என்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் எவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது?

பாவத்தை மேற்கொள்ளுகிற நமது முயற்சியில் நமக்கு உதவிட வேதாகமம் பல
உதவிகளை அளிக்கிறது. இந்த வாழ்வில் நாம் பாவத்தை பரிபூரணமாக வெற்றி கொள்ள
முடியாது (1 யோவான் 1:8). ஆனால் பாவத்தை மேற்கொள்வதே நம் இலட்சியமாக
இருக்க வேண்டும். தேவனுடைய உதவியாலும், அவருடைய வார்த்தையின் படியே
நடப்பதால் மூலமும், நாம் படிப்படியாக பாவத்தை மேற்கொண்டு மேலும் மேலும்
கிறிஸ்துவைப் போல் மாறமுடியும்.

நாம் பாவத்தை மேற்கொள்ளுகிற முயற்சியில் வேதாகமம் அளிக்கும் முதலாவது
உதவி பரிசுத்த ஆவியானவர். நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கே தேவன்
பரிசுத்த ஆவியானவரை நமக்கு அளித்திருக்கின்றார். தேவன் மாம்சத்தின்
செயல்களையும், ஆவியின் கனிகளையும் வேறுபடுத்திக் காண்பிக்கின்றார்.

அந்தப் பகுதியில் ஆவிக்கேற்றபடி நடக்க நாம் நடக்க நாம்
அழைக்கப்பட்டுள்ளோம். அனைத்து விசுவாசிகளும் பரிசுத்த ஆவியானவரை
உடையவர்கள். ஆனாலும் நாம் ஆவியானவருக்குக் கீழ்படிந்து ஆவிக்கேற்றபடி
நடக்க வேண்டுமென்று போதிக்கின்றது. நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும்
மாம்சத்தின் நடவாமல், பரிசுத்த ஆவியானவருடைய உணர்த்துதலுக்குக்
கீழ்படிவதைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்பதே இதன் அர்த்தம்.

பரிசுத்த ஆவியானவர் தரக்கூடிய மாற்றத்தை பேதுருவின் வாழ்வில் தெளிவாகக்
காணலாம். அவன் ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கு முன்பாக, கிறிஸ்துவை மரண
பரியந்தம் பின்பற்றுவேன் என்று கூறிய பின்னும், மூன்றுமுறை மறுதலித்தான்.
பரிசுத்த ஆவியானரால் நிரப்பப்பட்ட பின்பு, பெந்தகோஸ்தே நாளில்
வெளியரங்கமாகவும், தைரியமாகவும் யூதர்களிடத்தில் பேசினான்.
ஆவியானவருடைய உணர்த்துதலை அவித்துப்போடாமல் இருந்திட முயற்சிப்பதாலும் (1
தெசலோனிக்கியர் 5:19ல் கூறியது போல்), ஆவியானவரால் நிரப்பப்பட
வேண்டுவதாலும் (எபேசியர் 5:18-21) நாம் ஆவிக்கேற்றபடி நடக்கலாம். ஒருவர்
பரிசுத்த ஆவியானரால் நிரப்பப்படுவது எப்படி? முதலாவது, பழைய ஏற்பாட்டைப்
போலவே இது தேவனால் தெரிந்தெக்கப்படுதல்.

அவர் எண்ணின காரியத்தை முடித்திட (அவர் தனிப்பட்ட நபர்களை
தெரிந்தெடுத்து) அவர்களை தன்னுடைய ஆவியானவரால் நிரப்பினார் (ஆதியாகமம்
41:38, யாத்திராகமம் 31:3, எண்ணாகமம் 24:2, 1 சாமுவேல் 10:18).

யாரெல்லாம் தேவவார்த்தையினால் தங்களை நிரப்புகின்றார்களோ அவர்களை
நிரப்பிட தேவன் தெரிந்தெடுக்கிறார் என்பதை எபேசியர் 5:18-21, கொலோசெயர்
3:16 இருந்து அறிய முடியும். இது நம்மை இரண்டாவது உதவிக்கு (resource)
வழி நடத்துகின்றது.
நம்மை நற்கிரியைகளைச் செய்ய ஏதுவாக்க தேவன் அவருடைய வார்த்தையை நமக்கு
அளித்திருக்கின்றார் என்று வேதாகமம் கூறுகின்றது (2 தீமோத்தேயு 3:16-17).
நாம் எப்படி வாழவேண்டும் என்றும் எதை நம்ப வேண்டும் என்றும்
போதிக்கின்றது, நாம் தவறான வழியைத் தெரிந்தெடுக்கும் போது அதை நமக்கு
வெளிப்படுத்தி, சரியான வழிக்கு நாம் திரும்பிட உதவிசெய்து, அந்த வழியில்
நிலைத்திருக்க உதவுகின்றது. எபிரேயர் 4:12, தேவனுடைய வார்த்தை,
ஜீவனுள்ளதும், வல்லமையானதும், நம் இருதயங்களை ஊடுருவி, நம் இருதயம்
மற்றும் சிந்தையின் ஆழமான பாவங்களை வேரறுத்து, மேற்கொள்ளக் கூடியது.
சங்கீதக்காரன் சங்கீதம் 119ல் தேவவார்த்தையின் வாழ்வை மாற்றும்
வல்லமையைக் குறித்து அலசி ஆராய்கின்றார்.

