தீர்க்கதரிசிகளின் பிரிவுகள் 1

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்
(ஏசாயா முதல் மல்கியா வரை)

அ) இனவாரியாக பிரித்தல்: (பெறுபவர்களின்படி)

1. இஸ்ரவேலுக்கு - ஓசியா, ஆமோஸ்

2. யூதாவுக்கு - யோவேல், ஏசாயா, மீகா, செப்பனியா, புலம்பல், எரேமியா,
ஆபகூக், ஆகாய், சகரியா, மல்கியா.

3. நினிவேக்கு (அசீரியா) - யோனா, நாகூம்.

4. பாபிலோனுக்கு - தானியேல்

5. பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு - எசேக்கியேீல்

6. ஏதோமிற்கு - ஒபதியா

ஆ) தீர்க்கதரிசியின் பொருள் விளக்கம்:

வார்த்தைகள்: (1நாளாகமம்: 29:29,30).

1. நபி (Nabi) - "(தேவனால்) அழைக்கப்படட்வர்"

2. ரோயே (Roeh) - "ஞானதிருஷ்டிக்காரன்" ("பார்த்தல்" என்ற மூல வார்த்தையிலிருந்து).

3. ஹோசே (Hozeh) - "ஞானதிருஷ்டிக்காரன், தீர்க்கதரிசி" ("பார்த்தல்" என்ற
மூல வார்த்தையிலிருந்து).

தேவன் தம்முடைய வார்த்தையையும், சித்தத்தையும் (முதன்மையாகத் தம்முடைய
மக்களுக்கு) அறிவிக்கும்படி, தமது சார்பில் பேசுவதற்காக தெரிந்தெடுத்து
அழைக்கும் ஒரு மனிதன் "தீர்க்கதரிசி" எனப்படுகிறான்.

விளக்கம்:

1. "முன்னறிந்து கூறுதல்" (அடிக்கடி) - தேவனுடைய சார்பில், பொதுவாக நிகழ்
காலத்தைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தை முன்னறிந்து கூறுதல்.

2. "முன்னறிவி" (அவ்வப்போது) - தேவனுடைய சார்பில், முன்குறிக்கப்பட்ட
எதிர்கால சம்பவங்களை மையமாகக் கொண்ட, நிகழ்காலத்திற்குரியவைகளைக்
குறித்தத் தேவனுடைய சித்தத்தைக்
குறிப்பாகக் கூறுதல்.

இ) தீர்க்கதரிசனத்தின் தன்மை:

மூலாதாரம்: இயற்கைக்கு அப்பாற்ப்பட்டது.
(2பேதுரு: 1:20,21)

வழிவகைகள்:

1. சொப்பனங்களும், இரவு தரிசனங்களும் (எண்ணாகமம்: 12:6)

2. தரிசனங்களும், மிகையான உணர்வுகளும் (ஏசாயா: 2:1; 29:7; ஆமோஸ்: 1:1; மீகா:1:1)

3. தேவனோடு நேரடியாக எதிர்ப்படுதல் (2இராஜாக்கள்: 20:1-6; ஏசாயா: 6:1-10, 38:4)

4. வெளிப்படுத்தலுடன் வரலாற்றுச் சம்பவங்கள் (எரேமியா: 21:1,2; 36:1-26; 42:7-22)

5. தீர்க்கதரிசியின் வாழ்க்கைச் சூழ்நிலை (ஏசாயா: 39:1-
நோக்கம்: நெறிமுறை சார்ந்தது (ஆமோஸ்: 4:12; 2பேதுரு: 3:11; 1யோவான்: 3:3)

தோற்றம்: இரட்டைப் பரிமாணம்.
- "எப்போது" என்பதைவிட, "என்ன" மற்றும் "யார்" என்பவை
தெளிவாயிருப்பதால், காலத்தின் பரிமாணம் துல்லியமாக
இல்லாவிட்டாலும் எப்போதும் ஓரளவிற்கு சரியாக உள்ளது.
(ஏசாயா: 13:6,
எசேக்கியேல்: 30:3,
யோவேல்: 1:5,
ஒபதியா: 15,
செப்பனியா: 1:7,14,
மத்தேயு: 10:23, 16:28, 24:34, யாக்கோபு: 5:8,9, 1தெசலோனிக்கேயர்: 4:15,
பிலிப்பியர்: 4:5, வெளிப்படுத்தல்: 1:1,3, 22:6,10,12,20).

மாதிரிப் படிவம்:

சமநிலையடைந்தது:

1. பாவத்திற்காக தேவன் அளித்த நியாயத்தீர்ப்பு தற்போதைய துயரத்தின்
காரணமாகும்; எனவே, "வரவிருக்கும் "கர்த்தரின் நாளைச்" (தேசங்களின்
நியாயத்தீர்ப்பு) சந்திப்பதற்காக மனம் வருந்தி, தேவனிடம் திரும்புங்கள்.
தேவன் மன்னிப்பை அளித்து, மீண்டும் ஆசீர்வதிப்பார். மேசியாவின் யுகமும்,
ஒரு உயரிய நிலை உள்பட மகிமையான எதிர்காலமும் வரவிருக்கிறது.

2. (கள்ளத்தீர்க்தரிசிகளுக்கான) சோதனைகள். நிறைவேறுதல்: உபாகமம்: 18:20-22.

3. தேசிய நீதி (உபாகமம்: 13:1-5, எரேமியா: 23:13,14)

4. தனிப்பட்ட நீதி (எரேமியா: 23:9-12, மத்தேயு: 7:15-20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.