வேலைக்காரனாகிய மல்குஸ்:
"அந்தபடியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதறவெட்டினான். அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனை சொஸ்தப்படுத்தினார்” (லூக் 22:50,51).
கை நீட்டி இயேசு தொட்ட மனித உடல் உறுப்புக்களில் மல்குஸ் -ஸின் காது முக்கியமானதாகும். இவனைக் குறித்து நான்கு சுவிசேஷங்களிலும் ஏறத்தால ஐந்து முறை சொல்லப்பட்டுள்ளது. அதிலும் அவனுடைய பெயர் யோவான் சுவிசேஷத்தில் மட்டும் ஒரே ஒரு முறைமட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. முதலாவது இவனு டைய பெயரின் உச்சரிப்பை நன்கு தெரிந்து கொள்வது நல்லது. இவனைக் குறித்து சொல்லும் போது எல்லோரும் மல்கூஸ் என் -றுதான் சொல்கிறார்கள், பேசுகிறார்கள், உச்சரிக்கிறார்கள். அது தவறு. அவன் பெயர் மல்கூஸ் அல்ல மல்குஸ். மல்குஸ் என்றால் இராஜா என்று அர்த்தமாகும்.
ஆனாலும் இவன் இராஜா கிடையாது, வேலைக்காரன்தான். வேலைக்காரனாக இருந்தாலும் இராஜா என்று அர்த்தம் உடைய பெயரை கொண்டவனாக இருந்துள்ளான். இந்த மல்குஸ்ஸை குறித்து தியானிக்க ஐந்து காரணங்கள் உள்ளதை வேதத்தில் காணலாம். அவைகளை பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு ஒவ்வொன்றாக தியானிக்கலாம்.
a. சீமோன் பேதுரு:
மல்டீஸ்ஸின் காதை வெட்டினவன் சீமோன் பேதுருதான் (யோவா18:10). காரணம்! அப்போது அவன் சீமோன் பேதுருவாக இருந்தான். சீமோன் என்றால் மீன் பிடிக்கிறவன் என்றும், பேதுரு என்றால் கழனமானவன் அல்லது உறுதியானவன் என்றும் அர்த் -தம். சீமோனாகவும் இல்லாமல் பேதுருவாகவும் இல்லாமல் சீமோன் பேதுருவாக இரட்டை வேஷம் உள்ளவனாய் இருந்தபடியி -னால்தான் அவசரத்தில் அடுத்தவனை போய் வெட்டுகிறவனாய் மாறி விட்டான். இரட்டை வாழ்க்கை வாழ்கிறயாரானாலும் சரி அவர்கள் இப்படித்தான் அவசர முடிவை எடுப்பார்கள். ஆனால், அது நன்மையில் போய் முடியாது.
சீமோன் பேதுரு தன்னிடத்தில் பட்டயம் வைத்திருந்தான் என்று வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. இவன் கையில் எதற்கு பட்டயம் ஒரு பக்கம் அவன் மீனவனாய் இருந்தான். மீனை பிடிக்கிறதற்கும் பட்டயத்திற்கும் சம்மந்தமே இல்லை. மற்றொருபுறம் அவன் சீஷன், சீஷன் என்றால் எல்லாவற்றையும் விட்டவன் என்று அர்த்தம். "சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல" (மத் 10:24) என்று இயே -சுவே சொன்னார்.
தன் போதகரும், தன் எஜமானனுமாகிய இயேசுவே பட்டயத்தை எடுக்கவில்லை. அவர் பட்டயத்தை வைத்திருக்கவும் இல்லை. அப்படியானால் சீஷனாகவும், வேலைக்காரன் போலும் இருக்கிற -பேதுரு பட்டயத்தை எடுத்திருக்கலாமா என்பதை யோசித்துப் பாருங்கள். பேதுருவின் அழைப்புக்கும், தகுதிக்கும் மிஞ்சின தவ -றான ஒரு பொருள் (பட்டயம்) அவனிடம் இருந்தபடியினால் அவன் இரத்தம் சிந்துகிறவனாக மாறினான்.
