இயேசு கிறிஸ்து ஒரு வெளிநாட்டுக் கடவுள். நம்ம தேசத்தில இல்லாத தெய்வங்களா? ஏன் ஒரு வெளிநாட்டுக் கடவுளை போயி கும்பிடணும்?
கடவுள்ள என்ன வெளிநாட்டுக் கடவுள், உள் நாட்டுக் கடவுள்? கடவுள் ஒருத்தர்தான். இந்த பிரபஞ்சத்தையும், நாசியில் ஜீவக்காற்றுள்ள சகல ஜீவராசிகளையும் படைச்சது ஒருத்தர்தான். பல கடவுள்கள் இல்லை. அதுவுமின்றி, இயேசு கிறிஸ்து வெளிநாட்டில் பிறந்தவர் இல்லை. ஆசியா கண்டத்தில் பிறந்தவர். அவரோட 12 சீஷர்களும் ஆசியாவிலேயே பிறந்தவங்க. பைபிளை எழுதின 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவருமே ஆசியாவைச் சேர்ந்தவர்களே. முன்னாடி ஆசியா கண்டம், இந்தியா, இலங்கை எல்லாம் ஒரே பூமியாக, ஒரு நிலப்பரப்பாக லெமூரியா கண்டமாக இருந்தது. ஜலப்பிரளயத்தில இந்த பூமி பல கண்டங்களாக உருவாகிடுச்சு. கிறிஸ்து ஒரு வெளிநாட்டுக் கடவுள் இல்லை.
