ஐந்தாவது வார்த்தை “தாகமாயிருக்கிறேன்”… (யோவா 19:28) பாகம் 3

மீட்பின் தாகமும் -- பாடுகளின் தாகமும்

*.இயேசு எதற்காக இந்த பூமிக்கு வந்தார்? "பாவிகளை மீட்டு இரட்சிக்க" (1திமோ 1:15).

*.இயேசு எவ்வாறு பாவிகளை மீட்டு இரட்சித்தார் என்றால், "தன்னுடைய பாடுகளாலும் -

*.மரணத்தாலுமே" (மத் 20:28).

*.எனவே இயேசு "உலக மீட்பு" என்ற தம்முடைய இலட்சியத்தை அடைய, "பாடுகள் -

*.மரணத்திற்காக" தாகித்தார்.

*.பொதுவாக தாகம் என்றால், ஒன்றை அடைவதற்கான ஒருவருடைய மன, சரீர "ஏக்கம்"

*.என்றும் கூறலாம்.

*."மீட்பு" என்ற ஒரு பொருளை வாங்குவதற்காக, இயேசு கொடுக்க வேண்டிய விலை

*."இரத்தம் சிந்துதல்" என்ற தன்னுடைய "பாடுகளும் மரணமும்" ஆகும் (எபி 9:22).

*.ஒருவர் தான் வாங்க வேண்டிய பொருளுக்காக தாகிப்பது போலவே, அந்த
பொருளுக்குண்டான விலைக்காகவும் தாகிக்க வேண்டும்.

*.மனுக்குல இரட்சிப்புக்காக இயேசு எந்த அளவுக்கு தாகமுற்றாரோ, அந்த
அளவுக்கு மீட்புக்கு

*.கொடுக்க வேண்டிய விலைக்காகவும் இயேசு தாகமுற்றார்.

*.அதுவே "பாடுகளின் தாகம்".
உதாரணமாக :

*.ஒரு மகனுக்கு தன் தாயினுடைய நோய் எப்படியாவது தீர வேண்டுமே என்ற ஏக்கம்
அல்லது தாகம் உண்டானது.

*.ஆனால் தாய்க்கு சிகிட்சை செய்ய பணம் வேண்டும்.

*.எனவே அந்த பணத்துக்காக அவன் ஏக்கமுற்றான்.

*.போதுமான பணம் உண்டாக்க வழி, "பாடுபட்டு உழைப்பது" ஒன்றே ஆகும்.

*.எனவே அவன் அதிகமாக பாடுபட்டு உழைக்கும் ஒரு வேலைக்காக ஏங்கினான்..

*.தன் தாயின் "நோய் நீங்குவது" என்ற தாகத்தை தீர்க்க, அவன் "கடின
உழைப்பு" என்ற தாகத்தை அடைகிறான்.

*.இயேசு இந்த பூமிக்கு வந்ததன் இறுதி குறிக்கோள் 'உலக மீட்பு'.

*.அதை அடைய வேண்டிய ஒரே வழி "இரத்தம் சிந்துதலும், மரணமுமே" (எபி 9:22).

*.எனவே இயேசு பாடுகளுக்காகவும், மரணத்திற்காகவும் தாகமுற்றார் என்றால்
அதில் வியப்பொன்றுமில்லை.
இரண்டு முறை தாகம்

*."உலக மீட்புக்காக" இயேசு "பாடுபட" ஏற்கெனவே மத் 20: 22,28-ல் தாகமுற்றார்.

*.இந்த மீட்புக்கான பாடுகளும் மரணமும் என்ற இயேசுவின் முதல் தாகம்,
சிலுவையில் இயேசு உயிர்விடும் கடைசி நிமிடங்களில் யோவான் 19: 30 --ல்
நிவர்த்தியாகிறது-

*.ஆனால் இயேசுவினுடைய வருகையின் தாகமாகிய, உலக மீட்பை தன் பாடுகளின்

*.தாகத்தால் அவர் அடைந்து முடிக்கின்ற அதே நேரத்தில், இயேசு இரண்டாம் முறையாக

*.தாகமுற்றார் (யோவா 19: 28).

*.அதுவே சிலுவையின் ஐந்தாவது வார்த்தை.

