எப்படி ஒரு அஞ்சனம் பார்க்கும் பெண் சாமுவேலை இறந்தபின் வரவழைத்து அவனுடன் பேசினாள்? அவளுக்கு அந்த சக்தி எப்படி ... ? பாகம் 1

இதற்கு அநேகர் தவறான விடையுடனும், சிலர் வியப்படைந்து பதில் தெரியாமல்
போயும் உள்ளனர்.
வேதத்திலே என்ன சொல்லப்பட்டுள்ளது என பார்ப்போம்.

முன்னுரை:-

சவுல் தாவீதை கொல்லும்படி தேடினான். காரணம் ஜனங்கள் சவுல் கொன்றது 1000,
தாவீது கொன்றது 10,000 என்று பாடியதால் தாவீதின் மேல் அவனுக்கு வெறுப்பு
ஒரு புறம் உண்டாகிவிட்டது.

தனக்குப்பின் ராஜாவாகுவான் என்று சவுல் அறிந்தும் அவன் எங்கே தான்
இருக்கும்போதே ராஜாவாகிவிடுவானோ என்ற பயம் ஒரு புறம்.

கர்த்தர் சொன்னபடி சவுல் செய்யாமல் போனதால் கர்த்தர் சவுலைவிட்டு
நீங்கினார், ஒரு பொல்லாத ஆவி அவனை அவ்வப்போது கலங்கப்பண்ணினது.

சவுல் பெலிஸ்தியர்கள் யுத்தத்துக்கு வந்தபோது கர்த்தர் அவனுக்கு
சொப்பனத்திலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு
அருளவில்லை. எனவே அவன் எந்தோரில் வசிக்கும் அஞ்சனம் பார்க்கும் பெண்ணைத்
தேடிப் போகிறான்.

அஞ்சனம் பார்க்கும் பெண் - ஆவியுடன் பேசும் குறிசொல்லுதல் என தமிழிலும்,

Woman with familiar spirit - a spirit (usually in animal form) that
acts as an assistant to a witch or wizard என ஆங்கிலத்திலும்,

.אוב'Owb' or 'Aub' - which means a sorcerer or necromancer என எபிரேய மொழியிலும்
சொல்லப்பட்டுள்ளது.

[1]தேவர்கள் பூமிக்குள்ளிருந்து எப்படி வந்தார்கள்?"

அஞ்சனம் பார்க்கும் பெண் "தேவர்கள் பூமிக்குள்ளிருந்து வருகிறார்கள்"
[gods are ascending out of the earth] என்றாள்.

தேவர்கள் பூமிக்குள்ளிருந்து வரமுடியாது.இது வேதத்துக்கு மாறான வாக்கியம்.
தேவதூதர்களும் தேவனும் பரலோகத்தில் இருக்கிறார்கள்.
பிசாசானவன் பாதி பொய்யும் கொஞ்சம் உண்மையும் கலந்து பேசுவதில் மிகவும்
தந்திரசாலி. [ஏவாளிடம் நீங்கள் சாகவே சாவதில்லை என்று பொய் சொன்னான்.

ஆனால் சாப்பிட்ட அந்த நாளே அவள் இறந்து போனாள் (கர்த்தருக்கு 1000 வருடம்
ஒருநாள்) ].

அப்படியானால் அஞ்சனம் பார்க்கும் பெண் எப்படி தேவர்களைப் பார்த்தாள்?

பூமிக்குள் இருந்து வந்தவை தேவர்கள் அல்ல, பிசாசின் ஆவிகள். நன்றாக
கவனியுங்கள், இவைகள் சவுலின் கண்களுக்கு தெரியவில்லை.

சவுல் இரண்டு கேள்விகள் கேட்கிறான்.

ஒன்று "நீ காண்கின்றது என்ன?"

அவள் சொன்னாள் "தேவர்கள் (பிசாசின் ஆவிகள்) பூமிக்குள்ளிருந்து வருகிறார்கள்".

இரண்டாவது, "அவருடைய ரூபம் என்ன?"

இதற்குப்பின் அவள் சொன்னது "ஒரு முதியவர் சால்வை போர்த்திக்கொண்டு வருகிறார்".

இரண்டு இடங்களிலும் சவுலின் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு உருவம்
எப்படி தோற்றமளித்தால் நீ நம்புவாய் என்று பிசாசு நன்றாக
அறிந்திருக்கிறான் என்பதற்கு இது மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு.

எப்படியெனில், சாமுவேல் உயிரோடிருந்த காலத்தில்
I சாமுவேல் 15:27"
சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப்
பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று" என்று வாசிக்கிறோம்.

சால்வை போர்த்தியவர் என்பதால் அவர் சாமுவேல்தான் என்று நம்பினான். இது
பிசாசின் அற்புதம், அடையாளம் செய்யும் சக்தி.

சாமுவேல் வடிவில் வந்து பேசியது பிசாசின் ஆவிதான், சாமுவேல் அல்ல. இதை
என்னால் விளக்க முடியும்.

அதை பாகம் 2ல்
எழுதுகிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.