கி.பி 670 வரை லத்தீன்
மொழிபெயர்ப்பான
வல்கேட் 4 நூற்றாண்டில்
ஜெரோமினால்
எழுதபட்டு
நடைமுறையில் இருந்து
வந்தது. கி.பி 670 வரை
லத்தீன் மொழிபெயர்ப்பான
வல்கேட் 4 நூற்றாண்டில்
ஜெரோமினால்
எழுதபட்டு
நடைமுறையில் இருந்து
வந்தது.
விக்கிளிப் வேதம்
(கி.பி 1320 -1384 ) John
Wycliff
முதன் முறையாக
இங்கிலாந்தை சேர்ந்த
விக்கிளிப் என்பவர்
வல்கேட்டிலிருந்து
வேதாகமத்தை
ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தார். இது
வல்கேட்டிளிருந்த சில
தவறுகளை
ஆங்கிலத்திலும்
கொண்டு வந்தது.80
புத்தகங்களும் மொழி
பெயர்க்கபட்டது.
குடென்பெர்க் (கி.பி
1455) குடென்பெர்க்
குடென்பெர்க் அச்சகத்தை
கண்டு பிடித்தார்.
வேதாகமம் கையினால்
எழுதப்படாமல் மாறாக
அச்சிடப்படும் காலம்
வந்தது. குடென்பெர்க்
மூலம் அச்சிடப்பட்ட முதல்
வேதாகமம் லத்தீன்
மொழியில் அமைந்தது.
1516 கிபி: எராஸ்மஸ்
என்பவர் ஒரு லத்தீன் /
கிரேக்கம் மொழிகளில்
புதிய ஏற்பாடை
தயாரித்தார்.
1522 கிபி: மார்ட்டின்
லூதர் புதிய ஏற்பாடை
மொழி பெயர்த்தார்.
1526 கிபி: வில்லியம்
டின்டேல் புதிய
ஏற்பாடு ஒன்றினை
தயாரித்தார்; ஆங்கில
மொழியில்
அச்சிடப்பட்ட முதல்
புதிய ஏற்பாடு.
1535 கிபி: Myles
கவர்டேல் பைபிள்;
அச்சிடப்பட்ட முதல்
முழுமையான
பைபிள். ஆங்கில
மொழி (80 புத்தகங்கள்:
புதிய ஏற்பாடு,
பழைய ஏற்பாடு மற்றும்
உறுதிப்படாதவை)
1537 கிபி: டின்டேல்
மத்தேயு பைபிள் ;
எட்டாம் ஹென்றி ராஜா
ஜான் ரோஜருக்கு
புதிய வெளியீட்டான
மத்தேயு வேதாகமத்தை
வெளியிட அனுமதி
கொடுத்தார். இவர்
டிண்டேளின் நண்பர்
ஆவர்.
1539 கிபி: "கிரேட்
பைபிள்"
அச்சிடப்பட்டது; முதல்
ஆங்கில மொழி
வேதாகமம் (80
புத்தகங்கள்). மக்களின்
பொது பாவனைக்காக
அங்கீகரிக்கப்பட்ட
வேதாகமம். இந்த வேதம்
மத்தேயு பைபிள்
டின்டேல் பைபிள்
மற்றும் எபிரேயு
பைபளையும்
ஒப்பிட்டு மொழி
பெயர்க்கபட்டது.
1560 கிபி: ஜெனீவா
பைபிள் அச்சிடப்பட்டது
(80 புத்தகங்கள்). இளவரசி
மேரியினால் உண்டான
உபத்திரவத்தில் அநேக
அறிஞர்கள்
ஜெனிவாவுக்கு
சென்றனர். அங்கே
மொழி பெயர்ப்பு
செய்து எலிசபெத்
இளவரசி ஆனா பின்பு
தங்கள் நாடு திரும்பி
அந்த வேதாகமத்தை
பரிசாக இளவரசிக்கு
அளித்தனர்.
1568 கி.பி: ஆயர்கள்
பைபிள்
அச்சிடப்பட்டது (The
Bishops Bible) .ஒன்பது
பிஷப்புகள் கேண்டர்பரி
மத்தேயு பார்க்கருடன்
இணைந்து வெளியிட்ட
பதிப்பு.
