பிசாசை குறித்து படிப்பது அவசியமா

பிசாசை குறித்து படிப்பது அவசியமா?  அவசியம். 

ஏன் அவசியம்? 

  •  மனிதனை தேவன் ஆட்கொள்ள விரும்புவது போலவே பிசாசு விரும்புகிறான்.
  • இங்கு நாம் தேவனை விட்டு பிசாசின் பக்கம் போகாமல் இருக்க அவன் தந்திரங்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். 

2கொரிந்தியர் 2: 11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

சாத்தான் 

  • மோசம் போக்குவரவன் 
  • தந்திரம் உள்ளவன்

அவனுடைய தந்திரத்தை அறிந்தால் மட்டுமே நாம் அவனால் மோசம் போகாமல் இருக்க முடியும்.

அவன் உலகம் முழுவதையும் மோசம் போகுகிறான் 

வெளி  12: 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

பிசாசை குறித்த பொதுவான அபிப்பிராயம் 

  • அகோரமான உருவம் 
  • பயங்கரமான உருவம் 

இப்படி இருப்பதாகத்தான் நம்ப வைத்திருக்கிறார்கள். 

பிசாசுத்துவம் என்றால் என்ன?

  • தேவன் ஒருவர் தெய்வீகம் மூன்று
  • மனிதன் ஒருவன் மனுஷீகம் மூன்று 
  • பிசாசு ஒருவன் பிசாசுத்துவம் மூன்று

நாம் படிக்க இருப்பது 
பிசாசுத்துவம் என்றால் என்ன? 

  1. அவன் எப்படி மூன்று ஆழ்த்ததுமாய் இயங்குகிறான்? 
  2. அவனுடைய செயல்பாடுகள் என்ன? 
  3. மனிதனுக்குள்ளே தன்னுடைய பிசாசுத்துவத்தை எப்படி செயல்படுத்த முயற்சிக்கிறான்?

இவைகளை பார்ப்பதற்கு முன் ஆராய வேண்டிய கேள்வி:

இயேசு கிறிஸ்துவினால் சிலுவையில் பிசாசின் தலை நசுக்கப்பட்டது - இது சரியா தவறா?

சரி என்றால், 

இன்று உலகில் காணப்படும் அத்தனை பாவங்களும் யாரால் நடப்பிக்கப்படுகிறது? அவைகளுக்கு காரணம் யார்?  பிசாசு தான் என்றால் அவன் தலை இன்னும் நசுக்கப்படவில்லை. 

ஆதி 3:15 ஐ அடிப்படையாகக் கொண்டு தலை நசுக்கப்பட்டது என்கிற உபதேசம் உருவாக்கப்பட்டது. 

இன்னும் நசுக்கப்படவில்லை என்பதற்கு சில வசனங்களை வாசிக்கலாம் 

ரோமர் 16: 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

எபேசியர் 6: 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

1பேதுரு 5: 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

வெளி 12: 17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.

 தலை நசுக்கப்படவில்லை என்றால் சிலுவையில் என்ன நடந்தது?

1 யோவான் 3:8  பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

இரட்சிக்கப்பட்ட ஒருவன் பிசாசின் கிரியைகளினால் மோசம் போகாமல் பாதுகாப்பதற்கு கிறிஸ்துவின் ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இது இரட்சிப்பில் நிலைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 

ஆதி 3:15 தலை நசுக்கப்படும் 

இந்த தீர்க்க தரிசனம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பிறகு நிறைவேறும். 

  • ரகசிய வருகை 
  • ஏழு வருட உபத்திரவ காலம் 
  • ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் 
  • பகிரங்க வருகை 

இந்த வருகையின் போது பிசாசின் ஆவி ஆத்துமா அளிக்கப்படுகிறது சரிதம் ஆயிரம் வருடம் சிறை வைக்கப்படுகிறது. ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகு சரீரம் நரகத்தில் தள்ளி அளிக்கப்படுகிறது. 

நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் இதன் விளக்கம் 

குதிங்கால் இது ஆவிக்குரிய அர்த்தமுடையது. 

