கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்தின் அடிப்படையிலானதா?

இயேசு தம்மைக் குறித்து கூறிய குறிப்பிட்ட கூற்றுக்களோடு கூட அவரது
சீஷர்களும் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை அறிக்கையிட்டுள்ளனர். தேவனாலே
மட்டும் செய்யக்கூடிய பாவத்தை மன்னிக்கும் தன்மை (ஆம் தேவனே பாவத்தினால்
பாதிப்புக்குள்ளானவர்) (அப்போஸ்தலர் 5:31; கொலொசேயர் 3:13; சங்கீதம்
130:4; எரேமியா 31:34) இயேசுவுக்கு உண்டு என்று பறைசாற்றினார்கள்.

தோமா இயேசுவை நோக்கி, "என் ஆண்டவரே, என் தேவனே!" என்று கதறினார் (யோவான்
20:28). பவுல் இயேசுவை "மகா தேவனும், இரட்சகரும்" (தீத்து 2:13) என்று
கூறி, மேலும் இயேசு மனிதனாக அவதரிப்பதற்கு முன், "தேவனுடைய
ரூபமாயிருந்தார்" (பிலிப்பியர் 2:5-8) என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

பிதாவாகிய தேவன் இயேசுவைக் குறித்து "தேவனே, உம்முடைய சிங்காசனம்
என்றென்றைக்குமுள்ளது" என்று கூறுகிறார் (எபிரேயர் 1:8). யோவான் "ஆதியிலே
வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை
[இயேசு] தேவனாயிருந்தது" என்று குறிப்பிடுகிறார் (யோவான் 1:1).

வேதாகமத்தின் பல பகுதிகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை
எடுத்துரைக்கின்றன (பார்க்க: வெளிப்படுத்தல் 1:17, 2:8, 22:13; 1
கொரிந்தியர் 10:4; 1 பேதுரு 2:6-8; சங்கீதம் 18:2, 95:1; 1 பேதுரு 5:4;
எபிரேயர் 13:20). கிறிஸ்து அவரது சீஷர்களால் தேவனாக எண்ணப்பட்டார்
என்பதற்கு இவற்றில் ஒன்றே போதுமானது.
பழைய ஏற்பாட்டில் யெகோவாவிற்கே (தேவனுடைய அதிகாரப்பூர்வமான நாமம்) உரிய
நாமங்கள் இயேசுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

பழைய ஏற்பாட்டு நாமமான "மீட்பர்" (சங்கீதம் 130:7; ஓசியா 13:14) புதிய
ஏற்பாட்டில் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது (தீத்து 2:13;
வெளிப்படுத்தல் 5:9). மத்தேயு 1 ல், இயேசு இம்மானுவேல்-"தேவன்
நம்மோடிருக்கிறார்" என்றழைக்கப்படுகிறார். சகரியா 12:10 ல், யெகோவா தான்,
"அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து," கூறுகிறார். ஆனால்
புதிய ஏற்பாடு இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறிப்பிட இந்த வசனத்தைப்
பயன்படுத்துகிறது (யோவான் 19:37; வெளிப்படுத்தல் 1:7).

யெகோவாவைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் "குத்தப்பட்டு
நோக்கிப்பார்க்கப்படுவார்" என வேதாகமம் சொல்லுமானால், இயேசுவும்
யெகோவாவும் ஒன்றே என்று அர்த்தம் கொள்ளமுடியும். மேலும், இயேசுவினுடைய
நாமம் ஜெபத்தில் தேவனுடைய நாமத்தோடு பயன்படுத்தப்பட்டுள்ளது, "நம்முடைய
பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக்
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக" (கலாத்தியர் 1:3; எபேசியர் 1:2).
கிறிஸ்து தெய்வீகத்தன்மை இல்லாதவரென்றால், இது தேவதூஷணமாகிவிடும்.
இயேசுவின் ஞானஸ்நானக் கட்டளையிலும் இயேசுவினுடைய நாமம் தேவனுடைய
நாமத்தோடு இணைந்து காணப்படுகிறது, "பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்
நாமத்திலே [ஒருமை]" (மத்தேயு 28:19; மற்றும் 2 கொரிந்தியர் 13:14 யையும்
காண்க).
தேவனால் மட்டுமே செய்யக்கூடிய செயல்கள் இயேசுவுக்கு ..... இயேசு
மரித்தோரை எழுப்பினது மட்டுமல்லாமல் (யோவான் 5:21, 11:38-44) பாவத்தையும்
மன்னித்தார் (அப்போஸ்தலர் 5:31, 13:38), அவர் உலகைப் படைத்து, தாங்கவும்
செய்கிறார் (யோவான் 1:2; கொலொசேயர் 1:16-17). யெகோவா மட்டுமே
சிருஷ்டிப்பின் போது இருந்தார் என்பதை ஒருவர் எண்ணும் போது இது மேலும்
தெளிவாகின்றது.