1609 கிபி: Douay version
ரோமன்
கத்தோலிக்கர்களுக்காக
ஆங்கில முதல்
முழுமையான
கத்தோலிக்க பைபிள்.
லத்தீன் வல்கேட் (80
புத்தகங்கள்) இருந்து
மொழிபெயர்த்தது.
1611 கிபி: கிங் ஜேம்ஸ்
பைபிள்
சிறந்த வேதம் எது
என்கின்ற பிரச்சனையை
கிறிஸ்தவர்கள்
மத்தியிலிருந்து
அகற்ற முதலாம் James
மன்னர் கி.பி 1604 இல்
புதிய
வெளியீட்டிற்கு
அனுமதி வழங்கினார்.
இதையே king james
பதிப்பு என்று
அழைக்கின்றோம்.
ஐம்பத்தி நான்கு
அறிஞர்கள் 6
குழுக்களாக
பிரிக்கப்பட்டு
ஒவ்வொரு குழுவும்
ஒவ்வொரு பகுதியை
மொழி பெயர்த்தது.
பின்னர் முழு
குழுவும் தங்கள்
பணியை ஆராய்ந்து
ஒவ்வொரு
பகுதியையும்
திருத்தி சிறப்பாக
அமைத்தனர். இறுதியாக
தீர்மானிக்கின்ற குழு
திருத்தம் செய்து
முடித்தது.
மற்ற ஆங்கில வேதத்தை
மொழிபெயர்க்கும்
பொழுது இருந்த
ஆதாரங்களை
காட்டிலும்
இவர்களுக்கு அதிக
ஆதாரங்கள் இருந்தது.
பழைய ஏற்பாட்டை
மொழி பெயர்க்க
நான்கு மசசொறேடிக்
(Massoretic text )
பிரதிகளும், புதிய
ஏற்பாட்டை
மொழிபெயர்க்க
பாசவினால் (இவர்
கால்வின் குழுவில்
இருந்தவர்)
திருத்தியமைக்கப்பட
கிரேக்க text ம்
பயன்படுத்தபட்டன.
அயராத ஆறு வருட
கடின உழைப்பிற்கு
பின் ஒவ்வொரு
வார்த்தைக்கும்
தெளிவான பதத்தை
கண்டு பிடித்து
மொழிபெயர்த்து
கடைசியாக 1611 ல் இந்த
பதிப்பை
வெளியிட்டார்கள்.
1629 ,1638 ,1672 ,1769 இந்த
வருடங்களில் அநேக
திருத்தங்கள்
செய்யப்பட்டு
முன்னேற்றப்பட்டிருந்த
ும் மூன்று
நூற்றாண்டுக்கு
பிறகும்கூட
வாசிக்ககூடியதாகவு
ம்
விநோயிகிக்ககூடிய
தாகவும்
இருக்கின்றது.
திருத்திய பதிப்பு
(the revised version )
கிங் ஜேம்ஸ்
பதிப்பிற்கு பிறகு
மொளிபெயர்ப்பிட்கு
பயங்கரமான எதிர்ப்பு
வந்தது. இருந்தாலும்
திருத்திய பதிப்பு
அமெரிக்க ஆங்கில
அறிஞர்களின்
திறமையால்
வெளிவந்தது.
அமெரிக்கன்
ஸ்டாண்டர்ட் பதிப்பு:
கி.பி 1901 (The American
standard version)
ரிவைஸ்ட் பதிப்பின்
திருத்தும் ஆலோசனை
குழு தங்களுடைய
வேலையையும்
ஆராய்ச்சியையும் 1885
ல் தொடர்ந்தனர்.
மீண்டுமாக
மொழிபெயர்த்தனர்.
அதனிமித்தம்
மூலபாஷயோடு அதிக
ஒத்திருக்கிறது. டாக்டர்
வில்லியம் கிரீன் இதற்கு
தலைவராக இருந்தார்.
தி ரிவைஸ்ட்
ஸ்டாண்டர்ட் பதிப்பு.
கி.பி 1952 ( The Rivised
standard version)
திருத்தப்பட்ட ரிவைஸ்ட்
பதிப்பு தான் "தி
ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட்
பதிப்பு". தேசிய
கிறிஸ்தவ சபையின்
ஆலோசனை சங்கம் 32
அறிஞர்கள் அடங்கிய
குழுவிற்கு
அதிகாரம் வழங்கி இதை
செய்தது. இப்படி 1937 ல்
தொடங்கி 1952 ல்
முடிக்கப்பட்டது.
