இயேசு கிறிஸ்து இப்படிப்பட்டவராக இவ்வுலகத்தில் இருக்கவில்லை. அவர் முழுமையான மனிதனாகவும் அதேசமயம் முழுமையான தேவனாகவும் இருந்தார். மட்டுமல்ல வே நூல் ஆசிரியர்கள் புராணக கதைகளை எழுதவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, புராணக் கதைகளை விட்டு விலகச் சொல்லி, மக்களுக்கு கட்டளையிட்டவர்கள், தங்களுடைய புத்தகங்களில் புராணங்களை எழுதினார்கள் என்று சொலவது அர்த்தமற்றது. “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோ. 4:7) என கட்டளையிட்ட பவுல் “
வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும்முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,(1 தீமோ. 1:3) ,இயேசுவின் கன்னிப்பிறப்பு புராணக்கதையாயிருந்தால் அதையும் விடடுவிலகச்சொல்லி கட்டளையிட்டிருந்திருப்பார் என்பதையே புலப்படுத்துகின்றது. ஆனால், தன்னுடைய நண்பனான லூக்கா இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி எழுதியவைகள் சரித்திரபூர்வமான உண்மையாயிருந்தமையினாலேயே இயேசுவை “ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்“ (கலா. 4:5) என்று குறிபபிட்டு, கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அது புராணமாயிருந்திருந்தால் அவர் நிச்சியம் அதை நம்ப வேண்டாம் என எழுதியிருப்பார்.
ஆதிச்சபை விசுவாசிகள் புராணத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு அவை உண்மையல்ல என்று அறிந்து, ஜீவிக்கும் மெய்யான தேவனை சேவித்தவர்கள். இயெசுவின் பிறப்பு புராணமாயிருந்திருந்தால் அவர்கள் அதை நம்பயிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் கன்னிப்பிறப்பை நம்பியவர்கள், இவர்களைப் ப்றறி பவுல் எழுதும்போது “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிப்பவர்கள் (1 தெச. 1:9-10) என குறிப்பிட்டுள்ளார். விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திருப்பியவர்கள்“ என கூறும்போது அம்மதங்களின் புராணக் கதைகள் அனைத்தையும் பொய்யென்று கருதியமையே ஜீவனுள்ள உண்மையான தேவனை நம்ப காரணமாயமைந்தது என்பதையே புலப்படுத்துகின்றது. எனவே, இயேசுவின் கன்னிப் பிறப்பு புராணமல்ல உண்மைச் சம்பவம் என்பதை அறிந்து ஏற்றுக் கொண்டவர்களே இவர்கள் என்பதில் எவ்வித சநதேகமுமில்லை. மேலும் ரேமண்ட் பிரவுண் என்பார் குறிப்பிட்டது போல “இயேசுவின் தாய்,ஈ சகோதரர், குறிப்பாக யாக்கோபு என்போரது பிரசன்னம் (அப். 1:14, 15:13, கலா. 1:19, 2:9) இயேசுவின் பிறப்பைப் பற்றிய புராணக்கதைகள் உருவாவதை நிச்சியம் தடுத்திருக்கும்“ மட்டுமல்ல சரித்திராசிரியரும் வைத்தியருமான லூக்கா “சகலவற்றையும் திருவிசாரித்தறிந்த தன்னுடைய நற்செய்தி நூலை எழுதிள்ளமையும்( 1:1-4) அவர் புராணக் கதையை எழுதியிருக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. இயேசுவின் கன்னிப்பிறப்பு உண்மைச் சம்பவம் எ்னபதனாலேயே ஆதிச்சபை இதை விசுவாசப் பிரமாணத்தில் சேர்த்துக் கொண்டது. இதைப் பற்றிய வேதாகமக் குறிப்புகளும் முற்றிலும் நம்பகமானவை. இயேசுவின் கன்னிப்பிறப்பு எவருடைய கற்பனையுமல்ல. மாறாக கற்பனைக்கும் எட்டாத அற்புத தேவன் தன் மைந்தனை இவ்வுலகுக்கு அனுப்பிய உண்மைச் சம்பவமாகும்.
.
(இ) அதன் அவசியம்
கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தையும் அதற்கான ஆதாரங்களையும் கடந்தமுறை பார்த்தோம். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்தானா? என நாம் வினவலாம். சிலர் இவ்வுபதேசம் முக்கியமானதொன்றல்ல. இதை நம்புவதும் நம்பாமலிருப்பதும் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. ஒருவன் இரட்சிப்படைவதற்கு இவ்வுபதேசத்தைப் பற்றிய அறிவு அவசியமற்றது. எனவே இதைப்பற்றி அதிகளவு அலட்டிக் கொள்ளக்கூடாது என கருதுகின்றனர். எனினும் இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் - அது அவசியமற்றது என வாதிடுபவர்கள், இவ்வுவதேசத்தைக் கற்பனைக் கதை என கருதுபவர்களே என்றால் அது மிகையாகாது. மட்டுமல்ல, லொறேன் பொயிட்னர் குறிப்பி்ட்டது போல, “இயேசுவின் கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவன், வேதத்திலுள்ள மற்றைய அற்புத சம்பவங்களையும் நம்பாதவனாகவே இருப்பான். “எனவே இவ்வுபதேசததைப் பற்றிய ஒரு மனிதனுடைய நம்பிக்கை மிக மிக முக்கியமானது. மேலும், இவ்வுபதேசம் கிறிஸ்துவைப் பற்றிய மற்றைய உபதேசங்களுடன் தொடர்புடையதாயிருப்பதனால் இதை அவசியமற்ற உபதேசம் என நம்பாமல் ஒதுக்கிவிட முடியாது, ஜேம்ஸ் ஓர் தெரிவித்தது போ, “கிறிஸ்துவைப் ப்றிய நாம் விசுவாசிப்பவைகளில் இருந்து, கன்னிப்பிறப்பை பற்றிய நம்பிக்கை பிரித்துவிட முடியாது“ என்பதை மறுப்பதற்கில்லை. முதலாவதாக, கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மையுடன் (Divinity) தொடர்புடையது, இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பது அவருடைய தேவத்துவத்தை மறுதலிப்பதாகும. இயேசு தேவனாயிருந்தமையால், சாதாரண பிறப்பு மூலம் அவர் இவ்வுலகத்திற்கு வந்திருக்க முடியாது. இதனாலேயே இயற்கைக்கம் அப்பாற்பட்ட கன்னிப்பிறப்பு அவசியமாகியது, “
