தானியேல் தரிசனத்தின் 70வாரங்கள் கணக்கீடு:
***************************
தானி 9:25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்:
எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை
வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும்,
அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும்
மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
அர்தசாஷ்டா ராஜாவின் 20ஆம் வருடம் எருசலேமின் அலங்கங்கள்
திரும்பகட்டப்பட்டது=3704.5
7வாரகாலத்தில் எருசலேம் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்=
7*7=49 ஆண்டுகள்.
(யூப்லீ நாட்காட்டிபடி 1 நாள் என்பது 1வருடமாகும். 7நாள்=7வருடமாகும்.)
69 வாரங்கள் என்பது=483 வருடங்கள் ஆகும்.
=3704.5 483=
4187.5ஆண்டுகள்.
இயேசு, கிறிஸ்துவாக அபிஷேகம் பண்ணப்பட்டு,
ஞானஸ்னானம் எடுத்த ஆண்டு=4187.5 (30வயது உடையவராய் இருந்தார்)
இயேசு பிறந்த ஆண்டு=4157.5
3.5 வருடம் புதிய உடன்படிக்கை ஏற்படுத்தினார்=4187.5 3.5=4191
4191 ஆம் ஆண்டு இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாள் இரவும் பகலும்
மரணத்திலிருந்து(அழிவில்) தேவனால்
உயிர்ப்பிக்கப்பட்டார்.
எருசலேம் 2வது ஆலயம் கட்டப்படுதல்.
********----******-----*****
இஸ்ரவேல் மக்கள் பாபிலோன் தேசத்தில் அடிமைகளாக இருந்த போது எருசலேம்
யாதொரு மனுஷரும் குடியிராமல் சீயோன் மலைகளில் நரிகள் ஓடித்திரிந்து 70
வருடம் ஓய்ந்திருந்தது=3576.5 70= 3646.5
1)பாபிலோன் பெர்சிய மன்னர் கோரேசால் அழிக்கப்பட்ட ஆண்டு=3646.5
எருசலேமின் 2வது ஆலயம் கட்ட ஆணை வழங்கப்பட்ட ஆண்டும் அதுவே.
2)ஆலய அஸ்திபாரம் போடப்பட்ட ஆண்டு=3647.5
யூதர்களின் பகைவர் ஆலயம் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு
கைக்கூலி கொடுத்தனர்.
3)கோரேசின் ஆட்சி முழுதும=3676.5்
4)அகஸ்வேரு ஆட்சி
முழுதும் =3684.5
5)தரியு ஆட்சியின் 2வது ஆண்டுமட்டும=3686.5ஆலயப்பணியை தடுத்து நிறுத்தினர்.
6)தரியு ஆட்சியின் முதலாம் ஆண்டுவரை தானியேல் தீர்க்கதரிசி இருந்தார்.
7)தரியு ஆட்சியின் 6ஆம் வருடம் ஆதார் மாதம் 3ம் தேதி ஆலயம் கட்டி
முடிக்கப்பட்டது.=3690.5
8)தரியுவின் ஆட்சியில் எருசலேம் ஆலயம் மட்டுமே செருபாபேல் யோசுவா தலைமையில்
கட்டிமுடிக்கப்பட்டது.
நகரத்தின் அலங்கமும் வாசல்களும் வீதிகளும் கட்டப்படவில்லை.
9)அர்தசாஷ்டா அரசரின் 20ஆம் ஆண்டு ஆளுநராக நெகெமியா எருசலேமுக்கு வந்தார்=3704.5
எருசலேமின் அலங்கத்தையும் வாசல்களையும் வீதிகளையும் 52நாட்களில்
கட்டிமுடிக்கப் பட்டது.
10) 12ஆண்டுகள் எருசலேமில் ஆளுநராக இருந்தார்= 3704.5-3716.5 வரை
:color=Green:Charles MSK:/color: