ஆபிராகாமின் 12 வகையான கீழ்ப்படிதலானது, 48 வாக்குறுதிகளை தேவனிடமிருந்து
பெற்றுத்தந்தது. இந்த 48 வாக்குறுதிகளில் 35 க்கும் அதிகமான
வாக்குறுதிகள் ஆபிரகாமையும் அவருடைய மனைவி மற்றும் சந்ததியையும்
ஆசிர்வதிப்பதாகவே இருந்தது.
1. நான் உனக்குக் தேசத்தை காண்பிப்பேன் (ஆதி 12:1). ..
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்
(ஆதி 12:2). ..
3. நான் உன்னைப் உன்னை ஆசீர்வதிப்பேன் (ஆதி 12:2). ..
4. நான் உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்
(ஆதி 12:2). ..
5. நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதி 12:2). ..
6. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன் (ஆதி 12: 3).. ..
7. உன்னைச் சபிக்கிறவனைச் நான் சபிப்பேன் (ஆதி 12: 3).. ..
8. பூமியிலுள்ள
வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்
(ஆதி 12:3, 22:18).. ..
9. உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன். (ஆதி 12:7, 13:14-17,
15:18-21, 17:18).. ..
10. உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்
(ஆதி 13:16).. ..
11. நான் உனக்குக் கேடகமாக இருக்கின்றேன். (ஆதி 15:1)..
12. நான் உனக்குக் உனக்கு மகா பெரிய
பலனுமாயிருக்கிறேன். (ஆதி15:1)..
13. உன்
கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளி
(ஆதி 15:4)..
14. உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ணுவேன்.
(ஆதி 15:5,22:17)..
15. உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே
பரதேசிகளாயிருப்பார்கள் (ஆதி 15:13)..
16. நானூறு வருஷம் அவர்கள்
உபத்திரவப்படுவார்கள்
(ஆதி 15:13)...
17. உன் சந்ததியார் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்.
(ஆதி 15:14). ..
18. உன் சந்ததியார் மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள் (ஆதி 15:14). ..
19. உன் சந்ததியார் நாலாம் தலைமுறையிலே விடுதலை பெற்று கானானுக்கு
திரும்ப வருவார்கள். (ஆதி 15: 16). ..
20. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய் (ஆதி 15: 15). ..
21. நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய் (ஆதி 15: 15). ..
22. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்
(ஆதி 17:4-7). ..
23. நான் உன்னை மிகவும் திரளாய்ப்
பெருகப்பண்ணுவேன்
(ஆதி 17:2, 22:17). ..
24. நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்துவேன். (ஆதி 17:5) ..
25. உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், ஆபிரகாம் என்னப்படும். (ஆதி 17:5) ..
26. உன்னை மிகவும் அதிகமாய்ப்
பலுகப்பண்ணுவேன்.
(ஆதி 17:6). ..
27. உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்.
(ஆதி 17:6). ..
28. உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். (ஆதி 17:6). ..
29. எனக்கும், உன் சந்ததிக்கும் நடுவே, என் நித்திய உடன்படிக்கையை
ஸ்தாபிப்பேன். (ஆதி 17: 7) ..
30. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கு
கொடுப்பேன். (ஆதி 17: 8) ..
31. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்குப்
பின்வரும் சந்ததிக்கும் சுதந்தரமாகக் கொடுப்பேன். (ஆதி 17: 8) ..
32. நான் உனக்கும் உன் சந்ததிக்கும்
தேவனாயிருப்பேன்
(ஆதி17:8) ..
33. நான் உன் மனைவியை ஆசீர்வதிப்பேன்.
(ஆதி 17:16)...
34. உன் மனைவி ஜாதிகளுக்குத் தாயாக இருப்பாள். (ஆதி 17:16). ..
35. உன் மனைவியினிடத்திலே ராஜாக்கள்
உண்டாவாகுவார்கள்.
(ஆதி 17:16). ..
36. அவள் பேர் சாராய் என்னப்படாமல், சாராள் என்னப்படும். (ஆதி 17:15). ..
37. ஈசாக்கோடும் அவன் சந்திதியோடும் நான் என் உடன்படிக்கையை
ஏற்படுத்துவேன் என்றார். (ஆதி 17:19-21). ..
38. இஸ்மவேலையும் நான் அவனை ஆசீர்வதிப்பேன் (ஆதி 17:20). ..
39. இஸ்மவேலை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன். (ஆதி 17:20). ..
40. இஸ்மவேல் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். (ஆதி 17:20)...
41. இஸ்மவேலை பெரிய ஜாதியாக்குவேன்.
(ஆதி 17:20). ..
42. வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் ஈசாக்கை பெறுவாள்
(ஆதி 17:21, 18:10,14) ..
43. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்.
(ஆதி 21: 12.) ..
44. நான், உன் சந்ததியை கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்
(ஆதி 22:17). ..
45. உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச்
சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். (ஆதி 22:17). ..
46. நான் சோதோமில் ஐம்பது, நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது
அல்லது பத்து நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த
ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
(ஆதி 18:26-32) ..
47. நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள்
பூமியிலுள்ள சகல ஜாதிகளும்
ஆசீர்வதிக்கப்படும்
(ஆதி 22: 18) ..
48. இவைகளை என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
(ஆதி 22: 18)...
————————————
நன்றி: VV Ministry
————————————
