தேவ சித்தத்தின் ரகசியம் NEW

Contents

தேவ சித்தத்தின் ரகசியம் 1

தேவ சித்தத்தின் மூன்று உட்பிரிவுகள் 1

தேவ சித்தம் என்பது 2

தேவ சித்தத்தை எப்படி விளங்கிக் கொள்வது 2

தேவன் பாவத்தை அனுமதிக்க காரணம்? 4

தேவ சித்தத்தை விளங்கிக் கொள்ள மூன்று அடிப்படைத் தகுதிகள் 5

மூன்று வித சித்தங்கள் 7

B.வேதத்தில் உள்ள தேவ சித்தங்கள் 8

C. ஜெபத்தில் தேவ சித்தங்கள் 8

கர்த்தருக்கு சித்தமானால் 9

தேவ சித்தத்தை நிறைவேற்றுவதால் வரும் பலன்கள் ஆசீர்வாதங்கள் 9

லூக்கா 12:47 தேவ சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராதவன் 9

தேவ சித்தம் உள்ளதா என்று கண்டறியும் விதம் 9

வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தங்கள் 10

தேவ சித்தத்தின் ரகசியம்

எபேசியர் 1: 10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.

தேவ சித்தம் என்பது தேவன் தனக்குள் தீர்மானித்த ஒன்று ஆகும். பவுல் அதை தேவன் தனக்கு வெளிப்படுத்தினார் என்றும் தேவ சித்தம் என்பது ஒரு ரகசியம் என்றும் கூறுகிறார்.

தேவனுடைய சித்தம் இல்லாமல் அண்ட சராசரங்களில் ஒன்றும் நடைபெறாது. எனவே நம்முடைய வாழ்வில் தேவ சித்தம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மிடத்தில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளுவது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

தேவ சித்தத்தின் மூன்று உட்பிரிவுகள்

  1. தேவ ஆலோசனை
  2. தேவ தீர்மானம்
  3. தேவ திட்டம்

1. தேவ ஆலோசனை

  • தேவ ஆலோசனை என்பது தேவன் தமக்குள் அவருடைய ஆழ்மனதில் யோசித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பார் அதையே தேவ ஆலோசனை என்கிறோம்.

2. தேவ தீர்மானம்

  • தேவன் தமக்குள் ஆலோசனை செய்ததை என்ன செய்ய வேண்டும் என்று பரலோகத்தில் உள்ள பரம சங்கத்தில் தீர்மானமாக கொண்டு வரப்படும் அதையே தேவ தீர்மானம் என்கிறோம்.

3. தேவ திட்டம்

  • தேவன் தனக்குள் ஆலோசித்து பரலோகத்தில் தீர்மானமாக கொண்டு வந்ததை பரலோகத்தில் உள்ள புத்தகத்தில் எழுதப்படும் அதுவே தேவ திட்டம் ஆகும். இப்படி எழுதப்பட்ட தேவ திட்டத்தை மீறி இந்த உலகில் ஒன்றும் நடைபெறுவது இல்லை.

தேவ சித்தம் என்பது

தேவ ஆலோசனை தேவன் தீர்மானம் தேவ திட்டம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்தது தான் தேவசித்தம் ஆகும். இது எழுதப்பட்டதற்குப் பிறகு எதுவும் மாறாது. எந்தெந்த காலங்களில் என்ன என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானமாக கொண்டுவரப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பூமியில் என்ன என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது அதை திருத்தவோ மாற்றவோ ஒருவருக்கும் அதிகாரம் இல்லை.

தேவ சித்தத்தை எப்படி விளங்கிக் கொள்வது

தேவ சித்தத்தின் சில பெயர்கள்

  1. தலைவிதி
  2. தலையெழுத்து
  3. தலை பிரமாணம்

1. தலைவிதி

  • வெளிப்படுத்தின விசேஷம் 4: 9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
  • வெளிப்படுத்தின விசேஷம் 4: 10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
  • வெளிப்படுத்தின விசேஷம் 4: 11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

சகலத்தையும் - என்றால் காணக்கூடியவை காணக்கூடாதவை எல்லாவற்றையும் குறிக்கும். அதைக் கீழே உள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

  • கொலோசெயர் 1:15-18 15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
  • 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
  • 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
  • 18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

முந்தின பேறுமானவர் :- இதன் பொருள் எல்லாவற்றுக்கும் முதல்வர் அவரே.

அவரைக் கொண்டு :- இதன் பொருள் எல்லா படைப்புக்கும் மூலப் பொருள் அல்லது மூல ஆதாரம் இவரே என்பதாகும். அவர் இல்லாமல் இந்த உலகில் ஒன்றும் தோன்றவில்லை.