அருமையானவர்களே, நீங்கள் யார் என்றும், உங்களைக் குறித்த இயேசுவின் அழைப்பும், தெரிந்து கொள்ளுதலும் என்ன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருக்கு பிரியமில்லாத தவறான பொருட்களோ, பழக்க வழக்கங்களோ இருந்தால் அவை -களைத் தூக்கி எறியுங்கள். அப்போது தேவன் உங்களைக் காத்துக் கொள்ளுவார்.
பேதுரு மல்குஸ்ஸின் காதை வெட்டின போது இயேசு சொன்ன வார்த்தையை கவனியுங்கள். "அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி (லூக்22:51). அன்று சொன்ன இயேசு, உங்களைப் பார்த்து இன்றும் சொல்கிறார் நிறுத்துங்கள். ஆகாததையும், தவறானதையும், பாவமுமான பட்டயத்துக்கு ஒப்பா -னவைகளை இன்றோடு, இப்போதே நிறுத்துங்கள். இனிமேலும் சீமோனாகவோ, பேதுருவாகவோ, இராதீர்கள். அதற்கு பதிலாக அப்போஸ்தலர்களாக மாறுங்கள். அப்போது பிதாவாகிய தேவன் உங்களில் பிரியப்படுவார்.
b. பட்டயங்கள்:
"அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட் -டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்" (லூக்22:38).
இயேசுகிறிஸ்துவின் முப்பத்தி மூன்று ஆண்டு வாழ்க்கையில் கடைசி நாட்கள் அவருக்கு கொடுமை நிறைந்த நாட்களாகவே இருந்தது. அதில் ஒன்று தான் பட்டயம் எதிர் கொண்ட நாட்களாகும்.
இயேசுவை காட்டி கொடுக்க யூதாஸ்காரியோத்து ஒரு கூட்டமாக வந்தான். அப்போது அதில் யாரோ ஒருவன் மட்டும் பட்டயத்தை வைத்திருக்கவில்லை. பலர் கையிலும் பட்டயங்கள் இருந்தது. இதை லூக் 22:52-ல் இயேசுவே சொல்லியுள்ளார்.
பட்டயம் என்றால் கொடுமையின் கருவி (ஆதி 49:5) என்று அர்த்தமாகும். இயேசுவை பிடிக்க வந்தவர்களின் கையில் இருந்த ஆயுதங்கள் மட்டும் கொடுமையாயிருக்கவில்லை. அவர் -களுமே கொடுமையானவர்களாகவே காணப்பட்டனர். “அவர்கள் பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும், நானேற்றின வில்லுக் -கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஒடுகிறார்கள்"
(ஏசா21:15) என்ற வேத வசனத்தின்படி பட்டயங்களைக் கண்டதும் சீஷர்களும் கூட இயேசுவை விட்டு விட்டு ஓடி விட்டனர். ஆனால், இயேசு மட்டும் தைரியமாகவும், தேவ கிருபையோடும் அந்த சூழ் -நிலையை எதிர் கொண்டார்.
இந்த சம்பவங்கள் ஏன் நடந்தது என்று நினைக்கத் தோன் -றும். "அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்” (எசே38:4) என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்க்காகவே இவைகள் அனைத்தும் நடந்தது.
இயேசுவை பிடிக்க வந்த இடம் தோட்டமாய் இருந்தது. அந்த தோட்டம் உலகத்தையும், பிடிக்க வந்த ஜனங்கள் இரட்ச்சிக்கப்படா -தவர்களையும், பட்டயம் என்பது கொடுைையயும், சீஷர்கள் என் -றால் மனந்திரும்பினவர்களையும் காண்பிக்கின்றது.