நேர்முறை பேச்சுக்கள்
மேற்கோளிட்டு
எழுதப்பட்டிருக்கிறது.
இன்று இந்த குழு
தொடர்ந்து அகில உலக
ஐக்கிய குழுவாக
செயல்பட்டு
வருகிறது. 1973 ல்
முதல் பதிப்பு
வெளிவந்தது.
Amplified பதிப்பு கி.பி
1958 (Amplified Version)
கலிபோனியா வை
சேர்ந்த 12 ஆசிரியர்கள்
பொருத்தமான
வேறுசில
விளக்கங்களை
கொடுத்து விரிவான
பதிப்பாக
வெளியிட்டனர்.
பெர்க்லி பதிப்பு
கி.பி 1959 (Berkely
Version)
டாக்டர் பெர்க்லி தனது
குழுவான 20
அறிஞர்களுடன் இந்த
பதிப்பை கடினமான
பகுதிகளுக்கு
அடிக்குரிப்புகளோட
ு விளக்கம் எழுதி
வெளியிட்டார்.
எருசலேம் வேதம்
கி.பி 1966 (the Jerusalem
Bible)
எருசலேமிலுள்ள
ரோமன் கத்தோலிக்க
வேதாகம பள்ளியின்
பாடங்களை சார்ந்து
வெளியிடபட்ட
பதிப்பாகும். இது
அதிக தெளிவாகவும்
சரியாகவும்,
அறிஞர்களை கொண்டு
வெளியிடபட்டதாக
காணப்படுகிறது.
புதிய ஆங்கில வேதம்.
கி.பி 1970 ( The New
English Bible)
oxford மற்றும் cambridge
அச்சகங்களின் 22 வருட
முயற்சியினால் வந்த
பதிப்பாகும்
புதிய அமெரிக்கன்
ஸ்டாண்டர்ட் பைபிள்
கி.பி 1971 (The New
American standard bible)
லோக்மன் என்பவரின்
ஆதரவோடு சுவிசேஷ
அறிஞர்கள் 10 வருட
பனியின் முடிவே இந்த
பதிப்பு.
லிவிங் பைபிள் கி.பி
1971 ( The Living Bible)
அமெரிக்காவை சேர்ந்த
கென்னத் டெய்லர்
சாதாரண மனிதனும்
எளிதாக
புரிந்துகொள்ளும்
வகையில் நடைமுறை
ஆங்கிலத்தில்
வெளியிட்டார்.
குட் நியூஸ் பைபிள்
கி.பி 1976 ( The good News
Bible)
இன்றைய நடைமுறை
ஆங்கில பதிப்பு.
இறையியல் வார்த்தைகள்
தவிர்க்கப்பட்டு சாதாரண
பதங்கள்
பயன்படுத்தபட்டிருக்கிற
து.
நியூ இன்டர்நேஷனல்
பதிப்பு கி.பி 1978 (The
New International Version)
அகில உலக சுவிசேஷ
அறிஞர்களின் கூட்டு
முயற்சியால்
வெளியிடப்பட்டது. இந்த
மொழிபெயர்ப்பு மிக
சிறந்ததாகவும் ஏனைய
பதிப்பை காட்டிலும்
மேன்மை உள்ளதாகவும்
காணப்படுகின்றது.
நியூ கிங் ஜேம்ஸ்
பதிப்பு கி.பி 1982
அகில உலக வேதாகம
கல்வி சங்கமும் தாமஸ்
நெல்சன்
வெளியீட்டாரும்
இணைந்து 119 வேத
சாஸ்திர வல்லுனர்களை
வைத்து இந்த
மொழிபெயர்ப்பை
செய்தனர். இதன் முக்கிய
நோக்கம் கிங் ஜேம்ஸ்
பதிப்பின் இலக்கிய
அழகை காத்து இன்றைய
பழக்கத்தில் உள்ள பதங்களை
பயன்படுத்தி
மொழிபெயர்க்கப்பட்ட
ஒரு முன்னேற்ற
பதிப்பாகும்.
இவ்விதமாக இன்று
பழக்கத்தில் உள்ள பல வித
வேதாகம பதிப்புகள்
உருவாகின.
நன்றி: தமிழ் கிறிஸ்து