இந்த குறிப்பிட்ட பட்டியலை யாராவது எதிர்த்தாலும் கூட, உயிர்த்தெழுதலை
நிரூபிக்கவும், சுவிசேஷத்தை நிலைநாட்டவும் சில சான்றுகளே போதுமானது:
இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், காட்சியளிப்புகள் (1
கொரிந்தியர் 15:1-5).
ஒருவேளை சில கோட்பாடுகள் மேற்கூறிய ஒன்று அல்லது இரண்டு உண்மைகளுக்கு
விளக்கமளிக்க முடிந்தாலும், உயிர்த்தெழுதலினால் மட்டுமே அனைத்தையும்
விளக்கவும் கணக்கிடவும் முடியும்.
சீஷர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாக கூறுவதை திறனாய்வாளர்கள்
ஏற்றுக்கொள்கின்றனர். மக்களை மாற்றின உயிர்த்தெழுதல் போல் பொய்களோ,
பிரம்மைகளோ செய்யமுடியாது. முதலாவது, இதனால் அவர்களுக்கு லாபம் என்ன?
கிறிஸ்தவம் பிரசித்தி பெறவுமில்லை, நிச்சயமாக பணம் ஈட்டித்தரவுமில்லை.
இரண்டாவது, பொய்யர்கள் நல்ல இரத்தச்சாட்சிகளாகயிருக்க முடியாது. தங்களது
விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் மரித்த சீஷர்களின் விருப்பத்திற்கு
சிறந்த விளக்கம் உயிர்த்தெழுதல் தவிர வேறொன்றுமில்லை.
ஆம், பலர் தாங்கள் உண்மையென்று நம்பின பொய்க்காக மரிப்பார்கள், ஆனால்
எவரும் உண்மையில்லை என்று தாங்கள் அறிந்த ஒன்றுக்காக மரிக்கமாட்டார்கள்.
முடிவாக, கிறிஸ்து தான் யெகோவா என்று கூறினார், அதாவது அவர்
தெய்வீகத்தன்மை உடையவர் (ஏதோ "ஒரு கடவுள்" அல்ல ஆனால் ஒரே உண்மையான
தேவன்); அவரது சீஷர்கள் (விக்கிரக ஆராதனைக்குப் பயந்தவர்கள்) அவரை தேவன்
என்று நம்பி ஏற்றுக்கொண்டனர்.
கிறிஸ்து தனது தெய்வீகத்தன்மையை அதிசயங்கள் (உலகையே மாற்றின
உயிர்த்தெழுதல் உட்பட), மூலம் நிரூபித்தார். வேறெந்த கற்பிதக் கொள்கையும்
(உத்தேசம்) இந்த உண்மைகளை விளக்க முடியாது. ஆம், கிறிஸ்துவின்
தெய்வீகத்தன்மை வேதத்திற்கு ஒத்ததே.
கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்தின் அடிப்படையிலானதா? [தொடர்ச்சி.....]
0
May 22, 2016
Tags