மனம் திரும்புதல் என்பது இவை அல்ல

மனம் திரும்புதல் என்பது இவை அல்ல

1. வெறுமனே குற்ற உணர்வைப் பெறுவது மட்டுமல்ல

நமது பாவத்தை குறித்து குற்ற உணர்வைப் பெறுவது மனம்திரும்புதலுக்கு முன்னர் நிகழ்வதாகும். ஆனால் அதுவே மனம்திரும்புதல் அல்ல. முதலில் தங்கள் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வை பெறாமல் எவரும் மனம் திரும்ப முடியாது ஆனால் குற்ற உணர்வை பெரும் எல்லோருமே மனம் திரும்புவது கிடையாது ஒரு சிலரே உண்மையாக மனம் திரும்புகிறார்கள்.

அப் 24:25

2. வெறுமனே உங்கள் பாவத்தை குறித்து வருத்தப்படுவது மட்டுமல்ல

தங்கள் பாவத்தின் பின் விளைவுகளை குறித்தோ அல்லது தாங்கள் பாவத்தில் பிடிபட்டதைக்குறித்தோ சிலர் வருத்தப்படுகிறார்கள் தாங்கள் செய்தது தவறு என்பதற்காக அல்ல பிடிப்பதினால் கிடைக்கும் தண்டனையை குறித்தே அநேகர் வருத்தப்படுகிறார்கள்.

2 கொரி 7:10

3. நல்ல மனிதராக இருப்பதற்கு முயற்சி செய்வது மட்டுமல்ல

அனேகர் நல்ல மனிதராக மாறுவதற்கும் தங்கள் வாழ்கை முறையை மாற்றிக் கொள்வதற்கும் தங்கள் சொந்த பலத்தில் முயற்சி செய்கிறார்கள் சுய முயற்சிக்கு அடிப்படை காரணம் சுய நீதியே. இந்த சுயநீதி பாவத்திலிருந்து மனம் திரும்ப வேண்டியதின் அவசியத்தையே ஏற்றுக் கொள்வதில்லை.

ஏசா 64:6

4. சமய நம்பிக்கை கொள்வது மட்டுமல்ல

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பரிசேயர்கள் தங்கள் நடத்தையிலும் செயல்பாட்டிலும் அதிகமான சமய உணர்வு உள்ளவர்களாக இருந்தார்கள் அவர்கள் உபவாசம் இருந்தார்கள் ஜெபித்தார்கள் அனேக சடங்குகளை பின்பற்றினார்கள் ஆனாலும் மனம் திரும்பவில்லை.

மத்தேயு 3:7-10; 5:20

5. வெறுமனே சத்தியத்தை அறிந்து வைத்திருப்பது மட்டும் அல்ல

அறிவுப்பூர்வமாக சத்தியத்தை அறிந்து வைத்திருப்பது மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையில் அந்த சத்தியம் செயல் பூர்வமாக வெளிப்படுகிறது என்பதற்கு நிருபனமாகாது. மூளையில் விசுவாசிப்பதற்கும் இருதயத்தில் விசுவாசிப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. ரோமர் 10:10

யாக்கோபு 2:19-20

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.