இந்த உலகமே உங்களுக்கு விரோதமாக மாறலாம். சுற்றிலும் இருக்கின்ற ஜனங்கள் எதிரிகளாக மாறலாம். உங்களில் சொந்த பட்டயமே உங்களுக்கு விரோதமாய் எழும்பி கொடுமையாய் கிரியை செய்யலாம். உங்களுக்காக ஜெபிக்கின்றேன் என்று சொன்ன சீஷர்களுக்கு ஒப்பான விசுவாசிகள் கூட உங்களை தனிமையில் விட்டு விட்டு ஓடிப் போகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட நீங்கள் இயேசுவை போல துணிந்து நின்று சத்தியத்திற்காக சா -சியாக மாறனும்.
அப்போதுதான் இந்த உலகமும், உலகத்தில் உள்ளவைகளும் உங்களைக் கண்டு பயப்படும். எந்த பட்டயமும் உங்களை சேதப்ப -டுத்த மாட்டாது. பரலோக ராஜ்யத்திலுள்ள தூதர்களும் கூட உங் -களைக் கண்டு ஆனந்தம் அடைவார்கள். இந்த சூழ்நிலைக்கு மத்தியில் இருக்கும் இயேசுவை சற்று நோக்கிப் பாருங்கள். அநேக பட்டயங்கள் இயேசுவுக்கு மிக அருகிலும், இயேசுவை சுற்றிலும் வந்தும் கூட ஒரு பட்டயமும் இயேசுவை சேதப்படுத்த முடியவில்லை. இதே போலத்தான், உங்களை சுற்றிலும் வரும் எப்படிப்பட்ட பட்டயம் போன்ற சோதனைகளும் உங்களை சேதப்படுத் -தாமல் பிதாவாகிய தேவன் உங்களைக் காத்துக் கொள்ளுவார்.
இயேசுவின் பாடுகளின் போது உவமையாய் சொல்லப்பட்டுள்ள
பட்டயங்கள்:
1. மத் 26:47
பட்டயங்கள்
2. மத் 26:51
உருவின பட்டயம்
3. மத் 26:52
உறையில் போடாத பட்டயம்
4. மத் 26:55
தடிகளோடு கூடிய பட்டயம்
5. லூக் 2:35
உருவிப் போகும் பட்டயம்
6. லூக் 22:38
இயேசுவிடம் இருந்த இரண்டு பட்டயங்கள்
7. லூக் 22:36
வாங்கப்பட்ட பட்டயம்
8. லூக் 22:49
வெட்டும் பட்டயம்
9. யோவா 18:10
வெட்டின பட்டயம்
பட்டயம் என்றால் பிரிக்கக் கூடியது. பிரிவினை உண்டாக்கக் கூடியது என்று அர்த்தம். இந்த பிரிவை பற்றிதான் பவுல் இவ்வி -தமாய் எழுதுகின்றார். “கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார்? நாசமோசமோ பட்டயமோ" (ரோம8:36) ஆம், பட்டயம் என்றாலே பிரிவுதான். பட்டயத்தால் வெட்டியதும் உடலில் ஒட்டியிருந்த காது பிரிந்து வந்து விட்டது. சங்44:6 சொல்கின்ற -படி பேதுருவின் பட்டயம் அவனை இரட்ச்சிக்கவில்லை. அவன் வெட்டினது வீணாகி விட்டது. ஆனபடியினால்தான் இயேசு சொன் -னார் “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு, பட்ட -யத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துப் போவார்கள்” [மத்26:52]. இயேசு சொன்னது எவ்வளவு பொருத்தமாய் உள்ளது பாருங்கள்.
மல்குஸ் ஒரு புறஜாதியான், அந்நியன், பிரதான ஆசாரியனு -டைய வேலைக்காரன். அரண்மனையில் வேலைச் செய்கிறவன். இத்தனைத் தகுதிகள் இருந்தும் அவன் கையில் பட்டயம் இல்லை. அத்துடன், பேதுரு பட்டயத்தினால் வலது காதறவெட்டின போது மல்குஸ் திருப்பிக் கொண்டு தாக்கினதாகவோ, அலறி ஓலமிட்டு கத்தினதாகவோ, சொல்லப்படவில்லை. அப்படியானால், மல்குஸ் நீடிய பொறுமைசாலி என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த மல்குஸ்ஸிற்கு உறவினனும் இருந்தான். மல்குஸ்ஸை வெட்டின போது அவனும் இவன் கூட கெத்சமேனே தோட்டத்தில்தான் இருந்தான் (யோவா18:26). ஆனாலும் அவன் கூட சத்தமிடவும் இல்லை, சண்டையிடவும் இல்லை. இதனால், மல்குஸ்ஸின் குடும்பமே அமைதியான நல்ல பொறுமையான குடும்பம் என்று தெரிகின்றது.
அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதைப் போல "நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தி -னாலாகும் நீதியே" (ரோம9:30) என்ற வசனத்தின்படி தன் பொறுமையினால் மல்குஸ் நீதியை சுதந்தரித்துக் கொண்டான்.
எனக்கு அன்பானவர்களே, யாரையும், அந்நியன் என்றோ, புறஜாதியான் என்றோ, வேலைக்காரன் என்றோ நினைக்காதீர் -கள். சில நேரம் தேவன் அவர்களின் கிரியைகளை நீதியின் பட்டியலில் இணைத்து, விசுவாசத்தையும் கற்றுத் தருகிறார். பட்டயத்தை கீழே போடுவோம். பொறுமையாய் இருப்போம்.
C. வலது காது:
மல்குஸ்ஸின் இரண்டு காதுகளில் வலது காதுதான் வெட்டப் -பட்டது. வலது காது என்பதை குறித்து தனி உபதேசமும், பிரமா -ணமும் வேதத்தில் உண்டு. தேவனால் உண்டாக்கப்பட்ட மனித -னின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணமும், அர்த் -தமும் உண்டு. அர்த்தம் பொருத்தம் இல்லாமல் தேவன் எதையும் செய்வது கிடையாது. அர்த்தம் என்றாலே சத்தியம் என்றுதான் பொருள் (தானி2:45). ஆண்டவராகிய இயேசுவையும் அர்த்தமுள்ள மலைக்கு கொண்டு போய்தான் சிலுவையில் அறைந்தனர் (மாற்15:22). அப்படியானால் வலது காது என்றால் என்ன என் -பதை புரிந்து கொள்வது நல்லது.
மல்டீஸ்ஸின் காது வெட்டப்பட்டதற்கான சில காரணங்களை வேத வசனத்திலிருந்து நம்மால் காண முடியும்.
“வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்"
(நீதி26:17). இந்த வசனத்தின்படிதான் மல்குஸ்ஸின் அனுபவமும் இருந்துள்ளது. அதாவது, இயேசுவை பிடிக்க இவன் அங்கு வந் -திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு வேளை அவன் பிர -தான ஆசாரியனால் அனுப்பப்பட்டு வந்திருந்தால் நிச்சயம் கை-யில் பட்டயமோ அல்லது ஆயதமோ எடுத்து வந்திருப்பான். ஆனால், இவன் கையில் பட்டயமோ, ஆயுதமோ இருந்ததாக சொல்லப்படவில்லை. அப்படியிருந்திருந்தால் பேதுரு இவனை வெட்ட வரும் போதே, இவன் தடுத்திருந்திருக்கலாம். ஏனென்றால், பேதுருவுக்கு மீன் வலையை பிடித்துதான் பழக்கம், பட்டயம் பிடித்து பழக்கமில்லை. முன்பின் பட்டயம் பிடித்து பழக்கமில்லாத -வன், மல்குஸ்ஸை வெட்டும் வரை அவன் விட்டு விட்டு சும்மாயி -ருந்துள்ளான் என்றால், மல்குஸ்ஸின் கையில் பட்டயம் இல்லை என்றும், தனக்கடாத விஷயத்தில் தலையிடும்படி போர்ச்சேவகர்க -ளுடன் இணைந்து இயேசுவை பிடிக்க வந்துள்ளான் என்பதும் தெளிவாக தெரிகின்றது.
