வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 அறிமுகம் :-

* வெளி 2:1-3:22 வரை உள்ள வசனங்கள் ஏழு சபைகளை பற்றி கூறுகிறது. இதில்
கூறப்பட்டுள்ள ஏழு சபைகளும் யோவான் காலத்து சபைகளாக இருந்தாலும்
இவைகளுக்கு எழுதப்பட்ட செய்திகள் இக்காலத்திலுள்ள சபைகளுக்கும்
பொருந்தும்.

* ஒவ்வொரு கபைக்கும் கிறிஸ்து கூறியதை ஆவியானவரின் அருளினால் யோவான்
எழுதினார். எனவே கிறிஸ்து கூறுவது போன்று தொடங்கி "ஆவியானவர்
சொல்லுகிறதை" என்று முடிவதை ஒவ்வொரு சபைக்கு எழுதிய கடிதத்திலும்
காண்கிறோம்.

* கிறிஸ்து ஆவியானவர் மூலம் பேசினார் என்று இதன் மூலம் அறிகிறோம்.

ஏழு சபைகளையும் குறித்து தியானிக்க ஒரு சுருக்கு வழி:-

நீங்கள் இந்த சபைகளை தியானிக்க விரும்பினால் ஒவ்வொரு சபையை குறிக்கும்
வசனங்களை படித்து அதில் நான் கீழே கொடுக்கும் கேள்விகளை எழுப்பி
அதற்க்கான பதிலை கண்டுபிடித்து தியானியுங்கள் மிகவும் ஆசீர்வாதமாக
இருக்கும். (ஒரு குறிபேட்டில் எழுதி தியானியுங்கள்).

எழுப்ப வேண்டிய கேள்விகள்:

1. முதலில் சபையின் பெயரை எழுதுக. (எ.கா.எபேசு)

2. அந்த சபையை குறித்த வசனங்களை எழுதுக. (எ.கா. எபேசு சபையை குறித்து
கூறும் வசனங்கள் வெளி 2:1-7)

3. அந்த பகுதியில் பேசுகிறவர் பற்றிய விளக்கம் என்ன?

4. சபையின் கிரியைகள் என்ன?

5. சபையின் நிலை என்ன?

6. சபையின் குறைகள் என்ன?

7. சபைக்கு கர்த்தரின் ஆலோசனைகள் என்ன?

8. சபைக்கு கர்த்தர் தரும் பாராட்டுகள் என்ன?

9. சபைக்கு கர்த்தர் தரும் எச்சரிப்புகள் என்ன?

10. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

மேலே உள்ள கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடித்த பிறகு நீங்கள் உங்களை
பார்த்து கேட்க்க வேண்டிய கேள்விகள்:

1. முதலில் சபையோடு பேசுகிற கர்த்தரை மனக்கண்ணால் கற்பனை செய்து பாருங்கள்.

2. இந்த ஏழு சபைகளில் காணப்படும் நற்கிரியைகள் என் சபையில் அல்லது
என்னிடத்தில் உண்டா? ஆம் என்றால் தேவனுக்கு நன்றி சொல்லி துதியுங்கள்
இல்லை என்றால் அதற்காக ஜெபியுங்கள்.

3. நான் இருக்கும் சபையின் நிலைமை என்ன? என்னுடைய நிலைமை என்ன? தேவன்
பாராட்டும் நிலைமையா அல்லது கண்டிக்கும் நிலைமையா?

4. இந்த ஏழு சபைகளில் உள்ள குறைகள் நம்மிடத்தில் உள்ளதா? ஆம் என்றால்
மனந்திரும்பி ஜெபிப்போம்.

5. தேவன் நமக்கு கொடுக்கும் ஆலோசனைகள் என்ன? அதை கவனத்தோடு பின்பற்றுவோம்.

6. கர்த்தரின் எச்சரிப்புகள் என்ன? இதை அற்பமாக என்னாமல் கர்த்தர்த்தர்
சொல்வதை செய்ய தீர்மானிப்போம்.

7. ஜெயம் கொள்ளுகிறவனுக்கு கிடைக்கும் பலனை நினைத்து துதிப்போம். நாமும்
ஜெயம் கொள்ளுகிற வாழ்க்கையை வாழ கர்த்தரிடம் கிருபை கேட்டு ஜெபிப்போம்.

மேலே கூறியபடி நீங்கள் எழுதி தியானித்து பாருங்கள் கர்த்தர் ஒரு
வித்யாசமான அனுபவத்திற்க்குள் உங்களை அழைத்து செல்வார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.