முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் வெளிபடுத்தப்பட்டுள் தேவனுடைய பெயர்களை
அவற்றின் மூலமொழியில் இருந்து காண்போம்.
குறிப்பு:-
இக்கட்டுரையில் வரும் தேவனுடைய பெயர்கள் வேதத்தின் பல இடங்களில்
எழுதப்பட்டு இருந்தபோதிலும் ஒவ்வொன்றிற்கும் ஒன்று அல்லது இரண்டு
வசனங்கள் மட்டுமே எடுத்துகாட்டாக தரப்பட்டுள்ளது.
I. முதன்மையான பெயர்கள்:-
1. #ஏலோஹீம்:
* #ஏலோவா, #ஏலா அல்லது #ஏல் என்ற சொல்லை தழுவிய சொல்லாக #ஏலோஹீம்
அமைந்துள்ளது. இது பன்மையாகவும் (ஆதி 1:26; 3:22) சில இடங்களில்
ஒருமையாகவும் (சங் 45:7) பயன்படுத்த பட்டுள்ளது.
* ஆங்கிலத்தில் Sheep என்ற சொல் பன்மையாகவும் ஒருமையாகவும்
பயன்படுத்துவது போல இந்த சொல் பயன்படுத்தபடுகிறது.
* பழைய ஏற்பாட்டின் தமிழ்மொழியாக்கத்தில் இது #தேவன் என்று பலமுறை
எழுதப்பட்டுள்ளது.
* ஆதி 1:1 ல் யாவற்றையும் படைத்ததை கூறும்போது இச்சொல் முதல் முறையாக
பயன்படுத்தப்பட்ட படியால் இச்சொல் #படைக்கிறவர் (சிருஷ்டிகர்) என்று
பொருள்படும் என கருதப்படுகிறது.
* #ஏலோவா, #ஏலா என்ற சொல்லிலிருந்து #ஏலோஹீம் வந்தது என்று கருதுவதால்
#வணங்கப்படதக்கவர் என்றும், #ஏல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்று
கருதுவதால் #வல்லமையுள்ளவர் என்றும் இதற்கு பொருள் கூற * #ஏலோவா, #ஏலா
என்ற சொல்லிலிருந்து #ஏலோஹீம் வந்தது என்று கருதுவதால் #வணங்கப்படதக்கவர்
என்றும், #ஏல் என்ற சொல்லிலிருந்து வந்தது என்று கருதுவதால்
#வல்லமையுள்ளவர் என்றும் இதற்கு பொருள் கூற முடியும்.
* #ஏலோஹீம் பன்மை சொல்லாகவும் இருப்பதால் தேவத்துவத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட நபர்கள் இருப்பதை இது வெளிபடுத்துகிறது.
(http://mcsk.wapka.mobi என்ற முகவரியில் வேதாகம புதையல்கள் என்ற
பக்கத்தில் திரித்துவம் என்ற கட்டுரையை காண்க).
* #தேவன் என்ற தமிழ் சொல்லை (தமிழிலிருந்து வடமொழிக்கு அல்லது வடமொழியில்
இருந்து தமிழுக்கு) பயன்படுத்துவதை மாற்றி #இறைவன் அல்லது #கடவுள் என்று
கூற வேண்டும் என்று பலர் முயற்சி செய்கின்றனர்.
* #தேவன் என்பது தேவி என்ற சொல்லையும் பல தேவர்களை குறிப்பதான #தேவர்கள்
என்ற சொல்லையும் சேர்ந்தது என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என்பது
அவர்களின் வாதம்.
* ஆனால், #ஏலோஹீம் என்ற சொல் (1இரா 11:5,33) ல் #தேவி என்றும் (யாத்
12:12; 20:3) போன்ற பல இடங்களிலும் #தேவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
என்பதை கருத்தில் கொண்டால் #இறைவன், #கடவுள் என்ற எந்த சொல்லையும் விட
#தேவன் என்ற சொல்லே #ஏலோஹீம் என்பதற்கு பொருத்தமானது என்பது
மறுக்கமுடியாத உண்மை.
* #தேவாதிதேவன் (Elohim of Elohim) என்று எழுதப்பட்ட உபா 10:17; சங்
136:2 போன்ற பகுதிகளுக்கு பொருத்தமான சொல் #தேவன் என்ற சொல்லே.
* புதிய ஏற்பாடிலும் Theos என்ற கிரேக்க சொல்லுக்கு #தேவன் என்பதே
பொருத்தமான சொல் ஆகும்.
* #ஏலோஹீம் என்ற சொல் 1இரா 18:38 ல் #தெய்வம் என்றும் யோனா 1:6 ல்
#சுவாமி என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேவனுடைய முதன்மை பெயர்களையும் அதன் பொருளையும் கீழே காண்போம்:
குறிப்பு:-
கீழே கொடுக்கபட்டுள்ளதில் "எ" என்பது எபிரெய மொழியையும், "த" என்பது
தமிழையும், "பொ" என்பது பொருளையும் குறிக்கும் சொல்லாகும்.
* எ- ஏலோஹீம்
த- தேவன்
பொ- யாவையும் படைகிறவர், வணங்கப்பட தக்கவர், வல்லமையுள்ளவர்.
ஆதி 1:1
* எ- ஏல்
த- தேவன்
பொ- வல்லமையுடையவர்.
ஆதி 35:1
* எ- ஏலோவா
த- தேவன்
பொ- வணங்கபடதக்கவர், வணங்கப்படும் பொருள்.
உபா 32:15
* எ- ஏலா
த- தேவன்
பொ- வணங்கபடதக்கவர், வணங்கபடும் பொருள்.
எஸ்றா 4:24
* எ- கர்
த- கன்மலை
பொ- கன்மலை
ஏசா 44:8
* எ- அதோன்
த- ஆண்டவர்
பொ- ஆட்சி செய்கிறவர்
யாத் 23:17
* எ- அதோனை
த- ஆண்டவர், சில இடங்களில் கர்த்தர்
பொ- எஜமான், உரிமையாளர்
உபா 10:17; ஆதி 18:3
* எ- மேர்
த- ஆண்டவர்
பொ- உன்னதமானவர், உயர்ந்தவர்
தானி 2:47; 5:23
* எ- யேகோவா (யாவே)
த- யேகோவா, கர்த்தர்
பொ- நிலையாக இருகிறவர் உடன்படிக்கையையும், வாக்குதத்ததையும்
நிறைவேற்றுகிறவர். தம்மை வெளிப்படுத்துகிற என்றும் வாழ்பவர்.
ஆதி 4:1
* எ- யா (Yah)
த- யேகோவாவின் சுருக்கம்
பொ- யேகோவா என்பதற்கான பொருளே இதற்கும் பொருந்தும்
யாத் 15:2
* எ- யெஹெயே அஷெர் யெஹெயே
த- இருக்கிறவராக இருக்கிறேன்
பொ- என்றும் இருப்பவர், மாறாதவர்
யாத் 3:14
* எ- யெஹெயே
த- இருக்கிறேன்
பொ- என்றும் இருப்பவர், மாறாதவர்
யாத் 3:14