இதை வாசிப்போரே, உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குள் செயல்படுங்கள். நீங்கள் யாரானாலும் சரி தனக்காடாத காரியத்தில் மித மிஞ்சி. மல்டீஸ்ஸை போல எல்லா இடத்திற்கும் அவசரப்பட்டு போகாதீர்கள்.
இயேசுவை பிடிக்கப் போனவர்கள் ஏறத்தால 500 பேர் என்று சரித்திரம் சொல்கிறது. ஐந்நூறு பேரில் என்னை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்த மல்குஸ்ஸின் எண்ணம் தவறாய் போய் விட்டது. சும்மா போயிருந்த அவன், வெறுமையாய் போயிருந்த அவன் வெட்டப்பட்டான். அவனுடைய காது துண்டிக்கப் -பட்டு இரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்தது. இந்த சத்தியத்தின் மூலமாக தேவன் உங்களுடன் பேசி கொண்டிருக்கும் சத்தத்திற்கு இணங்குங்கள். நல் ஆலோசனைகளுக்கு மட்டும் இடங் கொடுங்கள்.
பாம்பாட்டிகள் வினோதமாய் ஊதினாலும் அவர் ஊதும் சத்தத்திற்குச் செவி கொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப் போல் இருக்கிறார்கள் (சங்58:5). ஆம், சத்தத்திற்கு செவி கொடாதபடி காதை அடைக்கிறசெவிட்டு விரிய னைப் போல் என்று வசனம் எச்சரிக்கிறதைப் போல் இந்த மல் -குஸ் யாருடைய சத்தத்திற்கும் செவி கொடுக்கவே இல்லை.
அதாவது:
a) யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்க போகிறாய் என்றார்.
b) சூழ நின்றவர்கள், ஆண்டவரே பட்டயத்தினால் வெட்டுவோமா என்றார்கள்.
c) இம்மட்டில் நிறுத்துங்கள் என்று இயேசு சொன்னார்.
d) ஒரு கள்ளனை பிடிக்கிறது போலவா என்னை பிடிக்க வந்தீர் -கள் என்றார் (லூக்22:48,53). இத்தனை பேரின், இத்தனை சத்தங்களைக் கேட்டதும் அவன் அங்கிருந்து ஓடியிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படி செய்யாமல் எல்லாருடைய எல்லாவித சத்தத்திற்கும் ஒரு செவிட்டு விரியன் பாம்பைப் போல காதை அடைத்துக் கொண்டிருந்தான். மல்குஸின் காது வெட்டப்பட இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
“உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண் -ணுகிறான். என்னை அசட்டை பண்ணுகிறவன் என்னை அனுப் -பினவரை அசட்டை பண்ணுகிறான் என்றார்” (லூக்10:16). ஆதி -யில் ஏதேன் தோட்டத்தில் வைத்து கர்த்தர் சொன்ன வார்த்தை -யை ஆதாமும் ஏவாளும் அசட்டை செய்தனர். அதனால் பாவம் உள்ளே நுழைந்தது. ஒரு மிருகம் அடிக்கப்பட்டு தோல் உரிக்கப்பட்-டது. இங்கு, கெத்சமெனே தோட்டத்தில் மல்குஸ் இயேசுவின் சத்தத்தை அசட்டை பண்ணினான். அதனால் அவன் காது வெட் -டப்பட்டு தோட்டத்திற்குள் இரத்தம் சிந்தப்பட்டது.
விசுவாசிகளே, ஊழியக்காரர்களே, தேவ ஜனமே தேவனுடைய சத்தத்தை தயவு செய்து அசட்டைப் பண்ணாதீர்கள். கவனமாயி -ருந்து, கீழ்படிந்து, தகாத இடத்தை விட்டு விலகுங்கள் அல்லது ஓடுங்கள். அப்பொழுது நீங்கள் பிழைப்பீர்கள்.
d. என்ன செய்ய வேண்டும்? :
மல்குஸ்க்கு வந்ததைப் போல பட்டயமும், இரத்தமும் உங்க -ளைச் சந்திக்க கூடாது என்றால் அதற்கு என்ன செய்ய வேண் -டும் என்று பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் சுத்திகரிக்கப்பட வேண்டியவனு -டைய வலது காதில் இரத்தத்தையும், எண்ணெயையும் பூசுவார் -கள் (லேவி14:14,17). அதிலும் குறிப்பாக முதலாவது இரத்தத் -தைப் பூசுவார்கள். பின்பு, எண்ணெயைப் பூசுவார்கள். இரத்தம் என்பது இயேசுவின் கல்வாரி இரத்தத்தையும், எண்ணெய் என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் குறிக்கின்றது.
