Type Here to Get Search Results !

சங்கீதம் 129:6 இல் வீட்டின்மேல் முளைக்கும் புல் என குறிப்பிடப்பட்டுள்ள புல் எது?

சங்கீதம் 129:6இல் வீட்டின்மேல் முளைக்கும்
புல் என குறிப்பிடப்பட்டுள்ள
புல் எது?
- ஆர். மோகன்

இவ்வசனத்தை விளங்கிக் கொள்வதற்கு வேதாகம காலத்தில் வீடுகளின் கூரைகள்
எத்தகையவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

அக்காலத்தில் வீடுகளுக்கு கூரைபோடும்போது முதலில் ஓரளவு இடைவெளியில்
இருபக்கச் சுவரின்மீதும் மரப்பாரலைகள் வைக்கப்படும்.

அதன் பின்னர்
மரக்கிளைகள்,
புதர்களாக வளரும் செடிகள், நாணற்புற்கள்
என்பவற்றில்
ஏதாவதொன்றினால் பரப்பாராலைகள் இணைக்கப்படும்.

கடைசியில் இதன் மீது மண்ணும் சிறுகற்களும் சேர்கப்பட்ட கலவை போடப்பட்டு
கல் உருளையின் மூலம் இறுக வைக்கப்படும்.

மண்ணில் புற்களின் விதைகள் இருப்பதனால், அவை முளைவிட்டு வளரத் தொடங்கும்.
இத்தகைய புற்களே வீட்டின் மேல் முளைக்கும் புல் என வேதாகமத்தில்
குறிப்பிப்பட்டுள்ளது.

அக்காலத்தில் வீட்டுக் கூரைகள் பல்வேறு பணிகளுக்காக
பயன்படுத்தப்பட்டமையால் அவற்றில் முளைக்கும் புற்கள் விரைவில்
அழிந்துவிடும். கூரையில் வளரும் புற்களின் இத்தகு தன்மையைக்
கருத்திற் கொண்டே
சங்கீதம் 129:6 இல் சிறிதுகாலம் மட்டும் இருப்பவர்களுக்கான உருவகமாக
வீட்டின் மேல்
முளைக்கும் புல் குறிப்பிப்பட்டுள்ளது.

சங்கீதம் 129:6
6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது
வளருமுன் உலர்ந்துபோம்.

Post a Comment

0 Comments