புதிய ஏற்பாட்டில் மத்தேயு 1:16-25 இலும் லூக்கா 1:26-38 இலும் இவ்வுபதேசம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.“இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை, யோசேப்பு மரியாளை அறியாதிருந்தான்“என கூறும் மத்தேயு (1:25)'இருவரும் கூடிவரும் முன்பே மரியாள் பரிசுதத ஆவியினால் கர்ப்பவதியானாள்“(1:18) என்று அறியத்தருகிறார். இச்சம்பவம் நடைபெற்றபோது மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதை லூக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். (1:26-38) “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் என கன்னிப் பெண்ணான மரியாளிடம் கூறிய தேவதூதன்(லூக். 1:35) தான் அறியாமலேயே அவள் கர்ப்பவதியாயிருப்பதனால் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்பிடம் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என அறிவித்தான் (மத். 1:20)
இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அதாவது, கன்னிப் பெண்ணான மரியாள் கருத்தரித்து இயேசுவெனும் தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்ததைப் பற்றி மத்தேயுவும் லூககாவும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நம்பகமானவை என்பதி்ல் எதுவித சந்தேகங்களுமில்லை. இவை சரி்த்திர பூர்வமான ஆதாரக் குறிப்புகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் எரோது ராஜாவின் நாட்களில் நடைபெற்றதாக மத்தேயு அறியத்தருகிறார். (2:1) சீரிய நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியியாக இருந்த போது, முதலாம் குடிமதிப்பு எழுதப்பட்ட வேண்டுமென அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே இயேசு பிறந்தாரென லூக்கா மற்றுமொரு சரித்திர பூர்வமான ஆதாரத்தைத் தருகிறார். (2:1-6) சரித்திராசிரியராகவும், வைத்தியராகவும் இருந்த லூக்கா தான் முழுநிச்சியமாய் நம்புகின்ற சங்கதிகளை ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் தங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறி்த்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏவப்பட்டபடியினால் ஆதிமுதல் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து எழுதியுள்ளமை (1:1-4) அவருடைய நூல் நம்பகமான என்பதை உறுதிப்படுத்துகின்றது.
மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களை தந்தாலும் கூட, அவர்களுடைய குறிப்புகளில் ஒருசில் அம்சங்கள் சற்று தெளிவற்றது போல காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.எனினும் அவை எவ்வகையிலேனும் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பொய்யாக்கிவிடவில்லை. இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமே, .இதை காரணம் காட்டி கன்னிப்பிறப்பு நம்பக்கூடியதொன்றல்ல என வாதிடுகி்ன்றனர்.எனவே தெளிவற்றதுபோல தென்படும் பகுதிகளை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதில்களைக் கொடுப்பது இலகுவானதாயிருக்கும்.
மரியாள் கன்னிப் பெண்ணாக இருக்கும்போதே பரிசுத்தவாயினால் கர்ப்பவதியானாள் (1:18-20) யோசேப்புடன் எவ்வித தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை (1:25) என நேரடியாக குறி்ப்பிட்டிருந்தபோதிலும்இருவருக்கும் இடையிலான உறவுமுறை முன்னுக்குப் பின் முரணான விதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தென்படுகின்றது.1:18 'யோசேப்பு மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்டப்டிருந்தவன்“ என அறியத் தருகையில், அடுத்தஅவனம் இதை மறுத்து, யோசேப்பு மரியாளின் புருஷன்“ (1:19) என கூறுவதோடு “மரியாள் யோசேப்பின் மனைவி“ என்றும் தெரிவி்ககின்றது. (1:20) மட்டுமல்ல. 1:19 இல் யேசேப்பு மரியாளை தள்ளிவிட (விவாகரத்து செய்ய) மனதாயிருந்தான் என்றும் காணக்கிறோம். மரியாள் கர்ப்பவதியாயிருக்கும்போது, அவளுக்கும் யோசேப்புக்கும் இடையிலிருந்த உறவுமுறை இரண்டுவிதமாக அதாவது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாகவும், திருமணம் முடித்த கணவன்-மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரியாள் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாளா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என வாதிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர்.இயேசு யோசேப்புக்கு பிறந்த பிள்ளையாயிருக்கலாம் எனும் சந்தேகத்தை இது தோற்றுவிப்பதாக உள்ளது. என்று அவர்கள் கருதுகின்றனர்.
மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையிலான உறவுமுறை இரண்டுவிதமாக மத்தேயுவினால் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையேயானும் இதை வைத்துக் கொண்டு, இயேசு பிறக்கும்பரை மரியாள் கன்னிப் பெண்ணாயிருக்கவில்லை, இயேசு யோசேப்புக்குப் பிறந்த குமாரன் என வாதிட்டால், 18ம், 25ம் வசனங்களுக்கு எவ்விதான விளக்கங்களைக் கொடுக்க முடியும்? இவையிரண்டும் கனனிப்பிறப்பு உபதேசததை நேரடியாக போதிக்கின்றது.எனவே உறவுமுறை வித்தியாசமான முறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.
