[2]செத்தவர்களுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் தெரியுமா? திரும்பி வரமுடியுமா?
செத்தவர்களுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் தெரியாது. அவர்கள் தாமாக
திரும்பி வரமுடியாது.
ஏனெனில் அதற்குரிய திறவுகோல்களை உடையவர் இயேசு ஒருவரே.
பிரசங்கி 9:5,6
மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை,
அவர்கள் பேர் முதலாய்
மறக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று;
சூரியனுக்குக் கீழே
செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.
யோபு 14:21.
"அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும்
அவர்களைக் கவனியான்."
யோபு 7:10.
"இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
ஏசாயா 38:18
மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை
தியானிப்பதில்லை.
ஏசாயா 40:24
அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய
அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை
எனவேதான் இறந்துபோன சாமுவேலுக்கு சவுலைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. சாமுவேலின் வடிவில் பேசியது பிசாசின் ஆவியே.
[3]பேசியது பிசாசா? எப்படி சாத்தியம்?
மூன்று வசனங்களை வாசியுங்கள்:
I இராஜாக்கள் 22:22
எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய்,
அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்
என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி
நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.
வெளி 16:14
அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்;
மத்தேயு 24:24
ஏனெனில்,
கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து
கொள்ளப்பட்டவர்களையும் (God's elect)
வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
எனவே ஒரு ஆவியின் வடிவிலோ, முதியவரின் வடிவிலோ, ஒளியையுடைய தூதனின்
வடிவிலோ (Angel of Light) அல்லது நீ எதில் ஏமாறுவாயோ அந்த வடிவில் வந்து
வஞ்சிக்கிறான்.
பிசாசுக்கு மரித்தோரை உயிர்ப்பிக்கும் சக்தி இல்லை. தேவன் பேசும்போது ஒரு
சமாதானம் இருக்கும். இங்கே பிசாசானவன் சவுலுடன் நாளை நீ சாவாய் நீயும்
உன் குமாரரும் என்னுடன் இருப்பீர்கள் என்று பயமுறுத்திச் சொல்கின்றான்.
சவுலும் போரில் தற்கொலைசெய்துகொண்டு சாகின்றான்.
தற்கொலையெல்லாம் பிசாசின் தந்திரம்.
[4]அப்படியானால் பிசாசுக்கு சவுல் நாளை மரிப்பது எப்படி தெரியும்?
சவுல் அஞ்சனம் பார்க்கும்படி போனதால்தான் தேவன் அவன்மேல் இன்னும் கோபமாகி
அவனை சீக்கிரத்தில் (மனுஷனுடைய கணக்கின்படி ஒருநாளில்) நீக்கிவிட்டார்
என்று நான் நினைக்கிறேன்.
எனவே அவன் நாளை மரிப்பான் என்பது பரலோகத்தில்
வெளியாக்கப்பட்டு (பொய்யின் ஆவிகள்) பிசாசானவன் பாதி உண்மையினை
சொல்லுகிறான். அஞ்சனம் பார்க்கப்போகாமலிருந்தால் சவுல் ஒருவேளை இன்னும்
கொஞ்சம்நாள் பூமியில் வாழ்ந்திருக்கக்கூடும்.
(இதற்கான காரணம் கீழேயுள்ள வசனங்கள்)
[5]சவுல் செத்ததற்கான இரண்டு காரணங்கள்:
I நாளாகமம் 10:13
அப்படியே சவுல்
[1] கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன்
துரோகத்தினிமித்தமும்,
[2] அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக்
கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்.
இந்த இரண்டும் காரணம். ஒன்று மட்டும் காரணம் அல்ல.
நீ அஞ்சனம் பார்க்கும்படியோ, குறிகேட்கும்படியோ போனால், தேவன் மிகவும்
கோபமடைவார். உன் ஆயுசு குறையும். ஏனெனில் நீ பிசாசை நாடுகிறாய்.
ஆயுள் குறையுமா?
ஆமாம்!
நீதிமொழிகள் 10:27
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்;
துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
நீதிமொழிகள் 5:8, 9
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச்
சேராதே.சேர்ந்தால் உன் மேன்மையை
அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
லேவியராகமம் 20:27.
அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லு
கிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும்
கொலைசெய்யப்பட
வேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக;
உபாகமம் 18:11
மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில்
குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
எப்படி ஒரு அஞ்சனம் பார்க்கும் பெண் சாமுவேலை இறந்தபின் வரவழைத்து அவனுடன் பேசினாள்? அவளுக்கு அந்த சக்தி எப்படி ... ? பாகம் 2
0
April 04, 2016
Tags