பொன்குத்துவிளக்கு -GOLDEN LAMP
குத்துவிளக்கைப் பசும்பொன்னினால் அடிப்பு வேலையாய் உண்டாக்க வேண்டும்.
(யாத் 37:17; எண் 8:4) அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும்
பொன்னினால் செய்யப்பட வேண்டும். ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்;
குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று
கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். ஒவ்வொரு கிளையிலே
வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும்
இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே
இருக்கவேண்டும். விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு
மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. அதிலிருந்து புறப்படும் இரண்டு
கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு
கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு
கிளைகளுக்கும் அப்படியே இருக்க வேண்டும். அவைகளின் பழங்களும் அவைகளின்
கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய்
அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். அதில் ஏழு
அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கை வைக்கவேண்டும். (யாத் 26:35) மேஜை
வடபுறமாக வைக்கப்பட்டிருக்கும். இவ்விரண்டும், எதிரெதிராக இருப்பதினால்
மேஜையின்மீது வைக்கப்பட்டிருக்கும் அப்பங்களின்மீது எப்போதும் வெளிச்சம் பட்டுக்
கொண்டிருக்கும். குத்துவிளக்கு எப்போதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும்.
சாயங்காலத்திலும், காலையிலும் விளக்கில் எண்ணெய் ஊற்றுதல், திரியைச் சரிசெய்தல்
போன்ற வேலைகள் செய்யப்பட வேண்டும். (யாத் 27:21; லேவி 241-4) எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருப்பதற்கு ஏதுவாக எண்ணெய் வைக்கப்படும் பகுதி அளவில் பெரியதாக இருக்கும். பிரயாணத்தின் போது இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத் தண்டையும், அதின் அகல்களையும், அதன் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் அதற்குரிய எண்ணெய் பாத்திரங்களையும் மூடவேண்டும். (எண் 4.9-10). (யாத் 30:27; யாத் 31:8; யாத் 35:14; யாத் 37:17-20; யாத் 39:37; யாத் 40:4,24; 24:4; 6 3:31; 66 4.9; 6 8:2-4; 6 9:2)
மூன்று மொக்குகள் என்பது மூன்று விளக்குகளைக் குறிக்கும். (யாத் 25:34) விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகள் இருக்கும். ( 25:33-34).
குத்துவிளக்கிற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும், மறுபக்கத்தில் மூன்று கிளைகளும் இருக்கும். நடுப்பக்கத்தில் விளக்குத்தண்டும் அதே உயரத்தில் இருக்கும். இவையெல்லாம் சேர்ந்து ஏழு அகல்களாகும். ஏழு அகல்கள் பரலோகத்திலுள்ள மாதிரியின் படியே செய்யப்பட்டிருக்கிறது. (யாத் 25:40; சக 4:2) விளக்குத்தண்டில் ஏன் ஏழு அகல்கள் உள்ளன என்பதற்கான காரணம் தெரியவில்லை. சக 4:2 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு அகல்கள் கர்த்தருடைய கண்களுக்கு அடையாளமாகும். (சக. 4:10) வெளி 1:12-13; வெளி 2.1 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு சபைகளைக் குறிக்கும். (வெளி 1:20) வெளி 4.5 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு அக்கினி தீபங்கள் தேவனுடைய ஏழு ஆவிகளையும் அல்லது பரிசுத்த ஆவியானவரின் நிறைவையும் குறிக்கும். (வெளி 5:6) ஆசரிப்புக்கூடாரத்தில் உள்ள ஏழு அகல்கள் கர்த்தருடைய கண்களை அடையாளமாகக் குறிக்கலாம். (யாத் 25:40; சக 4:2,10; எபி 8:5; எபி 9:23)
வேதாகமத்தில் பல இடங்களில் பலவிதமான எண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் ஆவிக்குரிய அர்த்தம் கூறமுடியாது. சான்றாக ஒன்று என்பது ஒற்றுமையைக் குறிக்கும். (ஆதி 2:24; ஆதி 11:6; யோவான் 10:30; யோவான் 17:21-23) ஆனாலும், ஒன்று என்னும் எண் பயன்படுத்தப்பட்டிருக்கும் எல்லா வசனங்களும் ஒற்றுமையைக் குறிப்பதில்லை. (ஆதி 2:21; ஆதி 4:19; ஆதி 14:13; ஆதி 199; யோசு 12:9-24; யோவான் 1:23, 26,40
பசும்பொன் குத்துவிளக்கை உண்டாக்குவது பற்றிய கட்டளைகள்
1. பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்குவாயாக. அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும் (யாத் 25:31).
2. அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்
3.ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்;குத்துவிளக்கின் மூன்றுகிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும் (யாத் 25:32)
4. ஒவ்வொரு கிளையிலே வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். (யாத் 25:33).
5. விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. (யாத் 25:34).
6. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். (யாத் 25:35)
7. அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; (யாத் 25:37).
8. அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
9. அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. ( யாத் 25:38).
10. குத்துவிளக்கையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். (யாத் 25:39).
11. மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு. (யாத் 25:40)
