கன்னிப் பிறப்பு கற்பனையா? பாகம் 11

“இயேசுவின் தேவத்துவத்தை மறந்துவிடுதவாயேயே கன்னிப்பிறப்பின் நிஜத்தையும் அவசியத்தையும் அநேகர் மறந்துவிடுகின்றனர்“ என லெறேன் பொயிட்னர் அறியத்தருகிறார். இயேசுகிறிஸ்து தேவனாக இருப்பதனால் அவருடைய கன்னிப்பிறப்பை பறறிய நம்பிக்கை நம்முடைய விசுவாசப்பிரமாணத்திற்கு அவசியமாயுள்ளது மட்டுமல்ல, கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பவன் அவருடைய தேவத்துவத்தையும் மறுதலிப்பதனால்ஈ யோவான் சுட்டிக் காட்டுவதுபோல அத்தகைய மனிதன் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவியை உடையவனாகவே இருப்பான். (1 யோவான் 4:1-3) கன்னிப்பிறப்பைப் பற்றிய நம்பிக்கை “மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை தேவன் என அறிக்கையிடுவதற்கான சான்றுகளுள் ஒன்றாய் அமைவதோடு, நாம் தேவனுடையவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. (4:2) எனவே, இவ்வுபதேசத்தை நம்புவதும் நம்பாததும் அற்பமான விடயமல்ல. நாம் தேவனுடைய ஆவியை உடையவர்களாக அல்லது அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாக எ்னபதைக் கண்டறிய, இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் ஒரு காரணமமைகிறது என்றால் அது மிகையாகாது. இரண்டாவதாக இயேசுவினுடைய பாவமற்ற தன்மைககும் (Sinless Nature) கன்னிப்பிறப்பு காரணமாகிறது.அவர் சாதாரணமான முறையில் பிறந்திருந்தால். பாவத்துடனேயே பிறந்திருப்பார். ஆனால் அவர் பரிசுத்தவியானவர் மூலமாக கன்னிப் பெண்ணிடத்தில் பிறந்தமையால் பாவமற்றவராக இருந்தார். அவருக்கு அன்பாயிருந்த சீடன்“அவரிடத்தில் பாவமில்லை. (1 யோவான் 3:5)என குறிப்பிட்டுள்ளார். அப்போஸ்தலனாகிய பேதுருவும்“அவர் பாவஞ் செய்யவில்லை. (1 பேதுரு 2:22)என கூறுகிறார். அவர்“பாவம் அறியாதவர்“ (2 கொரி. 5:21)என பவுலும் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், அவர் எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் (எபி.4:15) பரிசுத்தரும், குற்றமற்றவரும் மாசிலலாதவரும் பாவிகளுக்கு விலகினருமாயிக்கிறார். (2:26) இதனால் தான்“என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? (யோவான் 8:46)என அவரே ஒருமுறை கேட்டார். தான் பாவமற்றவர் என்பதை இயேசு அறிந்திருந்தமையினாலேயே தன்னுடைய பாவமன்னிப்பிற்காக அவர் ஜெபிக்கவேயில்லை. மட்டுமல்ல நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு அதன்படி வாழ்நத இயேசு ஆலயத்திற்கு தவறாது சென்றாலும் கூட அவர் ஒருநாளும் எந்தவொரு பலியையும் செலு்த்தவேயில்லை. காரணம் பாவமற்ற அவர் பாவநிவாரணத்துக்காக பலி செலுத்த வேண்டியிருக்கவில்லை. இதையெல்லாம் ஏற்றுக்கொள்பவனால் கன்னிப்பிறப்பை நம்பாமல் இருக்கவே முடியாது. லொறேன் பொயிட்னர் சுட்டிக்காட்டியது போல, “மானிட ஆள்தத்துவத்தையல்ல, மானிட தன்மையையே இயேசு மரியாளிடத்திலிருந்து பெற்றமையால், அவரை பாவி என நம்மால் கூறமுடியாது. அவர் எந்த ஒரு மனிதனுடைய குமாரனுமல்ல, இதனால் அவர் பாவமற்றவராக இருந்தார். மரியாளிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது.தேவனுடைய குமரன் எனப்படுவார்(லூக். 7:35) என தேவதூதன் தெரிவித்தது போல அவர் பாவமற்றவராக இருந்தார். கன்னிபிறப்பை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இயேசு பாவமற்றவர் என்பதனால் கன்னிப்பிறப்பு அவசியமற்றதாகின்றது.“ மூன்றாவதாக கன்னிப்பிறப்பு உபதேசம், கிறிஸ்துவின் சிலுவைப்பலியுடன் தொடர்புடையதாக உள்ளது.மறைந்த பிரபல இறையியலாளர் பெஞ்சமின் வோர பீல்ட் குறிப்பிட்டது போல, “புதிய ஏற்பாட்டு மீ்ட்பின் உபதேசத்து்டனான தொடர்பிலேயே கன்னிபிறப்பு உபதேசத்தின் அவசியம் முழுமைபெற்று விளங்குகின்றது“.மீட்பானது, பாவத்திலிருந்து மீட்கப்படுவதாயிருப்பதனால் மக்களை பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர் பாவமற்றவராக இருக்க வேண்டும்.எனவே,மீட்பர் சாதாரண முறையில் இவ்வுலகிற்கு வருவதில் எவ்வித பயனுமிருக்காது.காரணம் கன்னிப்பிறப்பு மட்டுமே பாவமற்றவராக மீட்பர் இவ்வுலகிற்கு வருவதற்கு மாரக்கமாயிருக்கிறது. பெஞ்சமின் வோர்பீல்ட் மேலும் இதைப்பற்றி எழுதும்போது “கிறிஸ்துவின் மீட்பின் செயல், அவருடைய இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பைச் சார்ந்துள்ளது“ என அறியத் தந்துள்ளார். கன்னிப்பிறப்பு உபதேசமானது. இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்துடனும் அவருடைய பாவமற்ற தன்மையுடனும், அவருடைய மீட்பின் செயலுடனும் சம்பந்தப்பட்டிருப்பதனால், இதை ஏறறுக்கொள்ளமலிருப்பது, இதனுடன் சம்பந்தமற்றவைகளையும் ஏற்றுக்கொள்ளாமலிபதபற்கு சமமானது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கன்னிப்பறிப்பு உபதேசத்தை நம்முடைய விசுவாசப் பிரமாணத்ததில் சேர்த்துக் கொண்டு அது, சரித்திரத்தல் நடைபெற்ற உண்மை சம்பவமாக விசுவசிப்பது நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு மிக மிக அவசியமானது. இதை ஒரு கற்பனை கதையாக கருதுவதும்- இது முக்கியமானதொன்றல்ல என எண்ணுவதும் அர்த்தமற்ற அறிவீனமான செயலாகும்.தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த உபதேசம் அவசியமானதும், அடிப்படையானதும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.