எபேசியர் 6: 15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;

சுவிசேஷ ஊழியத்திற்கான ஆயத்தத்தை பாதரட்சையாக கூறப்பட்டுள்ளது 

ஏசாயா 52: 7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

சுவிசேஷ ஊழியத்தை செய்யும் ஊழியனின் பாதம் அழகாக உள்ளது 

பாதம் , பாதரட்ச்சை இவை இரண்டும் ஊழியத்தையும், ஊழிய காரனையும் குறிக்கும் மறைமுக குறியீட்டு வார்த்தை. 

ஊழியத்தையும் ஊழியனையும் நசுக்குவான் என்று ஆதியிலே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. 

சிலுவையில் இயேசு பிசாசுக்கு செய்தது என்ன?

சம்பவம் : 1. பிசாசின் கிரியைகளை அழித்தார்.

1யோவான் 3: 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசின் கிரியைகளை அழித்தார். இதன் பொருள் மனிதர்கள் பிசாசின் கிரியைகளை அழிக்க அதிகாரம் உடையவர்களாக இயேசு மாற்றினார் என்பதே ஆகும். ஆவினாலும் வார்த்தையினாலும் நாம் பிசாசின் கிரியைகளை அழிக்க முடியும். ஆனாலும் பிசாசை அழிக்கவோ கட்டவோ நமக்கு அதிகாரம் இல்லை. அவனைத் துரத்துவதற்கு மட்டும் நமக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் : 2. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த பிரிவினையை அகற்றினார்

எபேசியர் 2: 14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,

சம்பவம் : 3. நியாயப்பிரமாணத்தை ஒழித்தார்

எபேசியர் 2: 15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,

சம்பவம் : 4. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பகையை அழித்தார்

எபேசியர் 2: 16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

சம்பவம் : 5. சமாதானத்தை உண்டு பண்ணினார்

எபேசியர் 2: 17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.

பிசாசுத்துவம் எப்படி இயங்குகிறது 

பிசாசு - ஒருமை 

பிசாசுத்துவம் - பன்மை 

தேவன் தெய்வீகத்தில் மூவராக இருப்பது போலவே 

மனிதன் மணிசீகத்தில் மூன்றாக செயல்படுவது போலவே 

பிசாசு பிசாசுத்துவத்தில் மூன்றாக செயல்படுகிறான்

  • அந்தி கிறிஸ்து - ஆத்துமா - கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறான்
  • காள்ள தீர்க்கதரிசி - ஆவி - ஆவியானவருக்கு விரோதமாக செயல்படுகிறான்
  • வலுசர்ப்பம் - சரீரம் - பிதாவுக்கு விரோதமாக செயல்படுகிறான் 

தெய்வீகத்துக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டே மணிசீகத்தையும் முழுவதுமாக ஆட்கொள்ள முயற்சிக்கிறான். 

பிசாசு யார் அவன் எங்கு இருந்தான்?

இதை அறிந்து கொள்ள தூதர்களை குறித்து நாம் அறிய வேண்டியது அவசியமாக உள்ளது.

முதல் நிலை தூதர்கள்

  • கேருபீன்கள்
  • சேராபீன்கள்
  • நான்கு ஜீவன்கள்
  • எசே 10:1,20-22; ஏசா 6:2

கேருபீன்களும் சேரா பீண்களும் பிதாவின் சிங்காசனத்தின் வலது புறமும் இடது புறமும் இருப்பார்கள். இந்த இரண்டு பிரிவினரை தான் வேதம் நான்கு ஜீவன்கள் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. கேருபீன்கள் வலது புறமும் இடது புறமும் இருப்பார்கள். சேராபீன்கள் எதிர்ப்புறத்தில் இருப்பார்கள்.

இரண்டாம் நிலை தூதர்கள்

  • இருபத்தி நான்கு முப்பர்கள்
  • வெளி 4:10; 5:8

சிலர் இவர்களை 12 கோத்திர பிதாக்கள் என்றும்  12 அப்போஸ்தலர்கள் என்றும் கூறுகின்றனர் ஆனால் அது தவறான உபதேசம் ஆகும். காரணம் கானான் தேசத்திற்குளே பிரவேசிக்க தகுதி இல்லாத கோத்திர பிதாக்கள் தேவனுடைய சமூகத்தில் வருவதற்கு தகுதி அற்றவர்கள் ஆவர். மேலும் கோத்திர பிதாக்களை விட முற்ப்பிதாக்கள் சிறந்த பரிசுத்தவான்களாக வாழ்ந்தனர்.

