யூதா நிருபத்தின் 9ம்வசனத்தின்படி
மிகாவேல் தூதன் மோசேயின் சரீரத்தைக் குறித்து எதற்காக எங்கே பிசாசுடன்
தர்க்கித்தான்.
வேதாகமத்தில் இதுபற்றி எங்காவது
எழுதப்பட்டுள்ளதா?
- எ. டேவிட்.
யூத கிறிஸ்தவர்களுக்கு தன் நிருபத்தை எழுதும் யூதா சில விடயங்ளை
விளக்குவதற்காக அக்கால யூதர்கள் மத்தியில் பிரபல்யடைந்திருந்த சில
புத்தகங்களின் விடயங்களை, தான்சொல்ல முற்படும் போதனைக்கான உதாரணங்களாக
உபயோகித்துள்ளார்.
இத்கைய உதாரணங்களில் ஒன்றே 9ஆம்
வசனத்தில்குறிப்பி
டப்பட்டுள்ளது. யூதர்களுடைய புத்தகங்களில் ஒன்றான
மோசேயின் பரமேறுதல்
என்னும் புத்தகத்திலிருந்தே
9 ஆம் வசனத்தின் விடயம் பெறப்பட்டுள்ளதாக ஆதிச் சபைபிதாக்களான கிளமன்ட,
ஒரிகன், டைடிமஸ் என்போர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் மோசேயின் பரமேறுதல் எனும் புத்தகத்தில் இன்றுரை இருக்கும்
பிரதிகளில் யூதா 9 ஆம் வசனத்தின் விடயம் எதுவும் இல்லை.
எனினும் வேறு சில நூல்களில் அவ்விடயம் உள்ளது. அவற்றிலிருந்து மோசே
மரித்தபொழுது அவனது சரீரத்தை அடக்கம் பண்ணுவதற்காக தேவன் மிக்காவேலை
அனுப்பியதாகவும், மோசே எகிப்தியனொவனைக் கொலை செய்தவன் என்பதால் அவனது
சரீரம் தன்னுடையது என வாதிட்டதாகவும், அச்சமயம் மிகாவேல் சாத்தனை
தூஷனமாய் குற்றப்படுத்த துணியாமல், கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக
என்றும் மட்டும் சொன்னதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையே யூதா
9ம் வசனத்தில் எழுதியுள்ளார்.
யூதா
9. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே
தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்:
கர்த்தர் உன்னைக் கடிந்து
கொள்வாராக என்று சொன்னான்.
யூதா 9ல் மிகாவேல்.. மோசேயின் சரீரத்தைக் குறித்து எதற்காக பிசாசுடன் தர்க்கித்தான்.?
0
March 23, 2016
Tags