ஐந்தாவது வார்த்தை “தாகமாயிருக்கிறேன்”… (யோவா 19:28) பாகம் 4

ஐந்தாவது வார்த்தை
"தாகமாயிருக்கிறேன்"… (யோவா 19:28)
பாகம் 4

2. இரத்தசாட்சிகளும் பாடுகளின் தாகமும்

*."இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள்
அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலேயே தோய்த்து
வெளுத்தவர்கள்..... இவர்கள் இனி தாகமடைவதில்லை" (வெளி 7: 14,16).

*.இந்த வசனம் பரலோகத்தில் ஜீவிக்கின்ற பரிசுத்தவான்களைப் பற்றி, யோவானுக்கு
*.கொடுக்கப்பட்ட வெளிப்பாடு.

*.இதில் ஒரு பெரிய சத்தியம் அடங்கியிருக்கிறது.

*.ஒருவர் மீட்கப்பட்டு பரலோகத்தை அடைய, அவர் இவ்வுலகில் தமக்கு பாடுகளை
ஏற்று, இவ்வாறு இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமடைய வேண்டும்.

*.இயேசுவுடைய "பாடுகளின் தாகத்தில்" பங்குபெற்றவர்களுக்கு, பரலோகத்தில்
அவருடைய மகிமையில் பங்கு உண்டு.

*.யோவான் கூறும் பரலோகவாசிகளுக்கு இனி தாகமில்லை. காரணம் அவர்கள்
இரத்தசாட்சிகளாகி, தங்கள் பாடுகளின் தாகத்தை தீர்த்துக் கொண்டார்கள்.

*.திருச்சபையில் தொடரும் இயேசுவின் தாகம் கல்வாரியில் ஐந்தாவது வார்த்தை
மூலமாக, இயேசு வெளிப்படுத்திய"'பாடுகளின் தாகம்"

*.ஒவ்வொரு விசுவாசியிலும் திருச்சபையிலும் தொடர வேண்டிய "பாடுகளின் தாகமே".

*.ஆதியில் இந்த பாடுகளின் தாகமே, திருச்சபையினுடைய வளர்ச்சிக்கு அடிகோலியது.

*.திருச்சபை தன் மீட்பின் பணியை செய்த போது, விசுவாசிகளை பாடுகளில்
தாகப்பட தூண்டியது.

*.பாடுகளின் மட்டில் வைக்கும் தாகத்தால் மாத்திரமே, சொர்க்க ராஜ்யத்தை
அடைய முடியும் என்று உபதேசித்தது (அப 14:22).

*.எனவே தான், வேதகலாபனையின் காலத்தில் இரட்சிப்படைந்தவர்களின் கூட்டம்
*.வளர்ந்தோங்கியது.

*."வேதசாட்சிகளின் இரத்தம்" - "விசுவாசத்தின் வித்து" ஆனது.

*.ஒரு இரத்தசாட்சியின் "பாடுகளுக்கான தாகம்" ஓராயிரம் இரத்தசாட்சிகளை உருவாக்கியது.

*.பேதுருவில் ஆரம்பித்து (அப 5:41), ஸ்தேவானில் தொடர்ந்து (அப 7:57, 60), உரோமை,

*.கிரேக்க பேரரசுகளையே கைப்பற்ற செய்த "பாடுகளின் தாகம்" என்ற ஐந்தாவது
வார்த்தை, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அகில உலகத்தையே, மீட்பின்
பாதைக்கு கட்டி இழுத்துச் செல்கிறது.

*.இன்று இந்த ஐந்தாவது வார்த்தையை தியானிக்கும் நாமும், பாடுகளை
அருவருக்கத்தக்க ஒன்றாக கருதாமல், 1கொரி 1:18-ன் படி நமது மீட்புக்காக
ஏற்றுக் கொள்வோம்.

*.இயேசுவைப்போல பாடுகளுக்காக தாகமுற்று, இயேசுவின் மகிமையில்
பங்காளிகளாவோம். ஆமென்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.