இசுரேலில்அமைந்துள்ள பஹாய் தலைமையகம்
புதுதில்லியில் உள்ள பஹாய் சமய தாமரை வடிவ வழிப்பாட்டுத் தலம்
பகாய் நம்பிக்கை19 ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில்மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி
பகாவுல்லாவால்தொடங்கப்பட்ட சமயமாகும். உலகம் முழுவதும் 200க்குமதிகமான நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பஹாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபிஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான
ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை தான் நிறைவுச் செய்வதாக கருதினார்.
பஹாய் (IPA: [baˈhaːʔiː]) என்பது சமயத்தையோ அல்லது அதனை பின்பற்றுபவர்களையோ குறிக்கும் முகமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. பஹாய் (بهاء) என்பது இறைவனின் ஓளி எனப் பொருள்படும் அரபு மொழிப்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். "பஹாயிசம்" போன்றவை முன்னர் பயன்பட்டாலும் அவை பயன்பாட்டிலிருந்து அறுகிவருகின்றன.
நம்பிக்கைகள்
பஹாய் போதனைகளை மூன்று முக்கிய கருத்துக்களுக்குள் அடக்கலாம் அவையாவன ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமை, மனிதகுலத்தின் ஒற்றுமை என்பனவாகும். [3]பல பஹாய் நம்பிக்கைகள் இவற்றை மையப்படுத்தியே அமைந்துள்ளனவாயினும் இவற்றை மட்டும் கருத்திற் கொள்வது பஹாய் நம்பிக்கைகளை மிகவும் சுருக்கியதாக அமைந்துவிடும்.
தோற்றம்:-
பஹாய் சமயத்தின் நிறுவனர் பஹாவுல்லாஎன்பவராவார். அவர் பாரசீகநாட்டின் தெஹரான்நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமைமற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார்.
பஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைவனின் ஓர் இறைத்தூதர்என்பதை மிகத்தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, ஆற்றிய காரியங்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு ஆபிரகாம், மோசே, ஸோராஸ்டர், புத்தர், இயேசு, முகம்மது நபிஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீக அவதாரங்களின்தொடர்வரிசையில் மிகவும் சமீபமாகத் தொன்றியவர் என பஹாய்கள் கருதுகின்றனர்.
பஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனுக்குலத்திற்கான இறைவனின்விருப்பம் நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களை பிரதிநிதிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனுக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சிநிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறியுள்ளார். உலக புனித சாஸ்திரங்களில்முன்னறிவிக்கப்பட்டுள்ளது
போல், எல்லா மக்களும் ஒரே அமைதியான
ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்,” என அவர் எழுதியுள்ளார்.