யார் ஒருவர் தன் பாவங்கள் போக இயேசுவின் இரத்தத்தி -னால் கழுவப்படுகின்றார்களோ, அவர்களை எண்ணெய்க்கு ஒப் -பான பரிசுத்த ஆவியானவர் நிரப்புவார். பழி வாங்கும் பட்டயமும், காயமுண்டாக்கும் இரத்தமும் உங்களைத் தொடக் கூடாது என்றால், இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பப்படுங்கள். அப்பொழுது மல்டீஸ்ஸிற்கு வந்தது போன்ற போராட்டம் உங்களுக்கு வராது.
e. இரண்டு பலன்கள்:
மல்குஸ் தனக்கடாத காரியத்தில் தலையிடுகிறவனாகவும், தேவ சத்தத்திற்கு செவி கொடாதவனாகவும் இருந்தாலும், தேவன் அவனுக்கு இரண்டு நன்மையைச் செய்தார் என்று வேதம் சொல் -கின்றது.
ஒன்று: அவனுடைய காதைத் தொட்டு, அவனை சொஸ்தப்படுத் -தினார் (லூக்22:51). தேவன் இரக்கமுள்ளவராய் இருந்தபடியி -னால், சொஸ்தமாக்குகிறவராயும் இருந்தார். இங்கு முக்கியமான ஒரு இரகசியத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எல் -லாரையும் தேவன் சொஸ்தமாக்க மாட்டார். "சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்" (லூக்9:11). அப்படியானால், மல்குஸ் இயேசு தன்னை தொட்டு சுகமாக்க வேண்டும் என்று தன் மனதில் வேண்டுதல் செய்திருப்பான். அவன் மனதின் வேண்டுதலை ஆவியில் உணர்ந்த இயேசு அவனை தம்முடைய கிருபையுள்ள, வல்லமையுள்ள கையினால் தொட்டு சொஸ்தப்படுத்தினார். இது தேவன் அவனுக்கு செய்த முதல் நன்மையாகும்.
இந்நாட்களில், நீங்கள் வியாதியாலும், பெலவீனத்தினாலும், அல்லது பிசாசின் போராட்டத்தினாலும் வேதனைபடுகின்றீர்களா? அல்லது, மல்குஸ்ஸை போல இரத்தம் சிந்தும் அளவுக்கு காயப் -பட்டுள்ளீர்களா? கவலைப்பட வேண்டாம். மல்குஸை தொட்டு சொஸ்தமாக்கினவர் உங்களையும் தமது வல்லமையால் தொட்டு சொஸ்தமாக்குவார்.
இரண்டு:- "இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிர -சங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை (இவனை) நினைப்பதற்-காக இவள் (இவன்) செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யா -கவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மாற்14:9). மரி -யாள் என்ற ஸ்திரீ நளதம் என்னும் தைலத்தை இயேசுவின் சிர -சின் மேல் ஊற்றினாள். அவளை வாழ்த்தும் வண்ணமாக மேற்கண்ட வார்த்தைகளை இயேசு சொன்னார்.
அதுபோலதான், மல்குஸ்ஸின் காது வெட்டப்பட்டதாலும் அவ -னுடைய இரத்தம் கெத்சமெனே தோட்டத்தில் சிந்தப்பட்டதாலும் இப்போது அவனுடைய பெயர் உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. தீமையை நன்மையாக மாற்றுகின்றவர் மல்குஸின் தீமையையும் நன்மையாக மாற்றினார். வருடத்தின் அனைத்து நாட்ககளிலும், இவனைக் குறித்துப் பேசாவிட்டாலும், வருடம்தோறும் லெந்து காலத்திலும், இயேசுவை சிலுவையில் அறைந்த பெரிய வெள்ளி அன்றும் மல்குஸை பற்றி பேசாத, சொல்லாத ஊழியக்காரர்களே இல்லை என்று சொல்லலாம்.
