குருவானவரிடம் பாவ அறிக்கை செய்தல் (AURICULAR CONFESSION)
இதுவும் பாபிலோனிய மார்க்கத்திலிருந்து வந்த பழக்கமே. பாபிலோனிய மதக்குருக்களிடம் இரகசிய மாய் பாவ அறிக்கை செய்தபின்பே மற்ற மதச் சடங்குகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். இதையே சபையும் பின்பற்ற ஆரம்பித்தது. திருச்சபையில் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் குருவான வரிடம் தனிப்பட்ட முறையில் பாவ அறிக்கை செய்யும்முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் கி.பி.1215ல் மூன்றாம் இன்னசென்ட் என்ற போப்பினால் லேட்டரன் என்ற ஊரில் நடந்த திருச்சபை ஆலோசனை கூட்டத்தில் இது கட்டளை யாக வெளிப்பட்டது. இதற்குப்பின்பு சபை மக்கள் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாகிலும் குருவானவரிடம் தனியே சென்று பாவ அறிக்கை செய்து அவர் கட்டளையிடும் நோன்பை கடைப் பிடிக்க வேண்டும்.
பாவத்தின் தன்மைக்கேற்ப நோன்பு செய்ய வேண்டும். உபவாசம், சரீரத்தை ஒடுக்குதல், புனிதப் பயணம் போன்றவற்றை குருவானவர் கட்டளையிடுவார். இதை நிறைவேற்றினால் மட்டுமே சபை சாக்கிரமந்துகளில் கலந்து கொள்ள முடியும்.
எண்ணத்தில் வந்த பாவ உணர்வு, பாவ செயல் எல்லாம் தெளிவாக ஒளிவுமறைவின்றி அறிக்கை செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட அறிக்கை யினால் அறிக்கையிடுவோரும், அறிக்கையை கேட்கும் குருவானவர்களும் மனநிலையிலும், செயலிலும் பலவிதங்களில் பாதிக்கப்படுகின்றனர். இப்படிப் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகளை இங்கே எழுத விரும்வில்லை. ஆனால் இது இருபாலருக்கும் (சபை மக்களுக்கும், குருவானவர்களுக்கும்) நன்மை பயப்ப தில்லை, தீமை ஏராளம் உண்டாகிறது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் உபதேசத்திற்கு ஆதாரமாக எடுக்கும் வசனம்...
"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர் களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப் படும், எவர்களுடைய பாவங்களை மன்னியா திருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்" (யோவான் 20:23).
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு தம்முடைய சீடர்களைப் பார்த்து இப்படிச் சொன்னார். வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்கும்போது பாவங் களை மன்னிக்க இயேசுகிறிஸ்து ஒருவருக்கே அதிகார முண்டு என்று திட்டமாய் அறிகிறோம் (மத்.9:6).
அறிக்கையிடுவதில் பலவிதங்கள் உண்டு
1. தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிடல் ''நம்முடைய பாவங்களை யிட்டால், பாவங்களை நாம் அறிக்கை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (யோ.1:9).
"எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்" (மத்.6:12 - பரமண்டல ஜெபம்). "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறனெவனோ இரக்கம் பெறுவான்" (நீதி.28:13). இந்த பாவ அறிக்கையை தொடர்ந்து தேவனிடம் செய்ய வேண்டியது அவசியம்.
2.சபைக்கு முன்பாக தங்கள் பாவங்களை அறிக்கையிடல் சபை மக்களை பாதிக்கக்கூடிய பாவத்தை செய்யும் போது அதை சபை நடுவே அறிக்கையிடுவது அவசியம்.
யோசுவா ஆகானைப் பார்த்து அவன் செய்த பாவத்தை சபைக்கு முன்பாக அறிக்கையிடச் சொன்னான். அவனும் அறிக்கையிட்டான் (யோசுவா 7:19-21).
3.கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அறிக்கையிடல் "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கை யிட்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்'' (யாக்.5:16).
"முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையை செலுத்து'' (LD $.5:24).
இப்படிப்பட்ட அறிக்கைகளை மட்டுமே வேதம் போதிக்கின்றது.
ஆரிக்குலர் அறிக்கை (AURICULAR CONFESSION) வசன ஆதாரமற்றது. 'ஆரிஸ்' (AURIS) என்றால் 'காது'. அதாவது 'குருவானவரின் காதில் அறிக்கையிடல்'. இது வசனத்தில் காணப்படாத ஒன்று. அப்படியா னால் எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும் என்று இயேசு சொன்னதின் சுருத்து என்ன?
இயேசு தரும் பாவ மன்னிப்பின் நற்செய்தி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நற்செய்தியை பிரசங்கித்து, மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரிடம் பாவ அறிக்கை செய்ய வழி நடத்து கிறோம். எவர்கள் இயேசுவிடம் பாவ அறிக்கை செய்து ஜெபிக்கிறார்களோ, அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட நாமும் அவர்களுக்காக ஜெபிக்கிறோம். இப்படி நாம் யாரை கிறிஸ்துவண்டை வழிநடத்து கிறோமோ அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
இந்தக் கருத்தைத்தான் புதிய ஏற்பாடு வலியுறுத்துகிறது. பாவங்களை மன்னிக்க வல்லவர் இயேசுகிறிஸ்து ஒருவரே. எல்லாப் பாவங்களையும் போதகரிடமே அறிக்கையிட்டால் போதுமென்றால் இயேசுகிறிஸ்துவே தேவையில்லை என்று ஆகிவிடும். எல்லாரும் போதகரிடம் அறிக்கையிட வேண்டுமா னால் போதகர் தன் பாவங்களை யாரிடம் அறிக்கை யிடுவது? சபைத் தலைவர்கள் தங்கள் பாவங்களை யாரிடம் அறிக்கையிடுவது?