யோசுவா இந்த தேவவார்த்தையை மறவாமல், அதை இரவும், பகலும் தியானித்து
அதற்குக் கீழ்படிவதே எதிரிகளை மேற்கொண்டு வெற்றி காண்பதற்கான திறவுகோல்
என்று யோசுவாவுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போர் யுக்திகளின் அடிப்படையில்
இது முட்டாள்தனமாகத் தோன்றினாலும், அவன் அதைச் செய்தான், அதுவே
வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைவதற்கான போர்களில் வெற்றியடையத்
திறவுகோலாய் அமைந்தது.

இந்த வேதாகமத்தின் உதவியை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். வேதத்தை
ஆலயத்திற்கு சுமந்து செல்வது அல்லது ஒரு தின தியானத்தை வாசிப்பது அல்லது
தினமும் ஒரு அதிகாரத்தை வாசிப்பது என்று பெயரளவில் செய்கின்றோம், ஆனால்
அதை மனப்பாடம் செய்ய, தியானிக்க அல்லது அதை நம்முடைய வாழ்வில் அப்பியாசப்
படுத்தத் தவறி விடுகின்றோம்; வேதம் வெளிப்படுத்துகின்ற பாவங்களை
அறிக்கையிடவோ, அது வெளிப்படுத்துகின்ற நன்மைகளுக்காக தேவனைத் துதிக்கவும்
தவறி விடுகின்றோம்.
இதுவரையில் நீங்கள் தினமும் வேதத்தைப் படித்து, மனப்பாடம் செய்வதை
பழக்கமாகக் கொள்ளாமலிருந்தால், இன்றே அதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டியது
முக்கியம்.

நாட்குறிப்பேட்டை ஆரம்பிப்பதை சிலர் பயனுள்ளதாகக் காண்கின்றனர்.
வேத்திலிருந்து கற்றுக்கொண்ட ஏதாவது ஒரு காரியத்தை எழுதும் வரையில்
விடப்போவதில்லை என்பதை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். சிலர் தேவன் பேசின
காரியங்களில் மாறிட அவர் உதவி கேட்கும் ஜெபங்களைப் பதிவு செய்கின்றனர்.

வேதாகமம் ஆவியானவர் நம்முடைய வாழ்வில் பயன்படுத்தும் ஒரு கருவி (எபேசியர்
6:17), ஆவிக்குரிய போராட்டத்தில் போராடிட தேவன் தரும் மிக முக்கியமான
மற்றும் பெரும்பான்மையான போர்க்கருவியாகும் (எபேசியர் 6:12-18).

பாவத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் மூன்றாவது மிக முக்கியமான உதவி
ஜெபம். கிறிஸ்தவர்கள் உதட்டளவில் செயல்படுத்தி விட்டு, மிகவும் குறைவாகப்
பயன்படுத்தும் ஆற்றல் இந்த ஜெபம். நாம் ஜெபக்கூடுகைகள், ஜெப நேரங்கள்
போன்ற பல வைத்திருக்கின்றோம், ஆனாலும் ஆதித்திருச்சபையைப் போல் நாம்
ஜெபத்தைப் பயன்படுத்துவது கிடையாது (அப்போஸ்தலர் 3:1; 4:31; 6:4;
13:1-3). பவுல் அவர் ஊழியம் செய்தவர்களுக்காக எப்படி ஜெபித்தார் என்பதை
மீண்டும் மீண்டுமாகக் குறிப்பிடுகின்றார்.

ஜெபத்தைக் குறித்து அற்புதமான வாக்குத்தத்தங்களை தேவன் நமக்கு
அளித்திருக்கின்றார் (மத்தேயு 7:7-11; லூக்கா 18:1-18; யோவான் 6:23-27; 1
யோவான் 5:14-15), மற்றும் பவுல் ஆவிக்குரிய போராட்டத்திற்கான ஆயத்தத்தைக்
குறித்த பகுதியில் ஜெபத்தையும் சேர்க்கின்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.