அன்பானவர்களே, உங்களுக்கு வந்த போராட்டங்களையும் பாடுகளையும் பார்த்து, பார்த்து மனம் கலங்கி போய் எனக்கு ஏன்தான் இந்த போராட்டத்தை ஆண்டவர் அனுமதித்தார் என்று தெரியவில்லையே என்று கலங்கலாம். உங்கள் கண்களுக்கு போராட்டம் தான் பெரியதாகத் தெரியும். அதற்கு உள்ளே மறைந் -திருக்கும் நன்மை வெளியே தெரியாது. ஆனால், பொறுமையாய் இருங்கள். காத்திருங்கள். இயேசு வருவார், பிசாசை பார்த்து நிறுத்து என்று சொல்லுவார். தம்முடைய அன்பான கையை நீட்டி உங்களைத் தொடுவார். உங்களுக்கு வந்த போராட்டத்தையும், தீமையையும் நன்மையாக மாற்றுவார். நீங்கள் அறியாத இடங்க ளிலும் உங்கள் பெயரை பிரபல்யப்படுத்துவார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
மல்குஸ் எதிரிகளின் கூட்டத்தோடு, கெத்சமெனே தோட்டத்திற்கு போனான். ஆனால், தனிமையாக வீட்டுக்கு திரும்பி வந்தான். பழைய மனுஷனாக இருந்து கொண்டு இயேசுவை பிடிக்கும்படி போனான். ஆனால், இயேசுவால் பிடிபட்டவனாக திரும்பி வந்தான். அவன் பல ஆண்டுகளாய் வேலை செய்த பிரதான ஆசாரியனு -டைய ஆளுகை அவன் உள்ளத்தை தொட முடியவில்லை. ஆனால், இயேசுவின் கை மல்குஸைத் தொட்டது. இயேசுவை பிடிக்க வந்த மற்ற 499 போர் வீரர்கள், பிரதான ஆசாரியர்களின் பெயர்கள் தெரியாதது போல, பெயர் தெரியாமல் போக வேண்டியவன் இப்போது, எல்லோருக்கும் பெயர் தெரிந்தவனாக மாறி விட்டான்.
கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவைத் தவிர மற்றமூன்று பேர்களின் பெயர் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. யூதாஸ், பேதுரு, மல்குஸ். இவர்களில் யூதாஸ் காட்டி கொடுத்து செத்து போனான். பேதுரு மறுதலித்து இயேசுவை விட்டு ஓடிப்போனான் (மாற்14:50). ஆனால் மல்குஸ் மட்டும் இயேசுவால் தொடப்பட்டு தன் வீட்டுக்குப் போனான்.
இதை வாசிக்கும் தேவ பிள்ளையே நீங்கள் யாராக இருக்கப் போகின்றீர்கள்? அல்லது யாரைப் போல மாறப் போகின்றீர்கள்?. யூதாசைப் போல உங்களை நடத்தினவர்களையும், இரட்சித்தவர்க -ளையும் காட்டி கொடுக்கப் போகின்றீர்களா?. பேதுருவைப் போல, இந்த போராட்டமான கிறிஸ்தவ ஜீவியம் வேண்டாம் என்று மறு -தலித்து இயேசுவை விட்டு ஓடிப் போகப் போகின்றீர்களா? அல் -லது மல்குஸைப் போல இயேசு தொடும் வரைக்கும் காத்திருந்து, தொடப்பட்டு, மல்குஸைப் போல மறைவான ஜீவியம் ஜீவித்து கிறிஸ்து இயேசுவுக்காக நிலைத்து நிற்க்கப் போகின்றீர்களா?
