மிருதுச்செடி ❦
திருமறையில் வரும் மிருதுச்செடியை ஓர் உண்மையான
இறைமாந்தனுக்கு உவமையாக ஒப்பிடலாம்.
மிருது மகிழ்ச்சிமிகு
அழகான புதர்ச்செடி. இவைகள் இருண்ட பச்சை நிறமாகவும்,
கண்ணாடிபோன்று பளபளப்பாகவும் காணப்படும்.
நட்சத்திரங்கள்போன்று வெண்ணிறப்பூக்கள் கொத்துக் கொத்தாய்
பூத்துக் குலுங்கும்.
{{ நட்சத்திரம் }}
=============
மானுடன் என்பான் நட்சத்திரங்கள் போன்று பிரகாசிக்கவேண்டும்.
ஒவ்வொரு மானுட ஜீவியும் ஒவ்வொரு நட்சத்திரம். எனவேதான், கடவுள்
நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி
அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். (சங்கீதம் 147:4)
{{ நறுமணம் }}
=============
மிருதுப்பூக்கள்
நறுமணம்கொண்டவை. கிறிஸ்துவை உடைய ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு
நறுமணமாய் விளங்கிட வேண்டும்.
(2 கொரி 2:15)
இறைபக்தன் ஒருவன் இன்னலுறும் போதுதான் அவனது பற்றுறுதி இன்னும் அதிகமாக
வெளிப்படும். தானியேல் சிங்கக் குகையில் இல்லாவிட்டால் அவருக்குச்
சரித்திரமேது?
{{ தனித்துவம் }}
=============
பாலஸ்தீன நாட்டிற்கே உரிய செடியாக விளங்குகிறது மிருதுச்செடி. கிறிஸ்தவன்
என்பான் பிரித்தெடுக்கப்பட்ட புதிய படைப்பு. தனி வார்ப்பு. (2 கொரி 6:17)
{{ பிரயோஜனம் }}
================
மிருதுச்செடியின் பூக்களை மணப்பெண்கள் மகிழ்ச்சியுடன் அணிவர். கருமையான
அதன் கனிகள் இனிமையாக இருக்கும். கிறிஸ்தவன் பயனுறு மாந்தனாக விளங்க
வேண்டும். முன்பு, பிரயோஜனமற்றிருந்த ஒநேசிமு பின்பு
பிரயோஜனமுள்ளவனானான்.
இஸ்ரவேல் மக்கள் கூடாரப்பண்டிகை நாட்களில் தங்குவதற்குக் கூடாரங்கள்
உண்டுபண்ண உபயோகிக்கும் மரக்கிளைகளில் மிருதுச்செடியும் ஒன்றாகும். (நெகே
8:15)
{{ மறுமலர்ச்சி }}
==============
"காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்" என்ற ஏசாயா தீர்க்கனின்
முன்னறிவிப்பு சமுதாய மறுமலர்ச்சியைக் குறிப்பிடுகிறது.
( ஏசாயா 55:13)
முட்செடிக்குப் பதிலாக மணமிகு மிருதுச்செடி முளைப்பது தீமையை
நன்மையாக்குவது போன்றது.
கசப்பை இனிப்பாக மாற்றுவது போன்றது.
இது தனி மனித மாற்றத்தை,
திருச்சபையின் ஏற்றத்தை,
சமூகப் புனிதப்புரட்சியை காட்டுகிறது.
மிருதுச்செடிகளின் மத்தியிலிருந்தே கர்த்தருடைய தூதன் சகரியாவிற்கு
காட்சிதரும் மாட்சி எத்தனை பெரிய மகிழ்ச்சி! (சகரியா 1: