சபையில் பாபிலோனிய பழக்கவழக்கங்கள்

சபையில் பாபிலோனிய பழக்கவழக்கங்கள்

நிம்ரோத்

தேவனுடைய திட்டத்தை முறியடிக்க சாத்தான் தெரிந்துகொண்ட பாத்திரம் நிம்ரோத். பழைய ஏற்பாடு எழுதப்பட்ட மூலமொழியாகிய எபிரேய மொழியில் இவன் பெயர் 'மாரட்'. இதன் பொருள் 'கலகம்'.

"இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்" (ஆதி.10:9). இவன் மனிதரையும் மிருகங்களையும் வேட்டை

யாடும் பராக்கிரமசாலியாக இருந்தான். இவன் தேவனுக்கு விரோதமான பல செயல்களைச் செய் தான். நோவாவின் குமாரரில் ஒருவனான காமுக்குப் பிறந்தவன் கூஷ். இவன் மகன்தான் நிம்ரோத். இவனும் இவன் சேனையும் நோவாவின் குமாரரில் ஒருவனான சேமுக்குக் கொடுத்திருந்த அசீரியா நாட்டிற்குள் படையெடுத்துச்சென்று அதைக் கைப்பற்றி நினிவே பட்டணத்தைக் கட்டினான். தேவன் பிரித்துக்கொடுத்திருந்த தேச எல்லைகளை மாற்றி இவன் கலகம் செய்ததால் 'கலகக்காரன்' என்ற பொருள்படும் 'நிம்ரோத்' என்ற பெயரைப் பெற்றான்.

அன்று அறியப்பட்ட மக்களையும் முழு உலகத் தையும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டான். இந்தத் திட்டத்தை செயல்படுத்த புதிய மதத்தையும் புதிய ஆட்சிமுறையையும் கொண்டுவந்தான். சிநெயார் சமவெளியில் பாபேல் என்ற பட்டணத்தைக் கட்டினான் (ஆதி.10:10). இதில் பாபேல் என்ற மிக உயரமான ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தான் (ஆதி.11:4).

பாபிலோனியர் நிம்ரோத்தை அரசனாகவும், கடவுளாகவும் மதித்து வணங்கினர். 'செமிராமிஸ்' என்ற பெண் தேவதை நிம்ரோதின் தாய் என்று கூறப்பட்டுள்ளது. இவள் இவனுடைய என்றும் சில இடங்களில் வருகின்றது. மனைவி

பாபேல் என்பதற்கு எபிரேய வார்த்தை 'பாபிலு'. இதன் பொருள் 'குழப்பம்'. அதுவரை பூமியெங்கும் ஒரே மொழியாயிருந்ததை தேவன் இந்த இடத்தில் தாறுமாறாக்கினார் (ஆதி.11:5-9). சகல குழப்பங்களும் இந்த பாபேலில் இருந்தே உருவாயின.

பாபிலோனில் கட்டப்பட்டுவந்த பாபேல் கோபுரம் மிக உயரந்ததாக இருந்தது. ஆங்கிலத்தில் ZIGGURAT என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1000 கோபுரங்களடங்கிய கட்டிடமாக, வட்ட வடிவமான முறையில் உயரமாக பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டது.

செமிராமிஸ் என்ற பெண் தேவதைக்கு 'அஸ்த ரோத்' என்ற பெயரும் உண்டு. 'அஸ்தரோத்' என்றால் 'கோபுரங்களை உண்டுபண்ணின பெண்' என்று பொருள். இவளுக்கு 'சைபெலி' என்பது மற்றொரு பெயர். இதன் பொருள் 'கோபுரங்களை. சுமக்கிறவள்'. இவளுடைய தலையில் கோபுரம் போன்ற கீரிடம் வைக்கப்பட்டிருக்கும்.

பாபேல் கோபுரத்தில் ஏழு பகுதிகள் அடங்கி யிருந்தன. முதல் பகுதி விக்கிரக கடவுள்களுக் சென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரத்தின். உச்சியில் சுமார் 60 X 80 அடி சதுரத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டிருந்தது. இது பெல்மொர்தாக் என்றும் மர்துக் என்றும் அழைக்கப்பட்ட 'பாகால்' என்ற கடவுளுக்கு கட்டப்பட்டது.

இந்த கோவிலுக்குள் 12 ZODIAC SIGNS இருந்தன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது மாயவித்தைக்குப் பயன் படும் 12 அடையாளங்கள் இந்தக் கோவிலுக்கு + வரையப்பட்டிருந்தன. இவைகளைக் குறித்து பின்பு பார்ப்போம்.

