ஒருவர்
ஒருமுறை
இரட்சிக்கப்பட்டிருந்தால்
எப்பொழுதும்
இரட்சிக்கப்பட்டவரா?
மக்கள் கிறிஸ்துவை
தங்கள் இரட்சகராக
அறிந்துகொள்ளும்
போது அவர்கள்
கர்த்தரோடே ஒரு
உறவுக்குள்
கொண்டுவரப்படுகிறார்கள்.
இந்த உறவு
அவர்களுடைய
இரட்சிப்பை
எப்பொழுதுமே
பாதுகாக்கப்பட்ட
ஒன்றாக உத்திரவாதம்
அளிக்கிறது. பல வேத
பகுதிகள் இந்த
உண்மையை
அறிவிக்கின்றன.
(a) "எவர்களை
முன்குறித்திருக்கிறாரோ
அவர்களை
அழைத்துமிருக்கிறார்
எவர்களை
அழைத்திருக்கிறார்
அவர்களை
நீதிமான்களாக்கியுமிருகிறார்,
எவர்களை
நீதிமான்களாக்கியிருக்கிறாரோ
அவர்களை
மகிமைப்படுத்தியுமிருக்கிறார்"
என்று ரோமர் 8:30
கூறுகிறது. கர்த்தர்
நம்மைத்
தெரிந்துகொண்ட
பொழுதிலிருந்தே
பரலோகத்தில்
அவருடைய
பிரசன்னத்தில்
மகிமையடைச்செய்தது
போலிருக்கும்.
விசுவாசி ஒரு நாள்
மகிமையில்
பிரவேசிப்பதை
எதுவும் தடைசெய்ய
முடியாது ஏனென்றால்
கர்த்தர் இதை
முன்னதாகவே
பரலோகத்தில் திட்டம்
பண்ணியிருக்கிறார்.
ஒருவர்
நீதிமானாக்கப்பட்டால்
அவர் இரட்ச்சிப்புக்கு
உத்திரவாதம் உண்டு –
அவருக்கு இருக்கும்
பாதுகாப்பு. அவர்
ஏற்கனவே
பரலோகத்தில்
மகிமைப்பட்டுவிட்டது
போன்றது.
(b) ரோமர் 833-34ல்
பவுல் இரண்டு
முக்கியமான
கேள்விகளை
எழுப்புகிறார்
"தேவன் தெரிந்து
கொண்டவர் மேல்
குற்றஞ்சாட்டுகிறவர்
யார்? தேவனே
அவர்களை
நீதிமான்களாக்குகிறவர்.
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கிறவன் யார்?
கிறிஸ்துவே
மரித்தவர்; அவரே
எழுந்துமிருக்கிறார்;
அவரே தேவனுடைய
வலது பாரிசத்திலும்
இருக்கிறவர் நமக்காக
வேண்டுதல்
செய்கிறவரும் அவரே."
தேவன் தெரிந்து
கொண்டவர் மேல்
குற்றஞ்சாட்டுகிறவர்
யார்? யாருமில்லை
ஏனென்றால்
கிறிஸ்துவே நமக்காக
ப்ரிந்து
பேசுகிறவராக
இருக்கிறார். யார்
நம்மை
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்ப்பவர்?
ஒருவருமில்லை
ஏனெனில் நமக்காக
மரித்த கிறிஸ்துவே
நம்மை
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கிறவர். நமக்காகப்
பரிந்து
பேசுகிறவரும்,
நம்மை நியாயந்
தீர்க்கிறவரும் நம்
இரட்சகரே.
(c) விசுவாசிகள்
விசுவசிக்கும்போது
மறுபடி
பிறக்கிறார்கள்
(மறுபடி
ஜெனிப்பிக்கப்படுதல்)
(யோவான் 3:3, தீத்து
3:5). ஒரு கிறிஸ்தவர்
இரட்சிப்பை
இழப்பதற்கு, அவர்
மறுபடி
ஜெனிப்பிக்கப்படாமலிருக்க
வேண்டும். மறுபடி
பிறத்தல்
எடுத்துக்கொள்ளப்படும்
என்பதற்கு வேதாகமம்
எந்த சான்றும்
கொடுக்கவில்லை.
(d) பரிசுத்த
ஆவியானவர் எல்லா
விசுவாசிகளுக்குள்ளும்
தங்கி வாசம்
செய்கிறார் (யோவான்
14:17; ரோமர் 8:9); எல்லா
விசுவாசிகளையும்
கிறிஸ்துவின்
சரீரத்திற்குள்ளாக
ஞானஸ்நானம்
பண்ணுகிறார் (1
கொரிந்தியர் 12:13). ஒரு
விசுவாசி
இரட்சிக்கப்பட்டதிலிருந்து
விலகிப்
போகவேண்டுமானால்,
அவருக்குள் "வாசம்
பண்ணப்படாமலும்"
கிறிஸ்துவின்
சரீரத்திலிருந்து
பிரிந்திருக்கவும்
வேண்டும்.
(e) யாரெல்லாம்
இயேசு கிறிஸ்துவை
விசுவாசிக்கிறாரோ
அவருக்கு "நித்திய
வாழ்வு உண்டு என்று
யோவான் 3:15
கூறுகிறது.
கிறிஸ்துவில் நீங்கள்
இன்று விசுவாசித்து
நித்திய வாழ்வைப்
பெற்றுக் கொண்டு
நாளை அதை
இழந்துபோனால் அது
"நித்தியமானதாக"
ஒருபோதும்
இருந்திருக்க
முடியாது. ஆகவே
நீங்கள் இரட்சிப்பை
இழந்தால்
வேதாகமத்தில்
நித்திய ஜீவனைக்
குறித்த
வாக்குத்தத்தங்கள்
தவறாயிருக்கும்.
(f) விவாத்தின்
இறுதியான்
முடிவுக்கு
வேதபகுதியே சிறந்த
விளக்கத்தை
அளிக்கிறது என்று
கருதுகிறேன்,
"மரணமானாலும்,
ஜீவனானாலும்,
தேவதூதர்களானாலும்,
அதிகாரங்களானுலும்,
வல்லமைகளானாலும்,
நிகழ்காரியங்களானாலும்,
வருங்காரியங்களானாலும்,
உயர்வானாலும்,
தாழ்வானாலும்
வேறெந்த
சிருஷ்டியானாலும்
நம்முடைய
கர்த்தராகிய
கிறிஸ்து
இயேசுவிலுள்ள
தேவனுடைய அன்பை
விட்டு நம்மை
பிரிக்கமாட்டாதென்று
நிச்சயித்திருக்கிறேன்"
ரோமர் 8:38-39).
உங்களை இரட்சித்த
தேவனே உங்களை
காக்க வல்லவர். நாம்
ஒருமுறை
இரட்சிக்கப்பட்டோமானால்
எப்பொழுதும்
இரட்சிக்கப்பட்டிருப்போம்.
நம்முடைய இரட்சிப்பு
மிக நிச்சயமாக
நித்தியத்திற்கும்
பாதுகாக்கப் பட்டிருக்கும்.