கேருபீன்கள், சேராபீம்:-
சேராபீன்கள்:-
தேவனுடைய நேரடி பிரசன்னத்தில் இருந்து அவரை துதிக்கும் சேராபீன்கள் ஆவிக்குரியவை ஆகும்.
ஏசாயா 6:2 ஐயும் வெளி 4:6-8ஐயும் கவனித்தால், சேராபீன்கள் தேவதூதரில் ஒரு வகை என்பதை அறியலாம். இவர்கள் எப்பொழுதும் கர்த்தருடைய சமூகத்தில் நின்று அவரை புகழ்ந்து போற்றிக் கொண்டிருப்பார்கள்.
வெளி 4:6ல் சிங்காசனத்திற்கு முன்பாக என்றால் சிங்காசனத்திற்கு முன்புள்ள தளத்தை (சிங்காசனம் இருந்த தளம் முழுவதும்) குறிக்கிறது.
வெளி 4:7-8 இதில் வரும் நான்கு ஜீவன்கள் சிறப்பான தேவதூதர் (சேராபீம்) என கருதப்படுகிறது. இதை விவரிக்கும் வசனங்கள் (வெளி 4:6-8; 5:6-14; 6:1-8; 7:11; 14:3; 15:7; 19:14).
கேருபீன்கள்:-
கேருபீன்களை குறித்து ஆதி 3:24; எசே 10:1-20; 11:22; 41:18, 20, 25 ஆகிய வசனங்களில் காணலாம். லூசிபர் கேருபாக இருந்து சாத்தானாக மாறினதை ஏசா 14:12-14; எசே 28:13-18 ஆகிய வசனங்கள் விவரிக்கிறது.
கேருபீன்கள் தேவ பிரசன்னத்தில் வாழும் உயிர்கள் ஆகும். அவை செய்யும் பனியில் ஒன்று ஜீவ விருட்ச்சத்திற்கு போகும் வழியை பாதுகாப்பது (ஆதி 3:24). மேலும், தேவன் பயணம் செய்யும் போது கேருபீன்களை பயன்படுத்துகிறார் (2 சாமு 22:11; சங் 18:10). தேவனுடைய சிங்காசனத்தை (அவர் பயணம் செய்யும் போது பயன்படுத்தபடும் சிங்காசனத்தை) எடுத்து செல்லும் பனி கேருபீன்களுடையது ஆகும் (எசே 10:1-22 உடன் எசே 1:4-27). வேதத்தில் ஒருமையாக கேருப் என்று மூலமொழியில் 26 முறை எழுதப்பட்டுள்ளது. எசே 28:14,16 ஆகிய இரு இடங்களிலும் கேருப் என்றும் மற்ற 24 இடங்களிலும் கேருபீன்கள் என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கேருப் என்பதன் பன்மையே கேருபீன்கள் ஆகும்.
ஏசா 14:12-14 இப்பகுதி சாத்தானை குறிக்கிறது. லூசிபர் (பிரகாசமானவன், விடிவெள்ளி) என்ற பெயர் கொண்ட கேருப் ஒருவனை பூமியில் ஆளும்படி தேவன் வைத்திருந்தார். அவன் தன் அழகினாலும், ஞானத்தினாலும், திறமையினாலும் தற்பெருமை கொண்டான். தான் தேவனுக்கு ஒப்பாக வேண்டும், தன்னை யாவரும் வணங்க வேண்டும் என்று திட்டமிட்டு தேவ தூதர்களில் ஒரு கூட்டத்தை தன் வசமாக்கி வானத்துக்கு ஏறுவேன், தேவனுடை நட்ச்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், ஆராதனை கூட்டத்தின் பர்வதத்தில் வீற்றிருப்பேன், உன்னதங்களில் ஏறுவேன், உன்னதமானவருககு ஒப்பாவேன் என்று தன் இருதயத்திலே சொன்னான். தன் திட்டத்தை நிறைவேற்ற தன் கூட்டாளிகளோடு சேர்ந்து முயற்ச்சி செய்கையில் தோற்கடிக்கபட்டு அவர்கள் அனைவரும் தள்ளப்பட்டனர். தள்ளப்பட்ட அவன் சாத்தான் எனவும் அவனோடு சேர்ந்த தேவ தூதர்கள் அசுத்த ஆவிகள், பேய்கள், பொல்லாத ஆவிகள், பிசாசுகள் எனவும் அழைக்கபடுகின்றனர்.