இந்தக் கோபுரம் மெய்தேவனுக்கு விரோதமான ஆராதனை முறைகளை கைக்கொள்ளும் விதத்தில் கட்டப்பட்டிருந்தது. எனவே நிம்ரோத் சிலை வணக்கத்தை, சிலை ஆராதனையை அறிமுகம் செய்யும் கருவியாக சாத்தானால் பயன்படுத்தப் பட்டான்.

சிலை வணக்கம் - புதிய மதம் - புதிய ஆளுகை ஆகியவற்றை அறிமுகம் செய்து மெய்தேவ வழிபாட்டிலிருந்து பிரித்து மக்கள் சாத்தானை வணங்க வழிவகுத்தான்.

ஆதிசபை

அப்போஸ்தல நடபடிகளில் சபையின் ஆரம்பத் தையும் வளர்சசியையும் காண்கிறோம். யூத பண்டிகை யாகிய பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் தீர்க்க தரிசன நிறைவேறுதலாக எருசலேமில் கூடியிருந்த சீடர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். பேதுரு எழும்பி. பிரசங்கித்தான். வசனத்தைக் கேட்டவர்கள், மனந்திரும்பி, திருமுழுக்குப் பெற்றனர். இதுவே திருச்சபையின் பிறந்தநாள், ஆரம்பநாள்.

இதைத் தொடர்ந்து இயேசுவின் நாமத்தில் அற்புத அடையாளங்கள் நடைபெற்றன. திருவசனம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் பிரசங்கிக்கப் பட்டது. அனுதினமும் சபையில் ஏராளமானபேர் சேர்ந்தார்கள்.

அன்று அறியப்பட்ட உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட்டன. இது சாத்தானுக்குப் பிடிக்காதல்லவா? அவன் உபத்திரவத்தை கட்டவிழ்த்து விட்டான். கிறிஸ்தவர்கள் எல்லா இடங்களிலும் துனபுறுத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டனர்.

ஆதிசபையில் உபத்திரவம்

ஏராளமான கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மடிந்தனர். மதவெறியர்களும், அரசியல் தலைவர் களும் கிறிஸ்து மார்க்கத்தை அழித்துவிட முயன் றனர். அன்று உலகை ஆண்ட ரோமப் பேரரசர்கள் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தி கொலை செய்தனர். அவர்களில் சிலர்...

1.நீரோ (கி.பி.54-68)

இவன் 16 வயதில் பேரரசனானான். 25 வயது முடிவதற்குள் தன் மனைவி ஆக்டேவியா, தாய், தன் சகோதரன் ஆகியோரை கொன்றான். ஒருநாள் ரோமபுரி தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது நீரோ மன்னனே என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

கிறிஸ்தவர்களைப் பகைத்த இந்த நீரோ, இந்த நெருப்பை வைத்தது கிறிஸ்தவர்கள் என்று அநியாய மாய் குற்றம்சாட்டி, கிறிஸ்தவர்களை கொடுமைப் படுத்திக் கொன்றான். கி.பி.67ல் அப்போஸ்தலனாகிய பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார். பவுல் கி.பி.68ல் ரோமபுரியில் தலைவெட்டப்பட்டு மரித்தார்.

2. டொமீஷியன் (கி.பி.81-96)

தன் சிலையை வணங்க மறுத்ததால் கிறிஸ்தவர் களையும் யூதர்களையும் துன்பப்படுத்தினான். இவன் தன்னை 'யூப்பிட்டர்' என்னும் கடவுள் என்று பிரசுடனம் பண்ணினான். இவனை வணங்க மறுத்த அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

3. ட்ராஜான் (கி.பி.98-117)

கிறிஸ்தவனாயிருப்பது ரோம சட்டத்திற்கு முரண்பட்டது என பிரகடனம் செய்தான். இவன் ஆட்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். இக்னேசியஸ் என்ற பரிசுத்தவான் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டார்.

4.மார்கஸ் அரிலியஸ் (கி.பி.161-180)

இவன் நாட்களில் கலோசியம் என்று அழைக்கப் பட்ட திறந்தவெளி கலையரங்கில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பசியுள்ள சிங்கம், புலிகளுக்கு இரை யாக்கப்பட்டனர். தலை வெட்டப்பட்டு மரித்தனர். போலிகார்ப், ஜஸ்டின் மார்டைர் ஆகிய பரிசுத்த வான்கள் கொல்லப்பட்டனர்.

5. செப்டிமஸ் செவரஸ் (கி.பி.202-211)

இவன் தன் ஆட்சி காலத்தின் இரண்டாம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சட்டம் இயற்றினான். இவன் நாட்களில் 'ஆரிஜன்' போன்ற கிறிஸ்தவ தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

6. மேக்ஸிமஸ் (கி.பி.235)

இவன் நாட்களில் கிறிஸ்தவர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர். உயிருடன் தீ வைத்துக்

கொளுத்தப்பட்டனர். ஒரே குழியில் 50, 60 சடலங்களைப் போட்டு மூடினான்.

7. டெசியஸ் (கி.பி.249)

இவன் முன்சொல்லப்பட்ட எல்லா பேரரசர்களைக் காட்டிலும் அதிகமாய் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி னான். ஆனால் இவன் சில மாதங்களே ஆட்சி செய்ததால் இவன் முயற்சி அதிகம் பலிக்கவில்லை.

8. வெலேரியன் (கி.பி.257)

இவன் நாட்களில் ஏற்பட்ட உபத்திரவத்தில் குறிப்பாக கார்த்தேஜ் பிஷப் சைப்பிரியன் என்ற சிறந்த வேத பண்டிதரும், எழுத்தாளருமான தலைவர் கொல்லப்பட்டார்.

9. ஆர்லியன் (கி.பி.274)

இவனும் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தினான்.

10.டயக்ளீசியன் (கி.பி.303-310)

இவன் நாட்களில் எல்லா வேத பிரதிகளையும் சேகரித்து தீயில் சுட்டெரிக்கும்படி சட்டம் இயற்றி னான். கிறிஸ்தவனாயிருப்பது சட்டத்திற்கு புறம்பா னது எனப் பிரகடனம் பண்ணினான். கிறிஸ்தவ ஆராதனைக் கூடங்களை ஆராதனை நடந்துகொண்டி ருக்கும்போதே தீயிட்டு அழிக்கச் செய்தான். ஏராள மான கட்டிடங்களும், மக்களும் அழிக்கப்பட்டனர்.

“கிறிஸ்தவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர். நமது கடவுள்களின் ஆராதனை புதுப்பிக்கப்பட்டது” என்ற வாசகமுள்ள நாணயம் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. கிறிஸ்தவ மூடநம்பிக்கை அழிக்கப் பட்டதற்கான ஞாபகார்த்த சின்னம் என்ற ஒரு ஸ்தூபியை எழுப்பினான்.

கிறிஸ்தவ சபையின் வளர்ச்சி

உபத்திரவம் எவ்வளவு பெருகினாலும் சபையின் வளர்ச்சி, கிறிஸ்தவர்களின் வளர்ச்சி குன்றவில்லை, குறையவில்லை. இந்த உபத்திரவகால முடிவில் ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் தொகை சுமார் 120 மில்லியன் (12 கோடி) என்று கணக்கிடுகின்றனர். இதில் பாதிப்பேர், அதாவது 60 மில்லியன் (6 கோடி) கிறிஸ்தவர்கள் என்று குறிப்பு கூறுகிறது.

சாத்தான் திருச்சபையை உபத்திரவத்தினால் அழிக்கமுடியாது என்று கண்டுகொண்டான். கிறிஸ்த வர்களை காலிபண்ண பிசாக அதிக நயவஞ்சனை யான முறையைக் கையாண்டான். கிறிஸ்தவர்களைக் கொண்டே கிறிஸ்தவத்தை அழிக்கத் திட்டமிட்டான்.

கான்ஸ்டன்டைன்

ரோமப் பேரரசனான இவன் கிறிஸ்தவர்களின் உறுதியையும், உண்மையையும் கண்டு பிரமித்தான். ஒருநாள் பிரகாசமான ஒரு சிலுவையை தரிசனத்தில் கண்டான். "இந்த அடையாளத்தில் ஜெயம் பெறு" என்ற சத்தத்தையும் கேட்டான். கான்ஸ்டன்டைன் வெற்றி பெற்றான். கிறிஸ்தவனானான். கிறிஸ்து மார்க்கத்தின் பாதுகாவலன், என்று தன்னை பிரகடனப்படுத்தி னான்.

கி.பி.324ல் அரசாங்கத்தையும் திருச்சபையையும் ஒன்றாக இணைத்தான். திருச்சபைக்கும் கிறிஸ்தவர் களுக்கும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்கி னான். சபைப் போதகர்களுக்கு ஆலயங்களைக் கட்டு வதற்கு அரசாங்க கருவூலத்திலிருந்து ஏராளமான பணம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மார்க்கம் அரசாங்க மார்க்கமாயிற்று. சபைத் தலைவர்களுக்கு 'பசிலிக்கா’ (BASCILICA) என்ற மிக ஆடம்பரக் கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இதிலே மதமாற்றங் களுக்கான சடங்குகள் நடைபெற்றன.

கிறிஸ்தவர்களுக்கு இதுவரை இருந்த உபத்திரவம் நீங்கி, கிறிஸ்தவனாயிருப்பது பெரிய சிலாக்கியமாயிற்று. திரளான மக்கள் கிறிஸ்தவர் களாக மாறினர். அரசாங்க சலுகைகளைப் பெறவும். உயர்பதவி பெறவும் கிறிஸ்தவர்களாயினர். பணத்திற்காக, வசதியான வாழ்விற்காக சபைப் போதகர்களாக மாறினர்.

