நம்முடைய வாழ்வில் பாவத்தை மேற்கொள்ள ஜெபம் எவ்வளவு முக்கியமானது?
கெத்சமனே தோட்டத்தில், பேதுரு மறுதலிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்
இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் அறிவோம். இயேசு ஜெபிக்கும் போது, பேதுரு
உறங்குகின்றார். இயேசு அவனை எழுப்பி, " நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு
விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ
பலவீனமுள்ளது," என்றார் (மத்தேயு 26:41). பேதுருப் போல நாமும் சரியானதைச்
செய்யவிரும்பினாலும், நமக்கு பலமில்லை.
தேவனுடைய கண்டித்தலைப் பின்பற்றி, நாம் தொடர்ந்து நாடவும், தொடர்ந்து
தட்டவும், தொடர்ந்து கேட்கவும் வேண்டும். அப்போது தேவன் நமக்குத் தேவையான
பலனைத் தந்தருளுவார் .ஜெபம் என்பது மந்திர சூத்திரமில்லை. ஜெபம் என்பது
நம்முடைய குறைவையும், தேவனுடைய அளவில்லாத வல்லமையையும் அறிக்கையிட்டு,
நாம் நினைத்ததையல்ல, நாம் என்ன செய்யவேண்டுமென்று தேவன் நினைக்கின்றாரோ
அதைச் செய்திட, அவரைச் சார்ந்திடுவதாகும் (1 யோவான் 5:14-15).
பாவத்தை மேற்கொள்ளுகின்ற நமது போராட்டத்தில் நான்காவது உதவி திருச்சபை,
மற்ற விசுவாசிகளின் ஐக்கியம். இயேசு தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது,
இரண்டு இரண்டு பேராக அனுப்பினார் (மத்தேயு 10:1). அப்போஸ்தலர் நடபடிகளில்
மிஷனரிகள் தனித்தனியாக செல்லவில்லை, மாறாக இரண்டு அல்லது மேற்பட்டவர்கள்
கொண்ட குழுக்களாக சென்றனர். சபைகூடிவருதலை விட்டுவிடாமல், அத்தருணத்தில்
அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி நாம் ஒருவரையொருவர்
உற்சாகப்படுத்தவேண்டுமென்று இயேசு கட்டளையிடுகின்றார் (எபிரெயர் 10:24).
நம்முடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட வேண்டுமென்று அவர்
கூறுகின்றார் (யாக்கோபு 5:16). பழைய ஏற்பாட்டிலுள்ள ஞான இலக்கியத்தில்,
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல், ஒரு மனிதன் மற்றொருவனைக்
கூர்மையாக்கக்கூடும் (நீதிமொழிகள் 27:17) என்று நமக்குக்
கூறப்பட்ட்டிருக்கின்றது. கூட்டணியில் பலமுண்டு (பிரசங்கி 4:11-12).
அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் கணக்கு ஒப்புவிக்கின்ற ஒருவரைத் துணையாகக்
கொண்டிருப்பது, கடினமான பாவங்களை மேற்கொள்ளுவதில் மிகப் பெரிய பயனாகக்
கண்டுள்ளனர்.
உங்களோடு பேசக்கூடிய, ஜெபிக்கக்கூடிய, உற்சாகம் தரக்கூடிய, மேலும்
கண்டிக்கக்கூடிய ஒருவர் இருப்பது மிகவும் பயனுள்ளது. சோதனை
நம்மெல்லாருக்கும் பொதுவானது (1 கொரிந்தியர் 10:13). நாம் கணக்கு
ஒப்புவிக்கின்ற ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோத் துணையாகக் கொண்டிருப்பது,
கடினமான பாவங்களையும் கூட மேற்கொள்ள நமக்குத் தேவையான இறுதிகட்ட
ஊக்குவிப்பையும், உற்சாகத்தையும் நமக்குத் தரக்கூடும்.
ஒரு சில சமயங்களில் பாவத்தின் மீது வெற்றி உடனடியாகக் கிடைக்கின்றது.
மற்ற சமயங்களில் பாவத்தின் மீது வெற்றி தாமதமாகக் கிடைக்கின்றது.
தேவனுடைய resources நாம் பயன்படுத்தும் போது, நம்முடைய வாழ்வில்
தொடர்ச்சியாக மாற்றத்தைக் கொண்டுவருவதாக தேவன் வாக்குத்தத்தம்
செய்திருக்கின்றார்.
தேவன் தம்முடைய வாக்குத்தத்தில் உண்மையுள்ளவர் என்பதை நாம்
அறிந்திருக்கிறபடியால் பாவத்தை மேற்கொள்ளுகிற நம்முடைய முயற்சிகளில் விடா
முயற்சியுடன் செயல்படமுடியும்.
என்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் எவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது? [தொடர்ச்சி.....]
0
May 22, 2016
Tags