002 -- அப்போஸ்தலர் 01:01-02 தொடர்ச்சி.........

பெலனற்றவர்களுக்கு பெலன்கொடுத்து, சோர்ந்து போகிறவர்களுக்கு வாழ்வளிப்பதே
பரிசுத்த ஆவியின் செயல்முறையாகும்.

கிறிஸ்து ஒருபோதும் சுயமாகச்
செயல்படுவதில்லை. அவர் எப்போதும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் பிதாவின்
சித்தத்தையே உறுதியாக நிறைவேற்றினார். பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கிடையிலான முழுமையான ஐக்கியத்தை நம்முடைய அறிவினால்
புரிந்துகொள்ள முடியாது.

தொலைந்து போன இந்த உலகத்தில் தம்முடைய திருச்சபையைக் கட்ட வேண்டும்
என்றும் இவ்வுலகில் இறந்து கிடக்கும் மக்கள் நடுவில் பரலோகத்தை பரப்ப
வேண்டும் என்றும் பரிசுத்த திரித்துவம் நித்தியத்திலேயே
தீர்மானித்துவிட்டது.

கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டு, அழைத்து,
பயிற்சியளித்து, நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கட்டளைகொடுத்து
அனுப்பியதிலிருந்து இறைவன் தரும் விடுதலையின் வரலாறு ஆரம்பமாகிறது.

இந்த சாதாரண மீனவர்களில் இறைவனுடைய அன்பின் வல்லமை தங்கியிருந்தது என்பதை
அறிந்துகொண்ட லூக்கா கர்த்தர்
தெரிந்துகொண்ட இந்த மனிதர்களுடைய செயல்பாட்டை விளக்கினார்.

அவைகள்தான் உலகத்தில் நடைபெற்ற புதிய அற்புதங்களாகவும் மேன்மையான
எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கையாகவும் இருக்கின்றன.
இந்த அற்புதம் நடைபெற வழிசெய்யும்படி, உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய
சீடர்களோடு அரசனாக இருந்து அவர்களை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அரசாகப்
பரப்பும் செயலில் ஈடுபடவில்லை. அதற்கு மாறாக அவர் பரலோகத்திற்கு
எழுந்தருளிப் போனார்.

தம்முடைய சீடர்கள் தவறுசெய்து விடுவார்களோ என்று அவர் பயப்படவில்லை.
காரணம் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வாழ்ந்து அவர்கள் பணியை
முடிக்கும்படி அவர்களை வழிநடத்துவார் என்று அவர் அறிந்திருந்தார். அவர்
எந்தக் கவலையும் பயமும் இல்லாமல் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார்.

அவர் தம்முடைய பிதாவினிடத்திற்கு எழுந்தருளி, அவருடைய வலதுபக்கத்தில்
வீற்றிருந்து, அவரோடு ஆளுகை செய்து, அவருடைய பரிசுத்த திருச்சபையை இந்த
தீமைநிறைந்த உலகத்தில் கட்டிவருகிறார்.

அதற்காக அவர் இறைவனுக்கு எதிரான சக்திகளை மேற்கொண்டு, இலட்சக்கணக்கான
மக்களை விடுதலை செய்கிறார். மறைவாக இருக்கும் இறைவனுடைய அரசு இந்த
உலகத்தில்
வளர்ச்சியடைவதைக் கண்டு லூக்கா பெரிதும் ஆச்சரியப்படுகிறார்.

அவர் தம்முடைய இரண்டாவது புத்தகத்தில், எருசலேமில் தொடங்கி ரோமாபுரிவரை
அது எவ்விதமாகப் பரவியது என்பதை விளக்குகிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.