வேதாகம வரலாறு பாகம் 3

வேதாகம கால அட்டவணை (தொடர்ச்சி......)

*.பெர்க்லி பதிப்பு கி.பி 1959 (Berkely Version)
டாக்டர் பெர்க்லி தனது குழுவான 20 அறிஞர்களுடன் இந்த பதிப்பை கடினமான
பகுதிகளுக்கு அடிக்குரிப்புகளோடு விளக்கம் எழுதி வெளியிட்டார்.

*.எருசலேம் வேதம் கி.பி 1966 (the Jerusalem Bible)
எருசலேமிலுள்ள ரோமன் கத்தோலிக்க வேதாகம பள்ளியின் பாடங்களை சார்ந்து
வெளியிடபட்ட பதிப்பாகும். இது அதிக தெளிவாகவும் சரியாகவும், அறிஞர்களை
கொண்டு வெளியிடபட்டதாக காணப்படுகிறது.

*.புதிய ஆங்கில வேதம். கி.பி 1970 ( The New English Bible)
oxford மற்றும் cambridge அச்சகங்களின் 22 வருட முயற்சியினால் வந்த பதிப்பாகும்

*.புதிய அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள் கி.பி 1971 (The New American
standard bible)
லோக்மன் என்பவரின் ஆதரவோடு சுவிசேஷ அறிஞர்கள் 10 வருட பனியின் முடிவே
இந்த பதிப்பு.

*.லிவிங் பைபிள் கி.பி 1971 ( The Living Bible)
அமெரிக்காவை சேர்ந்த கென்னத் டெய்லர் சாதாரண மனிதனும் எளிதாக
புரிந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

*.குட் நியூஸ் பைபிள் கி.பி 1976 ( The good News Bible)
இன்றைய நடைமுறை ஆங்கில பதிப்பு. இறையியல் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு
சாதாரண பதங்கள் பயன்படுத்தபட்டிருக்கிறது.

*.நியூ இன்டர்நேஷனல் பதிப்பு கி.பி 1978 (The New International Version)
அகில உலக சுவிசேஷ அறிஞர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்பட்டது. இந்த
மொழிபெயர்ப்பு மிக சிறந்ததாகவும் ஏனைய பதிப்பை காட்டிலும் மேன்மை
உள்ளதாகவும் காணப்படுகின்றது.

*.நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பு கி.பி 1982
அகில உலக வேதாகம கல்வி சங்கமும் தாமஸ் நெல்சன் வெளியீட்டாரும் இணைந்து
119 வேத சாஸ்திர வல்லுனர்களை வைத்து இந்த மொழிபெயர்ப்பை செய்தனர். இதன்
முக்கிய நோக்கம் கிங் ஜேம்ஸ் பதிப்பின் இலக்கிய அழகை காத்து இன்றைய
பழக்கத்தில் உள்ள பதங்களை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட ஒரு முன்னேற்ற
பதிப்பாகும்.
இவ்விதமாக இன்று பழக்கத்தில் உள்ள பல வித வேதாகம பதிப்புகள் உருவாகின.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.