இலவங்கப்பட்டை
~~~~~~~~~~~~~~
இலவங்கப்பட்டை பற்றி பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு இடங்களில் மட்டும் தெளிவாக
தெரிவிக்கப்பட்டுள்ளன.
நறுமணம் மிக்க அபிஷேக தைலம் தயாரிக்க உபயோகிக்கப்படும் மணப்பொருள்களில்
ஒன்று இலவங்கப்பட்டை என்று யாத்திராகமப் புத்தகம் சொல்கிறது.
'உன் நண்பனை சொல்லு உன்னை சொல்கிறேன்' என்றொரு பழமொழியுண்டு.
இலவங்கப்பட்டையின் நான்கு நண்பர்களும் நறுமணம் கமழ்பவர்களே.
அவைகள் :
வெள்ளைப்போளம்,
குங்குலியம்,
கந்தவர்ககம்,
சாம்பிராணி.
நம் வாழ்வில் நல்ல நட்பு மிக முக்கியமானது. நல்ல நண்பர்களை நிலைநிறுத்த
நாம் அதிக பிரயாசம் எடுக்க வேண்டும்.
நம் நட்பு செவ்விய வாழ்க்கை வாழும் சான்றோருடன் இருக்க வேண்டும். நாம்
மனமாய் இருப்பது போல நம்மைச் சார்ந்தவர்களையும் மணம் பெறச் செய்ய
வேண்டும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளரும் ஒரு வகை செடியிலிருந்து இலவங்கப்பட்டை கிடைக்கிறது.
ராஜாவின் உடைகள் இலவங்கப்பட்டையின் சேர்க்கையால் மணம் பெறுகிறது என்று
சங்கீத புத்தகத்தில் வேதம்
குறிப்பிடுகிறது.
நம் நட்பு நறுமணம் மிக்கதாய் மணம் பரப்பட்டும்
ஆதார வசனங்கள்:
யாத் 30:24,
சங்கீ 45:8