நித்திய பாதுகாப்பு வேதாகமப்படியானதுதானா?

மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக அறிந்துகொள்ளும்பொழுது, நித்திய
பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும், தேவனோடு கூடிய ஒர் உறவுக்குள்
கொண்டுவரப் படுகிறார்கள்.

"வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த
மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்"
என்று யூதா 24 அறிவிக்கிறது. கர்த்தரின் வல்லமை விசுவாசியை வழுவாமல்
காக்க முடியும். தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே நம்மை நிறுத்துவது
அவரைப் பொறுத்தது, நம்மைப் பொறுத்ததன்று. நமது நித்திய பாதுகாப்பு நாம்
நம்முடைய இரட்சிப்பை பாதுகாத்துக்கொள்வதல்ல, அது கர்த்தர் நம்மைக்
காப்பதன் விளைவு.

"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும்
கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து
பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த பிதா எல்லாரிலும்
பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள
ஒருவனாலும் கூடாது." (யோவான் 10:28-29) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
உரைக்கிறார்.

இயேசுவும் பிதாவும் தங்களுடைய கரங்களில் நம்மை உறுதியாகப்
பிடித்திருக்கிறார்கள். பிதா, குமாரன் இருவருடைய இறுக்கமான
பிடியிலிருந்து நம்மைப் பிரிப்பவர் யார்?
விசுவாசிகள் "மீட்பின் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டிருக்கிறார்கள்"
என்று எபேசியர் 4:30 கூறுகிறது.

விசுவாசிகளுக்கு நித்திய பாதுகாப்பு இல்லையெனில், முத்திரையிடப்படுவது
மீட்பின் நாளுக்கென்பதாக உண்மையில் அல்ல, வெறும் பாவத்தில் விழும்,
விசுவாசத்தை மறுதலிக்கும், நம்பிக்கை இழக்கும் நாள்வரை என்றுதான் இருக்க
முடியும்.

யாரெல்லாம் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு "நித்திய
ஜீவன் உண்டு" என்பதாக யோவான் 3:15-16 கூறுகிறது. ஒருவருக்கு நித்திய
ஜீவன் வாக்களிக்கப்பட்டு பின்னர் அது எடுக்கப்பட்டுவிடுமெனில் அது
முதலாவது "நித்தியமாக" இருக்கமுடியாது.

நித்திய பாதுகாப்பு உண்மையில்லையெனில், வேதாகமத்தில் நித்திய ஜீவனைக்
குறித்தான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் தவறானதாக இருக்கும்.

நித்திய பாதுகாப்புக்கான மிக வலிமையான வாதம் ரோமர் 8:38-39 ஆகும்,
"மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும்,
வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ளா தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப்
பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

நமது நித்திய பாதுகாப்பு, தம்மாலே மீட்கப்பட்டவர்களுக்கான கர்த்தருடைய
அன்பை ஆதாரமாகக் கொண்டது. நமது நித்திய பாதுகாப்பு, கிறிஸ்துவாலே
சம்பாதிக்கப்பட்டும், பிதாவாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டும், பரிசுத்த
ஆவியினாலே முத்திரையிடப்பட்டுமிருக்கிறது.

முந்தைய பதிவுகளுக்கு
http://tamilbibleqanda.wapka.mobi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.