தேவன் சொல்லியிருக்கும் வசனங்கள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது, கன்மலையை
உடைக்கும் சம்மட்டி போல் இருக்கும் அவரின் வார்த்தைக்கு எந்த மனுஷனும்
சரியான விளக்கத்தை கொடுத்துவிடவே முடியாது.
தேவன் ஒருவர் மாத்திரமே அதற்க்கான சரியான விளக்கத்தை கொடுக்க முடியும்.
அதுவும் ஒரே வசனத்தை வைத்து ஒருவருக்கு ஒருவிதமாகவும் இன்னொருவருக்கு
வேருவிதமாகமும் சொல்லி அதை அப்படியே நடப்பித்து காட்டவும் கூட தேவனால்
ஆகும்.
அவர் சர்வ வல்லவர்.
ஐயா!
உண்மை இவ்வாறு இருக்க, தேவனின் வார்த்தைக்கு உலக மனுஷனிடத்தில் விளக்கம்
தேடுவது ஏன்
சபையும் உலகமும் வேதாகம கல்லூரியும் வேத பாடங்களும் கொடுக்கும்
விளக்கங்கள் எந்தவிதமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.
உங்களுக்கு ஒரு வசனத்துக்கு சரியான விளக்கம் வேண்டுமா நீங்கள் தேவனின்
பாதத்தில் அமர்ந்து அதற்க்கான விளக்கத்துக்காக கெஞ்சுங்கள் அழுது
மன்றாடுங்கள் அப்பொழுது அடுத்தவர் சொல்லும் விளக்கத்தை விட ஆயிரம் மடங்கு
மேலான ஒரு காரியத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவார்.
அப்படி ஒரு விளக்கமா என்று நம்மால் சித்தித்து பார்க்கவும் முடியாது
அவ்விளக்கம் அவ்வசனத்துக்கு சூட் ஆவது போல் எந்த மனுஷ விளக்கமும் சூட்
ஆகாது.
"என்னை கேள்" என்று அவரே சொல்கிறார் என்னை நோக்கி கூப்பிடு என்று அவரே
நமக்கு அனுமதி தருகிறார்.
எரேமியா 33:3
என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன் என்றல்லவா சொல்லியிருக்கிறார் பிறகு
நீங்கள் ஏன் அடுத்த மனுஷனை கேட்கிறீர்கள்?
உங்களுக்குள் தேவன் வைத்திருக்கும் ஆவி இல்லையா?
சரியான ஜெபம் இல்லை போதிய விசுவாசம் இல்லை எவராவது எந்த பாஸ்டராவது
எனக்காக தேவனிடம் கேட்டு சொல்ல மாட்டார்களா என்ற எண்ணம்தானே.
எபிரெயர் 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால்,
தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர்தம்மைத்
தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
தேவனும் எவன் என்னிடத்தில் கேட்க மாட்டான் என்று எதிர்பார்த்து கொண்டு
இருக்கிறார். ஆகினும் அவரவர் மனதின் வாஞ்சை என்ன என்பதன் அடிப்படையிலேயே
பதில் கிடைக்கும். சில நேரங்களில் பதில் கிடைக்க சில மாதங்கள் கூட ஆகலாம்
அனால் சோர்ந்து போகவே கூடாது.
உங்கள் சபையில் என்ன போதனை என்பது தேவனுக்கு ஒரு பொருட்டல்ல, சபைக்கு தலை
பாஸ்டரும் அல்ல. சபைக்கு தலையாக இருக்கும் கிறிஸ்த்து தரும் போதனையே
சத்தியமானது. காரணம் எந்த மனுஷனும் தனக்கடுத்தவனை மோசம்போக்குகிறான்
எரேமியா 9:5 அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்;
அதற்காக சபையில் பாஸ்டர் சொல்வதையோ வேறு எவரும் சொல்லும் தேவ வார்த்தைகளை
புறங்கனிக்க வேண்டும் என்பதோ எனது கருத்து அல்ல. நீங்கள் உண்மையில்
தேவனின் எதிர்பார்ப்புபடி நடப்பவராக இருந்தால் எவர் சொல்லும் கருத்தையும்
கேட்க வாஞ்சை உடையவர்களாயும், அதை தேவ சமூகத்தில் வைத்து உண்மையை ஆராயும்
தன்மையுடையவராகவும் இருப்பீர்கள்.
நாம் தேவனோடு தனிப்பட்ட தொடர்பு நிலையில் இருப்பது மிக மிக
அவசியம் என்பதே எனது கருத்து காரணம் எந்த மனுஷனும் தனக்கடுத்தவனை
மோசம்போக்குகிறான்
ரோமர் 3:13
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள்நாவுகளால் வஞ்சனை
செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
எரேமியா 9:8
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்
தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன்
உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.
எனவே அன்பானவர்களே தேவனை தேடுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள்!
நாம் வாழும் இந்த காலம் கள்ள கிறிஸ்துகளும் கள்ள தீர்க்கதரிசிகளும் கள்ள
போதகர்களும் திரளாய் செயல்படும் கடைசி காலம் எனவே நாம் தேவனுடைய எல்லா
ஊழியர்களின் வார்த்தைகளையும் கேட்போம் அதில் முரன்பாடு இருப்பது போல
தோன்றினால் அதை தேவ சமூகத்தில் கர்த்தரிடம் கேட்போம் அவரே வேதத்தின்
ஆசிரியர் அவர் பதிலளிப்பார். ஆமென்.
__________________
தேவன் சொல்லியிருக்கும் வசனத்திற்கு மனிதன் விளக்கம் கூற முடியுமா? (எப்படியாவது வேதத்தை நீங்கள் தியானிக்க வேண்டும் அதுவே எங்கள் நோக்கம்)
0
May 22, 2016
Tags