இவர்களில் 12 அப்போஸ்தலர்கள் இருப்பதற்கான சாத்தியமும் இல்லை. காரணம் 12 அப்போஸ்தலர்களில் ஒருவனான யோவான் இந்த சம்பவத்தை எழுதும் போது பூமியில் இருந்தான் என்பதை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. 

யார் இந்த 24 முப்பர்கள் 

 உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே தேவனால் படைக்கப்பட்ட தூதர்கள்

  • சர்வ சங்கமாகிய சபை 
  • ஆலோசனை சங்கம் 
  • பரலோக அரசாங்கத்தின் அமைச்சர்கள் 
  • சிங்காசனத்திற்கு முன்பு வலது புறம் 12 பேர் இடதுபுறம் 12 பேர் இருப்பார்கள்.

மூன்றாம் நிலை தூதர்கள்

  • ஆயிரமாயிரம் ஆன பொதுவான தூதர்கள்
  • வெளி 5:11; எபி 12:12; தானி 7:10

இந்த மூன்றாம் நிலை தூதர்களில் 

மூன்று பிரிவுகள் உள்ளன . அவைகளுக்கு மூன்று பிரதான தூதர்கள் உள்ளனர்.

இந்த தூதர்களின் வேலையின் அடிப்படையில் அவர்கள் யாருடைய தூதர்கள் என்று அறியலாம். 

மீகாவேல் - யுத்தம் செய்யும் தூதன். இவனை பிதாவாகிய தேவனுடைய தூதன் என்றும் அழைக்கின்றனர்.

காபிரியேல் - செய்திகளை பரிமாற்றும் தூதன். 

  • பரலோகத்தில் இருந்து செய்திகளை கொண்டு வருதல் 
  • வேதத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துதல்

இவனை பரிசுத்த ஆவியானவரின் தூதன் என்று அழைக்கின்றனர்.

கேரூப் - 

  • ஆராதனை கூட்டத்திற்கு தலைவன்
  • தேவனுடைய பொக்கிஷங்களுக்கு பாதுகாவலன்
  • தேவனுடைய புத்தகங்களுக்கு பொறுப்பாளன்
    • ஜீவ புத்தகம் (பிதாவினுடையது)
    • ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகம் (இயேசுவின் புத்தகம்) 
    • ஞாபக புத்தகம் (பரிசுத்த ஆவியானவரின் புத்தகம்)

இவனை கிறிஸ்துவின் தூதன் என்று அழைக்கின்றனர். 

இவனுடைய பெயர் 

  • லூசிபர் -  ஒளிவீசுபவன் 
  • விழுந்து போன தூதன், 
  • பிசாசு, 
  • சாத்தான், 
  • வலுசர்வம், 
  • அந்தகாரலோகாதிபதி 

 இவன் தேவனுக்கு எதிர்த்து நின்று கழகம் செய்து விழுந்து போனான். மனம் திரும்ப வாய்ப்பு கொடுத்தும் எதிர்த்து நிற்கிறவனாகவே இருந்தான்.

கேரூப் என்ற தூதர் பிசாசாக மாற காரணம்

சிங்காசன பதவி ஆசை (ஜீவனத்தின் பெருமை) எசே 28:2; ஏசா 14:13-14 

எசேக்கியேல் 28: 2 மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

  • உன் இருதயம் மேட்டிமைகொண்டு: 
  • நான் தேவன்,
  •   தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் 
  • உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும்

ஏசாயா 14: 13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

ஏசாயா 14: 14

நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

  • தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; 
  • வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்
  • உன்னதமானவருக்கு ஒப்பாவேன்

உன்னதம் என்பது

பிதாவாகிய தேவனுடைய ராஜ்ஜியம் -> பரம எருசலேம் -> பரமசீயோன் -> கொடுமுடி -> உன்னதம் -> ஆராதனை கூடம் -> தேவனுடைய சிங்காசனம்

இவ்வளவு உன்னதமும் உயரமான இடத்தில் இருந்த தேவனுடைய சிங்காசனத்தின் மீது பேராசை கொண்டான் எனவே தள்ளப்பட்டான்.

இருதயத்தின் மேட்டின்மை ->  பெருமை -> தேவனுக்கு எதிரி 

தேவனால் கொடுக்கப்படாத எந்தப் பதவியும் நம்மை மேலே அல்ல கீழே தள்ளும் என்பதை நினைவில் கொள்ளவும்.