*.இயேசுவினுடைய முதல் தாகம் முழுமையாகத் தீருகின்ற அதே வேளையில், அவர்
தொடர்ந்து தாகப்படுவதில் நிச்சயமாக ஒரு கருத்து இருக்கத்தான் வேண்டும்.

IV. நித்திய மீட்பும் நித்திய தாகமும்

*.இயேசு தம் சிலுவையின் பாடுகளாலும், மரணத்தாலும் ஒரு மீட்பின்
சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தார்.

*.ஆனால் அந்த மீட்பின் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் (ரோம 8:25).

*.மீட்பு பணியின் முடிவு என்பது உலகத்தின் முடிவு ஆகும்.

*.எனவே உலகின் கடைசி நாளில் பிறக்கின்ற கடைசி மனிதன் மீட்பை அடைவது
வரையிலும், "மீட்பின் பணி" தொடர வேண்டும்.

*.இயேசுவுக்கு "மீட்பின் பணி" என்பது, அவருடைய பாடுகளும் மரணமுமே

*.எனவே இயேசு மரித்த பின்பும் மீட்பின் பணி தொடர்வது போலவே, அதை
அடைவதற்கான பாடுகளின் பணியும் தொடர வேண்டும்.

*.மரித்த இயேசு, உலகம் முடிவு பரியந்தம் மனிதரோடு இருக்கிறார். எதற்காக?
உலகின் கடைசி மனிதரையும் மீட்க.

*.எனவே இயேசுவினுடைய மீட்பின் தாகம் தொடர்வது போலவே, மரித்த பின்பும்
அவருடைய பாடுகளின் தாகமும் தொடர்கிறது.

1. திருச்சபையில் மீட்பின் தாகம்

*.இயேசு உலகில் தொடர்ந்து வாழ்வது, அவருடைய திருச்சபையில்.

*.இயேசுவின் திருச்சபை இயேசுவின் மீட்புக்கான தாகத்தை தொடர்கிறது.

*.இவ்வாறு மீட்புக்கு விலையான பாடுகளின் தாகத்தையும் திருச்சபை கொண்டுள்ளது.

*.ஐந்தாவது வார்த்தையில், இயேசுவுக்குண்டான தாகம் திருச்சபையில் தொடர்கிறது.

*."இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அனுபவிக்கின்ற பாடுகளில்
சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய
சரீரமாகிய சபைக்காக, என் மாமிசத்திலே நிறைவேற்றுகிறேன்" (கொலோ 1:24).

*."எப்படியாகிலும் சிலரையாவது இரட்சிக்கும்படிக்கு, நான் எல்லாருக்கும்
எல்லாமானேன்".
*.(1கொரி 9: 19-22)

*."கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும், உங்களுக்காக மறுபடியும் நான்
கர்ப்ப வேதனைப்படுகிறேன்" (கலா 4:19).

*.மேற்சொன்ன வசனங்களின்படி, மீட்பின் தாகத்தைக் கொண்ட திருச்சபை அதை
அடைவதற்கான "பாடுகளின் தாகத்தையும்" கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.
இது சபைக்குரிய 'பாடுகளின் தாகம்'.

*.அதுபோலவே ஒவ்வொரு விசுவாசியிடத்திலும் மீட்பின் தாகம் இருப்பது போலவே, அதை

*.அடைவதற்கான "பாடுகளின் தாகமும்" இருக்க வேண்டும் என்று ஆதிசபை உபதேசிக்கிறது.

*."கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு, அவருடனே கூட பாடுகள் பட
வேண்டும்" (ரோம 8: 17).

*."கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்
படியாக, அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகள் ஆனதால்
சந்தோஷப்படுங்கள்" (1பேது 4:13).

*."தேவன் மேல் பற்றுதலாயிருக்கிற மனசாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்
பாடுபட்டு, உபத்திரவங்களை பொறுமையாய் சகித்தால் அதுவே
பிரீதியாயிருக்கும்" (1பேது 2: 19).

*."இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் கிறிஸ்துவும்
உங்களுக்காக பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளை தொடர்ந்து
வரும்படி, உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப் போனார்" (1பேது 2:21).

*.இவ்வாறு மீட்புக்காக ஏக்கமுறும் ஒவ்வொரு விசுவாசியும் அதை அடையும்
வழியான, பாடுகளுக்காகவும் தாகமுற வேண்டும் என்று ஆதிசபை படிப்பித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.