போராட்டம்
ஆவிக்குரிய வாழ்க்கை போராட்டம் நிறைந்த ஒரு வாழ்க்கை ஆகும். "போராட மனுஷன் பிறந்திருக்கிறான்" என்கிறார் (யோபு 7:1) யோபு பக்தன். "போராட்டத்தின் மேல் போராட்டம் அதிகரிக்கிறது" (யோபு 10:17). இந்த உலகில் போராட்டம் நமக்கு உண்டு.
1) மனதில் வருகிற போராட்டம் (ரோ 7:23)
இது அநேகருக்கு வெளியே தெரியாது. கவலைகள், பாரங்கள், எதிர்மறையான எண்ணங்களாக இருக்கலாம். புறம்பே போராட்டங்களும் உள்ளே பயங்களும் இருந்தன என்கிறார் பவுல் அடிகளார் (2 கொரி 7:5) மனது குப்பைத் தொட்டியாக இருக்க கூடாது. கண்டதை போட்டு குழப்பி கொண்டு இருக்க கூடாது. நமது மனதை கறைபடுத்தக் கூடிய பார்வைகள், எண்ணங்கள், சம்பாஷணைகள், பழக்கவழக்கங்கள், mobile ல் பார்க்கும் காரியங்களை குறித்து சர்வ ஜாக்கிரதையாக நாம் இருத்தல் வேண்டும் வசனத்தை கொண்டும், ஆவியை கொண்டும் ஜெயம் பெற வேண்டும்.
"எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள்" (நீதி 4:23). "உங்கள் மனதின் அரையைக் கட்டி கொண்டு" (1 பேது 1:13). மிஞ்சின காரியங்களில் தலையிட கூடாது (சங் 131:1) நாமே சில பிரச்சனைகளில் தலையிட்டு கொள்ளக் கூடாது. சில காரியங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. எல்லா காரியங்களையும் தலையின் மேல் தூக்கி போட்டு கொள்ளக் கூடாது.
2) பாவத்திற்கு விரோதமாக போராட்டம் (எபி 12:4)
பாவம் மறைந்து இருக்கும். சமயம் கிடைக்கும் போது வெளிப்படும். பாவம் உருவாக இடம் கொடுக்க கூடாது. பாவம் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் (மாற்கு 7:21,22). இருதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாவம் எது? என்று list' போட்டு பாருங்கள். "அதிகமாக பேசுவது கூட பாவம்" (நீதி 10:19). பாவம் செய்யும் போது தேவன் நமது பெயரை ஜீவ புஸ்தகத்தில் இருந்து கிருக்கி போடுவார் (யாத் 32:32,33). "மனப்பூர்வமாய் பாவம் செய்யக் கூடாது" (எபி 10:26). "பாவம் செய்யாமல் இருக்க வேத வசனம் இருதயத்தில் இருக்க வேண்டும்" (சங் 119:11)
3) சோதனையில் ஜெயிப்பது ஒரு போராட்டம்
இயேசு பிசாசினால் சோதிக்கபட்டார். சோதனையில் ஜெயம் எடுத்தார். "வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" (எபேசியர் 6:12) யாரை கொண்டாகிலும் நம்மை சோதிப்பார். யோபு சொன்னது "சோதிக்கபட்ட பின்பு சுத்த பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10)
4) விசுவாசத்திற்காக போராட்டம் (யூதா:3) (பிலி 1:27)
விசுவாசத்தை கெடுப்பது பிசாசின் வேலை. நெருக்கங்கள், போராட்டங்கள், பாடுகளில் விசுவாசம் நஷ்டபடக்கூடாது. விசுவாசம் குறைந்தால் பயம் காணப்படும் (மாற் 4:40) இருதயம் கலங்கும் (யோ 14:1) பதற்றம் காணப்படும் (ஏசா 28:16) "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு" (1 தீமோ 6:12) "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2 தீமோ 4:7) 3 "பிரியமானவர்களே, பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டும்" (யூதா 1:3) ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார் (லூக்கா 18:8)
5) பந்தயத்தில் போராட வேண்டும் (1 கொரி 9:25)
உலகத்தில் 2 nd & 3 rd உண்டு. ஆனால் ஆவிக்குரிய உலகில் முதல் வருகையில் காணப்பட வேண்டும். "நெருங்கி நிற்கும் பாவங்களை விட்டு ஓட வேண்டும்" (எபி 12:1). "பாலியத்துக்குரிய இச்சைகளை விட்டு ஓட வேண்டும்" (2 தீமோ 2:12) "பொறுமையோடு ஓட வேண்டும்" (எபி 12:1) ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவன் சரீரத்தை ஒடுக்கி கீழ்படுத்துகிறான். "அவரையே நோக்கி ஓட வேண்டும்" (எபி 12:1) ஓட்டத்தின் முடிவில் இயேசுவை சந்திக்க வேண்டும். ஜீவன் தப்ப ஓட வேண்டிய காலம் இது.
6) உலக மனிதர்களால் வரும் போராட்டம் (ஆதி 32:28) (ஏசா 41:12)
நம்மை வளரவிடாமல், முன்னேற விடாமல் மனுஷர் போராடுவார்கள். "மனுஷரை எங்கள் தலையின் மேல் ஏறிப் போகப்பண்ணினீர்" (சங் 66:12) என்கிறான் தாவீது. பிசாசு மனுஷர் மூலம் நம்மை நஷ்டபடுத்த பார்ப்பான். மனுஷரை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்த போராட்டம் எல்லாருக்கும் உண்டு. யோசேப்புக்கு உடன் பிறந்த சகோதரர்களால் போராட்டம் வந்தது. "துஷ்ட மிருகங்களுடனே போராடினேன்" (1 கொரி 15:32, சங் 92:6) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகின்றார். துஷ்ட மிருகம் = மிருகத்தை போன்ற சுபாவம் உடைய மனிதர்கள். மனுஷரை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். "யாக்கோபு தேவனோடும், மனிதர்களோடும் போராடி மேற்கொண்டான்" (ஆதி 32:27-28). "உன்னோடே போராடினவர்களை தேடியும் காணாதிருப்பாய்" (ஏசா 41:12) என்பது வாக்குத்தத்தம்.
7) உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டம் (எபி 10:32)
உலகத்தாரை விட நமக்கு அதிகம் பாடுகள் வரலாம். கர்த்தருடைய பிள்ளைகள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அனுபவிக்கும் பாடுகளுக்கு கணக்கு கிடையாது. கோதுமையை சுளகினால் புடைக்கிறது போல ஆண்டவருடைய அன்பின் சீடர்களை சுளகினால் புடைக்கிறதுக்கு ஆண்டவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களை உபத்திரங்கள் என்ற சுளகினால் இன்று சத்துருவாகிய பிசாசு புடைத்துக் கொண்டிருக்கின்றான்.
8) ஜெபத்தில் போராட வேண்டும் (ரோ 15:32) (கொலோ 4:12) (ஓசியா 12:4)
போராடி ஜெபியுங்கள் ஊழியத்திற்கு. சர்வாயுத வர்க்கங்களை எடுத்து போராட வேண்டும் (எபேசு 6:10-16)