செல்வம், பண ஆசை (கண்களின் இச்சை) எசே 28:4-5,16 

எசேக்கியேல் 28: 4 நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.

எசேக்கியேல் 28: 5 உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.

எசேக்கியேல் 28: 16 உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.

உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.

சிங்காசன பதவி ஆசை பண ஆசை அவன் இருதயத்தை மேட்டின்மை கொள்ள வைத்தது 

இருதயத்தின் மேட்டின்மை ->  பெருமை -> தேவனுக்கு எதிரி 

அவனுடைய வசத்தில் இருந்த பொன்னும் பொருளும் அவனுடைய இருதய மேட்டின்மைக்கு வழிவகை செய்தது எனவே தள்ளப்பட்டு போனான்.

எந்த ஒரு மனுசனிடமும் பொண்ணும் பொருளும் ஆஸ்தியும் அந்தஸ்தும் பதவியும் புகழும் பெருகுகிறதோ அவனுடைய இருதயம் மேட்டின்மைக்கு நேராக வழிவிலக செய்யும். எனவே ஊழியர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

அழகு மற்றும் அழகின் மோகம் (மாம்சத்தின் இச்சை) எசே 28:12-13,17 

எசேக்கியேல் 28: 12 மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

எசேக்கியேல் 28: 13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 28: 17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

அழகு, மினுக்கு -> இருதயத்தின் மேட்டின்மை ->  பெருமை -> தேவனுக்கு எதிரி 

அவனுடைய அழகின் பெருமையினால் தள்ளப்பட்டு போனான். நாம் பார்த்த இந்த மூன்று காரியங்களும் பிசாசின் ஆயுதங்களும் தந்திரங்களுமாய் இருக்கிறது.

  • தேவனுக்கு சமமாக்குவது 
  • பதவி ஆசை 
  • பண ஆசை 
  • அழகின் மோகம்

பிசாசின் முடிவுகள் 

அந்திக்கிறிஸ்துவின் முடிவு (ஆத்துமாவில் செயல்படுகிறவன்)

இவன் கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுவான் (1 யோவா 4:3; வெளி 19:20). கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் சத்தியத்திற்கு விரோதமாகவும் நம்முடைய ஆத்துமாவில் செயல்படுவான்.

1 யோவா 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

வெளி 19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

கள்ள தீர்க்கதரிசியின் முடிவு (ஆவியில் செயல்படுகிறவன்)

இவன் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகவும் மனுஷனுடைய ஆவிக்கு விரோதமாகவும் செயல்படுவான் (2 பேது 2:2; வெளி 19:20). பரிசுத்த ஆவியானவர் கண்டித்து உணர்த்துவார் கள்ள தீர்க்கதரிசி கண்டிப்பது இல்லை.

 2 பேது 2:2: அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

வெளி 19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

வலு சர்பத்தின் முடிவு (சரீரத்தில் செயல்படுகிறவன்)

இவன் பிதாவாகிய தேவனுக்கு விரோதமாகவும் நம்முடைய சரீரத்துக்கு விரோதமாகவும் செயல்படுகிறவன் 

ஏசா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

வெளி 20:9-10

9 அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

பிசாசின் அழிவு எப்போது?

நாம் ஏற்கனவே படித்த படி மனிதர்கள் பிசாசை கட்டவோ பாதாளத்தில் தள்ளவோ அழிக்கவோ அதிகாரம் உடையவர்கள் அல்ல. இவைகளைச் செய்யும் அதிகாரம் மீகாவேல் தூதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தின விசேஷம் 20: 2

பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

ஆயிரம் வருடம் முடிந்த பிறகு சில காலம் மீண்டும் அவன் பூமியில் விடப்படுகிறான் 

வெளிப்படுத்தின விசேஷம் 20: 7

அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

அதன்பிறகு அவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக முழுவதுமாக எரிகிற அக்கினியும் கந்தகமும் ஆன அக்கினி கடலிலே நிரந்தரமாக தள்ளப்படுகிறான் இதுவே அவனுடைய அழிவு ஆகும்.

வெளிப்படுத்தின விசேஷம் 20: 10

மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.