டார்வினின் பரிணாமக் கொள்கை சரியா? ஒரு அலசல் பாகம் 4

பரினாம கொள்கைக்கு எதிரான சில ஆதாரங்கள்:-

மான், மாடு போன்ற இறையாகக் கூடிய விலங்குகள் ஈனும் போது ஒரே ஒரு
குட்டிப்போடுவது வழக்கம். இதற்க்கு மாறாக இவற்றை உணணக்கூடிய ஓநாய், புலி,
சிங்கம் ஒவ்வொரு முறையும் பல குட்டிகளை ஈனுகின்றன. பரினாம கொள்கை படி
"வலிமையுடையோரே வாழ்வார்" எனில் மான் மாடு போன்ற விலங்குகள் பல்லாயிரம்
ஆண்டுகளாக இப்பொழுதும் இருப்பது எங்ஙனம்?

சில பாம்புகள் புலப்படா சிவப்பு (Infra red) கதிர்களை பயன்படுத்தி தங்கள்
இறைகளின் (எலி....,) உடல் வெப்பத்தை உனரும் தன்மை உடையவை இந்த படிமுறை
இல்லா வளர்ச்சி எப்படி வந்தது? வௌவால்களும் டால்ஃபின்களும் ஒலி அலைகளை
பயன்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த திறமை எந்த விலங்கிடமிருந்து
வளர்ச்சியடைந்தது?. கொசுக்கள், பூச்சிகள், வண்ணத்து பூச்சிகள், தவளைகள்,
நன்டுகள், பறவைகள், பல்லியினம் போன்ற உயிரினம் முட்டை இடுக்கின்றன.
முட்டை முட்டையிட முடியாது என்பதால் முதன் முதலில் இந்த உயிரினம்
முட்டையிலிருந்து தோன்றிருக்க முடியாது. அதாவது முட்டையிடும் இனம்
குட்டிப்போடும் இனத்திலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். எனவே
குட்டிப்போடும் உயர்வான இனத்திலிருந்து முட்டையிடும் கீழான இனம்
தோன்றியிருக்க வேண்டும் இது பரினாம கொள்கையை தகர்க்கிறது.

வண்ணத்து பூச்சுகளின் முட்டையிலிருந்து புழுக்கள் உண்டாகி, அவை
வளர்ச்சியடைந்து கூட்டுப் புழுக்களாகி, சில நாட்களுக்கு பின்பு வண்ணத்து
பூச்சி வெளிவருகிறது. முட்டையோ, புழுவோ, கூட்டுப்பழுவோ இனப்பெருக்கம்
செய்யாது. எனவே முதன் முதலில் முட்டையோ, புழுவோ, கூட்டுப்புழுவோ அல்ல.
முழு வண்ணத்து பூச்சிதான் தோன்றியிருக்க வேண்டும். அதாவது குட்டிப்போடும்
இனத்திலிருந்து தான் வண்ணத்து பூச்சி, கொசு, கரப்பான் பூச்சி
தோன்றியிருக்க வோண்டும். இதுவும் பரினாம கொள்கையை தவறு என நிரூபிக்கிறது.

ஒரு சாதாரன அளவுள்ள வேப்பமரம் ஓர் ஆண்டிற்க்கு பத்தாயிரம் பழங்களுக்கு
மேல் உருவாக்குகிறது. அவற்றின் கொட்டைகளில் பத்து வாழுகாடு முளைத்து
வளர்ந்தால் என்னவாகும் என்று சிந்தியுங்கள். இவ்விதமாக சிறிய புல் முதல்
பெரிய ஆலமரம் வரை பெருகுவதற்க்கு முயற்ச்சிக்கின்றன. யாவற்றையும்
கட்டுப்பாட்டில் வைப்பவர் யார்?.

பூச்சிகள் பறவை இனத்தை விட தாழ்வான உயிரினங்கள். எனவே பரினாம கொள்கைபடி
அவை முன்பாக தான் தோன்றியிருக்க வேண்டும். பூச்சிகள் உண்ணும் பறவைகள்
உண்டாவதற்க்கு பல லட்ச்ச ஆண்டுகளுக்கு முன்பே பூச்சிகள் உண்டாயின என்றால்
பூச்சிகள் மிக வேகமாக பெருகி, தாவரங்களை முற்றிலும் அழித்திருக்கும்.
இவ்வாறு நடைப்பெற வில்லையே...?

உலகில் பூச்சிகள் மட்டுமே பத்து லட்சத்திற்க்கும் அதிகமான வகைகள் உள்ளன.
இவற்றில் ஒரு பூச்சி இன்னொரு பூச்சியாக மாறினது என்பதற்க்கான ஆதாரம்
ஒன்று கூட இல்லை. இப்படீ இருக்க அது பறவையாக, விலங்காக, மனிதனாக மாறியது
என்பது எத்தனை ஏமாற்றுதனம்.

நீங்கள் எதை நம்ப போகிறீர்கள் கற்பனையில் உருவான பரினாம கொள்கையையா?
அல்லது பரபணு ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி, பரிசோதனைகள், படிமங்கள் போன்ற
யாவும் அது தவறு என்று கூறுவதையா...?

முடிவு உங்கள் கையில்,

யாவற்றையும் ஒழுங்கும் கிரமமாக படைத்து அதை கட்டுபடுத்தும் சர்வ
சிருஷ்டிகரும் சர்வ வல்லவருமான இயேசு கிறிஸ்துவே எல்லாவற்றை ஆளுகை
செய்கிறார்.

தானாக எதுவும் உருவாகது. "படைப்பு இருந்தால் படைப்பாளி இருப்பார்,
படைப்பாளி இல்லாமல் எந்த படைப்பும் உருவாகாது" அந்த படைப்பாளி தான் இயேசு
கிறிஸ்து

.........முடிந்தது..........

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.