லெந்து நாட்கள் (LENT)

லெந்து நாட்கள் (LENT)

கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முன்பு நாற்பது நாட்கள் உபவாச நாட்களாய் கொண்டாடப் படுவது. இதுவும் பாபிலோனிய பழக்க வழக்கங்களி லிருந்து வந்ததுதான். அஸ்தரோத்தை வணங்கி வந்தவர்கள் வருடத்தின் ஆரம்பத்தில் காலத்தில் நாற்பது நாட்கள் மாமிச வசந்த உணவு உண்ணாமல் விரதமிருந்தனர். குர்டிஸ்தான் மக்கள் இன்றும் அதை அனுசரிக்கின்றனர்.

இதுபோலவே எகிப்தியர் பண்டை நாட்களில் ஓசிரிஸ் என்ற கடவுளுக்கு மரியாதை செய்யும்படி வருடத்தின் ஆரம்ப மாதங்களில் 40 விரதமிருந்து வந்தனர். இதையே நாட்கள் கிறிஸ்தவ உபவாச நாட்களாய் ரோமசபை கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாற்றினது.

கி.பி.1191ல் 2ம் செலஸ்டின் என்ற போப் முதன்முதலாக லெந்து நாட்களின் ஆரம்ப நாளை சாம்பல் புதன்கிழமை (ASH WEDNESDAY) என்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த 40 நாட்களும் மாமிசம் புசிக்கக்கூடாது என்று போப் கட்டளை யிட்டார். ஆனால் 1966 பிப்ரவரி மாதம், 6ம் போப் பால் என்பவர் சாம்பல் புதன்கிழமையும், பெரிய வெள்ளிக் கிழமையும் மட்டுமே இறைச்சி புசிக்கக் கூடாது என்பது கட்டாயம் என்று மாற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.