சவக்கடல் சுருள்கள

(DEAD SEA SCROLLS)

1947 இல் சவக்கடலின் தென்மேற்குப் பகுதியில் இருந்து 1 மைல் தொலைவில்
உள்ள குகைகளில் ஒரு ஆட்டு இடையனால் கண்டு பிடிக்க பட்ட சுருள்கள்
கண்டுப்பிடிக்கப்பட்டன.

பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் காலங்களையும் பிழையற்ற தன்மையையும் உறுதி
செய்வதாக காணப்படுகின்றது.

இந்த தோல் சுருள்கள் கி.மு 200 முதல் கி.பி 68 க்கு இடைப்பட்ட காலங்களை சார்ந்ததாக
காணப்படுகின்றன.

981 பிரதிகள் இருந்தன.
ஒரு தொல்சுருள் ஏசாயா புத்தகத்தின் முழு பிரதியாக காணப்படுகின்றது.

ஆயிர வருஷங்களுக்கு முந்திய காலத்தை சார்ந்த இப்பிரதிகள், கி.பி ஒன்பதாம்
நூற்றாண்டை சார்ந்த மசொறேடிக் (masoretic copies ) பிரதிகளுடன்
ஒத்துபோவதாக இருக்கின்றது.

யூதர்களுடைய இந்த பழைய புனித சவக்கடல் சுருள்கள் வேதாகமத்தை இன்னும்
ஆராயவே எண்ணுகிறது.
இஸ்ரவேல் மியுசியம் 2000 பழமை வாய்ந்த சவக்கடல் சுருள்களை இன்டர்நெட்
லே பதிவு செய்து இருக்கிறார்கள். இங்கே சென்று நீங்கள் பார்வை இடலாம்.

1947 ம் ஆண்டு ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனால் இந்த வேதாகம சுருள்கள்
கும்ரான் குகையில் கண்டு பிடிக்கப்பட்டன.

1956 ம் ஆண்டுவரைக்கும் அங்கேயுள்ள 11 குகைகளில் 900 எழுத்து
சுவடிகளில் 30000 துண்டுகளை கண்டு பிடித்தனர்.
இதிலே மிகவும் பழமை வாய்ந்தது கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.

http://dss.collections.imj.org.il/

இவைகள் 1947லிருந்து 1956 வரையில் சவக்கடலின் வட மேற்கு கரைபகுதிகளில்
உள்ள 11 மலைக்குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை.

இப்பகுதி எருசலேமுக்கு 13 மைல் கிழக்கில் உள்ள மிக வறண்ட மழையற்ற
பகுதியும் கடல் மட்டத்திலிருந்து 1.300 அடி கீழான பகுதியுமாகும்.

சவக்கடல் சுருள்கள் 825 – 870 தனிப்பட்ட சுருள்களின் ஆயிரக்கணக்கான
துண்டுகளின் மீதியான பகுதிகளின் தொகுப்பு ஆகும்.

இந்த எழுத்துப்பிரதிகள் பெரும்பான்மையானவை மிருகங்களின் தோலால்
தயாரிக்கப்பட்டதும் மேலும் பாப்பிரஸ் பிரதிகளும் ஒன்று தாமிரச்சுருளும்
ஆகும்.

கார்பன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மையினால் வலமிருந்து இடமாக
முற்றுப்புள்ளிகள் இல்லாது பல பத்திகளாக எழுதப்பட்டிருக்கிறது.

சவக்கடல் எழுத்துச் சுருள்கள் ஏன் முக்கியமானது?

இச் சுருள்களை மூன்று பகுதியாக பிரிக்கலாம்.

பைபிள் புத்தகங்கள்,
வேதாகம சம்பந்தப்பட்ட ஆனால் பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்படாத புத்தகங்கள்
மற்றும் பைபிள் அல்லாத எழுத்துச் சுருள்கள்.

பெரும்பாலும் எல்லா பழைய ஏற்பாடு புத்தகங்களின் பகுதிகளும் எஸ்தர்
புத்தகத்தை தவிர கிடைத்திருக்கிறது.

இப்போது கண்டுபிடிக்கபட்ட சுருள்களில் 19 ஏசாயா புத்தகத்தின் பகுதிகளும்
25 உபாகமம் புத்தகத்தின் பகுதிகளும், 30 சங்கீதம் புத்தகத்தின்
பகுதிகளும் இருக்கின்றன.

முழுவதும் சேதமில்லாமல் கிடைத்த ஏசாயா புத்தகத்தின் முழு பிரதி இது வரை
கிடைத்த ஏசாயா எழுத்து பிரதிகளைவிட 1000 வருடம் பழமையானதாகும்.

ஏசாயா புத்தகத்தில்தான் ஆச்சரியமூட்டும் குறிப்பிடதகுந்த பல
தீர்க்கதரிசனங்கள் மேசியாவைப் பற்றி உள்ளது. எனவே கிறிஸ்து உலகில்
வருவதற்கு முன் காலத்திய இந்த எழுத்துச் சுவடி கிடைத்தது எவ்வளவு
முக்கியமான நிகழ்வு.

பல வேறுபட்ட காலகணிப்பு முறைகள் மூலம் சவக்கடல் சுருள்கள் எந்த கால
கட்டத்தைச் சேர்ந்தது என கணிக்கப்பட்டுள்ளது.
கார்பன் டேடிங் 14, பண்டையாகால எழுத்து முறை பற்றிய நிபுணர்களின் சோதனை (
paleographic and scribal) போல பல சோதனைகளுக்கு பின் அச்சுருள்கள் கிமு
200 – கிபி 68 காலகட்டங்களில் எழுதப்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது.

பல முக்கியமான வேதாகம கையெழுத்து பிரதிகள் (சங்கீதம் 22, ஏசாயா 53,
மற்றும் ஏசாயா 61 போன்றவை) குறைந்த பட்சம் கிறிஸ்துவுக்கு 100
வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவை. ஆகவே இது பைபிள் பற்றிய பல எதிரான
கருத்துக்களை அடியோடு மாற்றியுள்ளது.

மேலும் இன்று நம் வேதாகமத்தில் இருக்கும் மேசியாவைப் பற்றிய அதே
தீர்க்கதரிசனங்கள் தான் யேசு கிறிஸ்து பூமிக்கு மனிதராக வந்து வாழ்ந்த
காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன்பும் இருந்தது என்பதைக் காண்கிறோம்.

பின்பு அத்தனை தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டபடியே நிறைவேறியதையும்
அறிவோம். இது வேதாகமம் தேவனால் கொடுக்கப்பட்டது என்பதற்கு அருமையான
சாட்சி.

இணையத்தில் சவக்கடல் எபிரேய ஏசாயா சுருளை முழுவதுமாக விரித்து
பார்க்கவும் மொழிபெயர்ப்பை காணவும் முடியும். இங்கே பார்க்கவும்…
http://dss.collections.imj.org.il/isaiah

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.