ஆகவே தேவனை முந்தினவர் , முதல்வர் , தலைவர் , மூலப்பொருள் என்கிறோம். இவர் எழுதினது தான் தலையெழுத்து அதாவது தலைவர் எழுதின எழுத்து என்று பொருள். இவர் எழுதின புத்தகத்தை தான் தலைவிதி தலைப்பிரமாணம் என்று கூறுகிறோம். விதி என்றால் சட்டம் என்று பொருள்.

என்ன எழுதினார்

மாறாத பிரமாணம்

  • சங்கீதம் 148: 6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.
  • எபே 1:4-14 4

உலகத் தோற்றத்திற்கு முன் நம்மை தெரிந்து கொண்டார்.

தேவன் பாவத்தை அனுமதிக்க காரணம்?

 தேவன் தமது மகிமை, ஆற்றல், வல்லமை, ஞானம் போன்றவற்றை எளிதில் வெளிப்படுத்த முடியும். ஆனால் தனது மாபெரும் அன்பை வெளிப்படுத்தவேண்டுமானால் அவருக்கு எதிரிகளும், துரோகிகளும் தேவை.

ஏனெனில் எதிரியாக மாறிய, துரோகியாக மாறிய, பெலனற்ற, அசுத்தத்தால் நிறைந்த மனிதனை நேசித்து, தன்னுடைய ஒரேபேரான குமாரனுடைய இரத்தத்தைச் சிந்தி மீட்கும் அளவிற்குத் தேவனுக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தவேண்டுமானால் துரோகியாக மாறும் மனிதனும் அவனை மதி மயங்கச் செய்யும் சாத்தானும் தேவை.

தேவன் லூசிபர் என்ற நல்ல தூதனைத்தான் படைத்தார். அவன் பாவம் செய்ய முற்பட்டு சாத்தான் என்ற கொடியவனாக மாறுவதை அனுமதித்தார். பாவம் தோன்ற அனுமதிக்கப்படாவிட்டால் தேவனின் மாபெரும் அன்பை வெளிப்படுத்த வழியில்லை. எனவே, தேவன் யாவற்றையும் படைத்ததோடு பாவம் தோன்ற அனுமதித்தார். 

வெளி.13:8 8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய

இயேசுகிறிஸ்து சிலுவை மரத்தில் அடிக்கப்பட்டு மரண மடைந்தது மனிதன் படைக்கப்பட்டு 4000 ஆண்டுகட்குப் பின்னரே நடைபெற்றது என்று நாம் அறிவோம். அப்படியானால் 

உலகத் தோற்றத்திற்கு முன் அவர் எவ்வாறு அடிக்கப்பட்டார்?

உலகத் தோற்றத்திற்கு முன்பே, அதாவது மனிதனை உருவாக்குவதற்கு முன்பே பிதா மனிதனுக்குத் தேவையான யாவற்றையும் திட்ட மிட்டார்.

அத்திட்டத்தில் பாவமன்னிப்பும் அடங்கியிருந்தது. உலகத் தோற்றத்தின்போது

தம்முடன் தேவனாக இருந்த வார்த்தையுடன் (யோவா.1:1-2) தமது திட்டத்தைக் கூறினார். உடனடியாக அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தம்மை 'வார்த்தை' ஒப்புக்கொடுத்தார் 

(சங்.40:6-8 ). 

கிறிஸ்து பிதாவை நோக்கிக் கூறியதாக இப்பகுதி அமைகிறது. இவ்வுலகிற்கு மனிதனாக வந்து பாடுபட்டு மரிப்பதற்குக் கிறிஸ்து மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். இந்நிகழ்ச்சி உலகத் தோற்றத்திற்கு முன் நடைபெற்றது. இவ்விதமாக தாம் மரிக்கப்போவதைக் கிறிஸ்து முன்னறிந்த தினால் அப்பொழுதுதிருந்தே மனவேதனை அவருக்கு இருந்தது. 

2) பெலனற்ற, பரிசுத்தமற்ற, மண்ணினால் உருவாக்கப் பட்ட, துரோகியான மனிதனுக்காகக் கொடூரமான பாடுகளைச் சகித்து, இரத்தத்தைச் சிந்தி, தனது உயிரைப் பலியாகத் தருவதற்குக் கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்த மாபெரும் தியாகத்திற்கு ஈடு இணையுண்டோ? இதற்குக் கைமாறாக நாம் செய்யக்கூடியவை எவையென்று சிந்தித்துச் செயல்படுங்கள்

எனவே, தாம் உலகில் மனிதனாக வந்து பாடுபட்டு மிகவும் கோரமான மரணத்தைச் சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் அப்பொழுதிருந்தே அவரது சிந்தனையில் அவர் அடிக்கப்பட்டார் (லூக்.12:50). இதிலிருந்து நாம் கற்றுக்கொள்பவை.

