இயேசு கிறிஸ்துவுக்கும், பஸ்கா ஆட்டுக்குட்டிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்

பஸ்கா பண்டிகை
(யாத் 12: 1-14) - முதல் மாதம் ஆபிப் 14

இயேசு கிறிஸ்துவுக்கும், பஸ்கா ஆட்டுக்குட்டிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:

1. ஆபிப் மாதம் 10ம் நாளில் , தேசத்திற்கான பஸ்கா ஆட்டுக்குட்டி
நகரத்திலிருந்து ஆலயத்திற்கு பவனி வரும். வழியெங்கும் ஜனங்கள்
குருத்தோலைகளை ஏந்தி சங்கீதம் 118 ஐ பாடி மகிழ்வார்கள்.

பஸ்கா ஆடு பவனி சென்ற உடனே இயேசு கிறிஸ்து கழுதையின் மீது ஏறினவராய் பவனி
வந்தார். அவர் செய்த அதிசயங்களையும், அற்புதங்களையும் அறிந்திருந்த
ஜனங்கள் அவரையும் வரவேற்று வாழ்த்தி பாடல் பாடி மகிழ்ந்தனர். பஸ்கா ஆடு
சென்ற அதே பாதையில் தான் அவரும் ஆலயம் சென்றார்.

2. நான்கு நாட்கள் பஸ்கா ஆட்டுக்குட்டி ஆலயத்தில், அது பழுதற்ற குறையற்ற
ஆடு என்று அனவரும் காணும்படி வைக்கப்பட்டிருக்கும்.

அது போல் இயேசு கிறிஸ்துவும் 4 நாட்கள் பிரதான் ஆசாரியர், வேத பாரகர்,
பரிசேயர், சதுசேயரால் பல கேள்விகள் கேட்கப் பட்டார். என்றாலும்
அவரிடத்தில் ஒரு குற்றமும் அவர்களால் காண முடியவில்லை. அவர்
பழுதற்றவராயிருந்தார். பின்பு பிலாத்துவும், ஏரோதும் கூட அவரிடத்தில் ஒரு
குற்றமும் காண முடியவில்லை.
(மத் 21:23-27,
மத் 22:23-46,
மத் 26:59,60,
மத் 27:23,
லூக் 23:4,14,15,
யோவான் 19:6)

3. பஸ்கா ஆடு ஆபிப் 14ம் தேதி காலை 9.00 மணிக்கு பலிபீடத்தில் கட்டப்படும்.

இயேசு கிறிஸ்துவும் 9.00 மணிக்கு சிலுவையில் அறையப்பட்டார்.

4. பஸ்கா ஆடு ஆபிப் 14ம் தேதி மாலை 3.00 மணிக்கு கொல்லப்படும்.

இயேசு கிறிஸ்துவும் 3.00 மணிக்கு சிலுவையில்
ஜீவனை விட்டார்.

5. பிரதான் ஆசாரியன் பஸ்கா ஆட்டை அடித்தவுடன் முடிந்தது என்று சொல்வான்.

அதே சமயத்தில் சில மைல் தொலைவில் நம் பிரதான் ஆசாரியர் இயேசு
கிறிஸ்துவும் முடிந்தது என்று சொன்னார்.

6. பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்பொன்றும் முறிக்கப்படக் கூடாது என்பது கட்டளை.

அப்படியே இயேசு கிறிஸ்துவும் எலும்புகள் முறிக்கப்படாமல் இறந்தார்.

பிற தகவல்கள்:

பஸ்கா ஆடு நெருப்பினால் சுடப்படும் போது , உள்ளும் புறமும் நன்றாக
வேகும்படி இரண்டு கம்புகளை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டிற்குள்
செலுத்தித்தான் சுடுவார்களாம்!.

இந்த கம்புகள் சிலுவையைக் குறிப்பது போல் இருக்கிறது.

பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை நிலைக் காலின் மேலும், இடது வ்லது
நிலைகால் கம்புகளிலும் பூச வேண்டும். பூசும் போதும் மேலிருந்து இரத்தம்
கீழும் வடியும்.

இது ஒரு சிலுவை அடையாளமாகிறது. இயேசு கிறிஸ்துவின் கை கால்
தலையிலிருந்து வடிந்த இரத்தத்தைக் குறிப்பது போல் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து பஸ்காவை தன் சீஷர்களுடன் அந்த நாளின்( ஆபிப் 14) ஆரம்பத்திலேயே
(முந்திய நாள் இரவிலே) அனுசரித்து விட்டார்.

யூதர்களின் நாள் சாயங்காலம் ஆரம்பிக்கும். ஆபிப் 14 முந்திய நாள்
சாயங்காலமே ஆரம்பித்து விடும்.

ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிக்கும்படி 7 பண்டிகைகளை கட்டளையிட்டார்.
அவை அனைத்திற்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் சம்பந்தம் இருக்கிறது.

பண்டிகைகள் நிழல்.
இயேசு கிறிஸ்து பொருள்.


__________________

இன்னும் சில தகவல்கள்:

ஆணி கையின் நடுவில் அல்ல, மணிக்கட்டில் தான் அடிக்கப் பட்டது என்று சொல்கிறார்கள்.

இயெசு கிறிஸ்து முழு சிலுவையையும் சுமந்து கொண்டு செல்லும்படி தான்
படங்கள் வரைகிறார்கள். அது அப்படியல்ல, குறுக்குக் கட்டையைத் தான்
ஆண்டவர் சுமந்து கொண்டு வந்தாராம். அந்த கட்டையை இரண்டு கையோடும்
சேர்த்து பின்னால் கட்டி விடுவார்களாம்.

அவர் தடுமாறி கீழே விழும்போது முகம்தான் நேரே தரையில் பட்டு அடி படுமாம்.
__________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.