மேலும், தேவன் மட்டுமே உடைய தன்மைகளை கிறிஸ்து உடையவராயிருக்கிறார்:
நித்தியத்தன்மை (யோவான் 8:58), எங்கும் நிறைந்த தன்மை (மத்தேயு 18:20,
28:20), சகலத்தையும் அறிதல் (மத்தேயு 16:21), சர்வவல்லமை (யோவான் 11:
38-44).

இப்போது, தான் கடவுள் என்று கூறுவது அல்லது அது உண்மையென்று மற்றவர்களை
நம்பவைத்து முட்டாளாக்குவது வேறு, முழுக்க முழுக்க அது உண்மையென்று
நிரூபிப்பது வேறு. கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தன்மைக்கான கோரிக்கையை பல
அதிசயங்கள் மூலம் நிரூபித்திருக்கின்றார்.

இயேசுவின் அற்புதங்களில் ஒருசிலவற்றில் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியது
(யோவான் 2:7), தண்ணீரின் மேல் நடந்தது (மத்தேயு 14:25), பொருட்களைப்
பன்மடங்காக்கியது (யோவான் 6:11), குருடரைக் குணமாக்கியது (யோவான் 9:7),
முடவரைக் குணமாக்கியது (மாற்கு 2:3), பிணியாளிகளைக் குணமாக்கியது
(மத்தேயு 9:35; மாற்கு 1:40-42), மேலும் மரித்தோரை உயிரோடு எழுப்பியது
(யோவான் 11:43-44; லூக்கா 7:11-15; மாற்கு 5:35) ஆகியவையும் அடங்கும்.
மேலும், கிறிஸ்து தாமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

புறமதத்திலுள்ள புராணக்கதைகளின் பெயரளவில் மரித்து, உயிர்த்தெழும்
கடவுள்களோடு ஒப்பிடும் போது, உயிர்த்தெழுதலைப் போன்ற எதுவும் மற்ற
மதங்களால் வலியுறுத்தப்படவில்லை, மற்றும் மற்ற எந்தக் கோரிக்கையும் இந்த
அளவிற்கு வேதத்திற்கு அப்பாற்பட்ட சான்றுகளை உடையதாயில்லை.

கிறிஸ்தவரல்லாத குற்றங்காண்கிற (நடுநிலை) அறிஞர்கள் கூட ஏற்றுக்
கொள்ளுகின்ற இயேசுவைக் குறித்து குறைந்தது பன்னிரண்டு வரலாற்று உண்மைகள்:

1. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

2. அவர் அடக்கம் பண்ணப்பட்டார்.

3. அவரது மரணம் சீஷர்களை கலங்கச் செய்து நம்பிக்கை இழக்கவும் செய்தது.

4. சில நாட்களுக்குப் பின்பு இயேசுவின் கல்லறை காலியாகக் கண்டுபிடிக்கப்
பட்டது (கண்டுபிடிக்கப் பட்டதாகக் கோரப்பட்டது).

5. உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சிகளை உணர்ந்ததாக சீஷர்கள் நம்பினர்.

6. இதற்குப் பின்பு, சந்தேகித்தவர்கள் தைரியமான விசுவாசிகளாக மாறினர்.

7. இச்செய்தியே ஆதித் திருச்சபையின் மையப் பிரசங்கமானது.

8. இச்செய்தி எருசலேமில் பிரசங்கிக்கப் பட்டது.

9. இப்பிரசங்கத்தின் விளைவாக திருச்சபை தோன்றி வளர்ந்தது.

10. உயிர்த்தெழுதல் நாள் (ஞாயிறு) ஓய்வு நாளுக்குப் பதிலாக பிரதான ஆராதனை நாளானது.

11. யாக்கோபு,

12. கிறிஸ்தவத்திற்கு எதிரியாயிருந்த பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவின்
காட்சியைக் கண்ட அனுபவத்தால் மாற்றப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.