1) சாத்தான் வீழ்ச்சியடைவதற்கு முன்பே அதன் விளைவுகளுக்காகக் கிறிஸ்துவைப் பலியாகச் செலுத்துவது திட்டமிடப்பட்டது என்பதால் சாத்தான் புரட்சி செய்வான் என்பது தேவனுக்கு அதற்கு முன்பே தெரிந்திருந்தது. புரட்சி செய்யும்படி தேவன் சாத்தானைத் தூண்டவில்லை. ஆனால் வருங்கால நிகழ்ச்சிகளை தேவன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதே உண்மை.

2) பாவம் செய்யும்படி தேவன் மனிதனைத் தூண்டவில்லை. ஆனால், மனிதன் கீழ்ப்படியாமற்போவான் என்பது தேவனுக்கு முன்பே தெரிந்திருந்தபடியால் கிறிஸ்துவின் பாடுகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். மனிதன் பாவம் செய்யுமுன்பே பாவமன்னிப்பு தயார் செய்யப்பட்டது. 

தேவ சித்தத்தை விளங்கிக் கொள்ள மூன்று அடிப்படைத் தகுதிகள்

  • ஞானம் தேவை
  • தெரிந்துகொள்ளப்படுதல் தேவை
  • பிரபஞ்ச வேஷம் தரியாமை

ஞானம் தேவை

கொலோசெயர் 1: 9 இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

ஞானம் என்பது தேவனை அறிகிற அறிவை குறிக்கிறது. தேவனே ஞானமாக இருக்கிறார். தேவ சித்தத்தை அறிந்து கொள்ள ஜெபம் தேவை அந்த ஜெபத்தை செய்வதற்கு முன் ஞானம் பெற்று இருக்க வேண்டும்.

தெரிந்துகொள்ளப்படுதல் தேவை

  • அப்போஸ்தலருடைய நடபடிகள் 22: 14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.

திருவுளத்தை - என்றால் உள்ளத்தில் விருப்பம் அதாவது சித்தம் என்பது ஆகும். தேவ சித்தத்தை அறிய அதனால் தான் தெரிந்து கொள்ள படுதல் அவசியம் ஆகும்.

பிரபஞ்ச வேஷம் தரியாமை

  • ரோமர் 12: 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

தேவ சித்தத்தை அறிய வேண்டும் என்றால் நம்முடைய மனம் புதிதாக வேண்டும் அப்பொழுதுதான் மறுரூபம் கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்துக்குரிய சுபாவம் என்பது மாம்சத்தின் கிரியைகள். மாம்சத்தின் கிரியைகள் இல்லாமல் இருந்தால் மறுரூபம் ஆகி தேவ சித்தத்தை அறியலாம்.

மூன்று வித சித்தங்கள்

  • சுயசித்தம் 1 கொரி 7:37
  • மனுஷ சித்தம் 2 பேது 1:21
  • தேவ சித்தம் மத் 6:10

சுயசித்தம்

  • ஒரு மனிதன் தன்னைக் குறித்து தானே எடுக்கும் தீர்மானத்திற்கு சுயசித்தம் என்று பொருள்.

மனுஷ சித்தம்

  • ஒரு மனிதனைக் குறித்து மற்றொரு மனிதன் எடுக்கும் முடிவுகளுக்கு மனுஷ சித்தம் என்று பொருள்.
  • சுயசித்தமும் மனுஷ சித்தமும் தேவனுக்கு விரோதமான செயலாகவும் பாவமாகவும் காணப்படுகிறது.

தேவ சித்தம்

தேவ சித்தம் →மத் 6:10

மத் 6:10 பரமண்டலங்களிலே தேவசித்தம் மட்டுமே செய்யப்படுகிறது.

A 1. வேதத்தில் தேவ சித்தம் முக்கியத்துவப்படுத்தப்பட்டள்ளது.

2. சித்தம் என்பது எப்பொழுதும் பிதாவினுடையது.

3. இயேசுவுக்கும் (மனுஷகுமாரன்) பிரிசுத்த ஆவியானவருக்கும் தனியாக சித்தம் கிடையாது.

இயேசு கிறிஸ்து சுயமாக எதையும் செய்யவில்லை

  • யோ 6:38, 5:30, →உபா 18:18 பிதாவின் சித்தத்தின் படி செய்யவே வானத்திலிருந்து
  • யோ 8:26,28 எபி 10:7,9 →நான் சுயமாய் ஒன்றும் செய்யாமல் தேவனே உம்முடைய சித்தத்தின் படி செய்ய இதோ வருகிறேன்
  • மத் 26:39,42, 44 உம்முடைய சித்ததின் படி ஆகக்கடவது.
  • யோ 4:34 சித்தத்தை செய்து முடிப்பதே என்னுடைய போஜனம்.
  • யோ 5:19, 12:49 தாமாய் செய்யமாட்டார், சுயமாக பேசாமல்

பரிசுத்த ஆவியானவர் சுயமாக எதையும் பேசவில்லை

  • யோவான் 16:13-15
  • ரோம 8:26-27

தூதர்கள் சுயமாக எதையும் செய்வதில்லை

  • சங் 103:20
  • மத் 6:10

B.வேதத்தில் உள்ள தேவ சித்தங்கள்

வேதாகமத்தில் 21 சித்தங்கள் கூறப்பட்டுள்ளது அவற்றுள் சில கீழே தருகிறோம்.