சபைக்கு ஏற்பட்ட சரிவு

கிறிஸ்தவம் உலகமெங்கும் வேகமாய்ப் பரவினா லும், சபை தன் புனிதத் தன்மையை கொஞ்சங்கொஞ்சமாய் இழக்க ஆரம்பித்தது. மனந்திரும்பாத வர்கள், கிறிஸ்துவை உண்மையாய் ருசியாதவர்கள், கிறிஸ்துவினால் அழைக்கப்படாதவர்கள் பல்வேறு பிற காரணங்களுக்காக பிரசங்கியார்களாய், சபை மேய்ப்பர்களாய் பொறுப்பேற்றனர்.

எனவே பரிசுத்த ஆவியின் வல்லமை குன்றியது. பண வல்லமை மேற்கொண்டது. பிரசங்க முறைகள் சொற்பொழிவுகளாக மாறின. வேத வசனம் மறக்கப் பட்டது. சபைகள் மக்களால் நிறைந்தது. முழுவதும் மனந்திரும்பாத

சபையின் எல்லா பணத்தேவைகளும் அரசாங்கத் தால் பூர்த்தி செய்யப்பட்டன. அநேக பிற மத வழிபாட்டுத் தலங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக்கப் பட்டன. பிற மதத்தினரை சபைக்குக் கொண்டுவர அவர்களின் பழக்கவழக்கங்களை சபைக்குள் கொண்டு வந்தனர். பிற மதத்திலிருந்த சகல மூடப்பழக்க வழக்கங்களும் சபையின் சடங்குகளாய் மாறின.

வேதத்தின் அடிப்படை சத்தியங்கள் போதிக்கப் படவில்லை. எனவே எவை அடிப்படை சத்தியங்கள், எவை கிறிஸ்தவத்திற்கு முரண்பட்டவை என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இயேசுவின் திருச்சபை எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் கைக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

பாபேல் கோபுரம் கட்ட முயற்சித்து தோற்றுப் போன நிம்ரோத், பின்பு கொல்லப்பட்டு அகால மரணமடைந்ததாக பாபிலோனிய சரித்திரம் கூறுகிறது. நிம்ரோத்தினுடைய மரணத்தால் வேதனைப்பட்ட மக்கள் அவனுக்காக துக்கம் கொண்டாட ஆரம்பித் தனர். நிம்ரோத்தின் மற்றொரு பெயர் தம்மூஸ்.

தம்மூஸுக்காக அழுதார்கள் என்று எசேக்கியேல் 8:14ல் வருகிறது.

தங்களுக்குப் பெயர் உண்டாக்க பாபேல் கோபுரம் கட்ட முயன்றவர்களுடைய மொழியை கர்த்தர் தாறுமாறாக்கினபடியால் அவர்கள் அவ்விடம் விட்டு பூமியின் பல பாகங்களுக்கும் சிதறிப்போக ஆரம்பித்தனர். அவர்களோடு அவர்கள் பாபிலோனிய கலாச்சாரமும், மதச்சடங்குகளும், மத நம்பிக்கை களும் கூடவே சென்றன.

செமிராமிஸ் என்ற தேவதை, அவள் மகன் நிம்ரோத். இவர்கள் இருவரையும் பாபிலோனியர் வணங்கினர். செமிராமிஸ் தேவதை நிம்ரோத்தை அற்புதமாக பெற்றெடுத்தாள். இவனே ஆதி.3:15இல் சொல்லப்பட்டுள்ள ஸ்திரீயின் வித்து நம்பினர். செமிராமிஸ் 'அல்மாமேட்டர்' என்றும் என்று அழைக்கப்பட்டாள். இதன் பொருள் 'கன்னித்தாய்'.

இவள் 'வானத்தின் ராணி' (QUEEN OF HEAVEN) என்றும் அழைக்கப்பட்டாள். எரேமியா 44:15-19, 24-27 வசனங்களில் ‘வானராக்கினி' என்று அழைக்கப் படுகிறவள் இவளே. யூதர்களும் இவளுக்கு தூபங் காட்டி, பலிகளைச் செலுத்தினர். அப்படி செய்ததி னால் தங்களுக்கு ஆசீர்வாதம் கிடைத்தது வாதாடினர். என

திருச்சபையில் திரளான மக்கள் வந்து சேர்ந்த போது, தாங்கள் முன்பு பின்பற்றிய பழக்கவழக்கங் களையும் சபைக்குள் கொண்டு வந்தனர். புறஜாதி மக்களை சபைக்குள் கொண்டுவர அவர்கள் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ சடங்குகளாய் மாற்ற சபைத் தலைவர்களும் ஆர்வம் காட்டினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.