர் 4:19கூறும் வாக்குத்தத்தம் "தேவன் என்னுடைய
குறைவையெல்லாம் (தேவையெல்லாம்) நிறைவாக்குவார்!" என்றே விளம்புகிறது.