  1. எல்லா மனுஷரும் சத்தியத்தை அறிவது 1 தீமோ 2:4
  2. வசனத்தில் மறுபடியும் பிறப்பது அல்லது ஜென்ம சுபாவம் சாவது யாக் 1:18
  3. பரிசுத்தம் உள்ளவர்களாய் இருப்பது 1 தெச 4:3
  4. ஸ்தோத்திரம் செய்வது 1 தெச 5:18
  5. தீமைக்கு நன்மை செய்வது 1 பேதுரு 2:15
  6. பாலருக்கு உரிய சுபாவம் மத் 11:25-26
  7. உயிர்த்தெழுதலில் பங்கடைவது யோவான் 6:39-40

C. ஜெபத்தில் தேவ சித்தங்கள்

  • (வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தல்)
  • (யோவான் 14:13,14) யாக் 4:3, சங் 78:29-31, 106:14,15
  • 1யோ 5:14 → தேவ சித்தத்தின் படி கேட்டால் செவிகொடுப்பார்.
  • மத் 10:29 பிதாவின் சித்தம் இல்லாமல் அடைக்கலான் குருவியும் விழாது.
  • மத் 18:14 ஒருவனும் கெட்டுப்போவது பிதாவின் சித்தம் அல்ல
  • எபே 5:17,10→ கர்தருடைய சித்தம் இன்னாதன்று உனார்ந்து கொள்ளுங்கள்.
  • யோ 9:31 பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லை, தேவனுக்கு சித்தமானதை செய்தால் செவிகொடுப்பார்

கர்த்தருக்கு சித்தமானால்

  • 1கொரி 4:19 கர்த்தருக்கு சித்தமானால்
  • எபி 6:3 →தேவனுக்கு சித்தமாணால்
  • யாக் 4:15 ஆண்டவருக்கு சித்தமனால் நாங்களும் உயிரோடிருந்தால்
  • ரோமர் 8:27 ஆவியின் சிந்தை

தேவ சித்தத்தை நிறைவேற்றுவதால் வரும் பலன்கள் ஆசீர்வாதங்கள்

  • ரோமர் 12:2 தேவ சித்தத்தை அறிவதினால் மறுரூபம்
  • மாற் 3:35 - தேவ சித்தத்தின் படி செய்கிறவன் எனக்கு சகோதரன் சகோதரி
  • மத் 7:21 தேவ சித்தத்தின் படி செய்கிறவன் பரலோக ராஜ்யத்தில்
  • 1யோவா 2:17 - தேவ சித்தத்தின் படி செய்கிறவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்

லூக்கா 12:47 தேவ சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராதவன்

தேவ சித்தம் உள்ளதா என்று கண்டறியும் விதம்

  • சங் 119:165
  • ஏசாயா 26:3
  • எரே 29:11
  • யோவான் 14:27

சமாதானமாய் இருக்கும்

வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தங்கள்

  • ரோமர் 9:23 இஸ்ரவேலின் இரட்சிப்பு
  • கொலோ 1:27 கிறிஸ்துவை ப்ற்றின இரகசியம்
  • ரோமர் 9:15 இரக்கம், உருக்கம்
  • மத்தேயு 11:27 பிதாவை குறித்த வெளிபாடு
  • எபே 1:9-10 சகலமும் கிறிஸ்துவுக்குள் கூட்டி சேர்கப்படும்
  • எபே 1:6,12 முன் குறிக்கப்படுதல்
  • ஏசாயா 53:10 கிறிஸ்துவின் பாடுகள்
  • யோவான் 15:16 தெரிந்துக்கொள்ளுதல்
  • ஆதி 2:9,16 வார்த்தைக்கு கீழ்ப்படிதல்
  • எபி 13:16 நன்மை செய்தல், தானதர்ம் செய்தல்
  • 2கொரி 9:7 தேவனுக்கு கொடுத்தல்
  • ரோமர் 12:1; 1 பேதுரு 2:5 பலி
  • கொலோ 3:20 கீழ்ப்படிதல்
  • 1கொரி 1:21 பிரசங்கம்
  • லூக்கா 12:32 தேவ ராஜ்ஜியம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.